ஆசியக்குயில் Asian Koel

Spread the love

#ஆசியக்குயில்
Asian Koel

இது சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும். இது #காளகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. #கோகிலம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

* ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும். பெண் குயில் பழுப்பு நிற உடலும் அதில் வெண் புள்ளிகள் நிறைந்தும் இருக்கும்.
* தனியாகவோ இணையுடனோ மரங்கள் நிறைந்த தோட்டம், தோப்புகளில் இவற்றைக் காணலாம்.

* இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் scolopacea வகை தென்னிந்தியாவிலும் சிறிலங்காவிலும் காணப்படுகின்றன.
* குயில் ஒரு அடையுருவி (‘brood parasite’).

* இது மரத்தில் வாழும் பறவை — அதாவது தரையில் காணப்படாது.
* பழங்களும் சிறு கனிகளும் நிறைந்துள்ள தோட்டம், தோப்பு ஆகிய இடங்களே குயில்களின் வருகைக்குகந்தவை.

* பெண்களின்) இனிமையான குரல் வளத்திற்கு உவமையாக குயிலின் கூவலைக் கூறுதல் வழக்கத்தில் இருந்தாலும், உண்மையில் இனிமையான குவூ குவூ சத்தத்தை எழுப்புவது ஆண்குயிலே.

* தாழ்ந்த ஒலியுடன் இனிமையாகத் துவங்கும் குவூ கூப்பாடு படிப்படியாக சத்தம் அதிகரித்து, ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென நின்று விடும்; பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும்.

* ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் – கிக் – கிக் என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.

* உணவு பெரும்பாலும் பழங்கள், நெல்லி போன்ற சிறு கனிகள்; சமயங்களில் கம்பளிப்புழுக்களும் பூச்சிகளும்.

* மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.

சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். குயிலின் முட்டையினையும் சேர்த்து காகம் அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.

Leave a Reply