ஆண் மயில் peacock

Spread the love

ஆண் மயில்…(peacock)❣️
Nikon Click ✌️
Place : Kanyakumari… (Thirupathi Temple On the Way)🙏

ஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும். ஆண்பாற் பெயர் Peacock ஆகும். பெண்பாற் பெயர் Peahen ஆகும்.
ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது…

மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்) Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும்.. மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்…

ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும். தோகையானது அண்ணளவாக உடலின் நீளத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும்….

Kannan Rohini

Leave a Reply