FEATUREDLatestNature

Orange-backed troupial

Spread the love

இன்றைய பார்வையில் நாம் காண்பது ” ஆரஞ்சு பேக்ட் ட்ரூபியல் ” ( Orange- backed troupial [Icterus croconotus] ).

Icteridae குடும்பத்தைச் சார்ந்த மேற்கு மற்றும் மத்திய தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த அழகுப் பறவைகள்.

உருவ அமைப்பு:

இந்தப் பறவைகள் , ஆரஞ்சு , கருப்பு மற்றும் வெள்ளை சிறகுகள் மூலம் எளிதாக அடையாளம் காணப்படுகின்றன. இப்பறவைகளின் முதுகு ஆரஞ்சு நிறத்திலும் , கழுத்து மற்றும் கீரீடத்தின் பின் புறமும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. கண்களை சுற்றி நீல தோல் இணைப்பு இருக்கிறது. கருப்பு நெற்றி, தொண்டை மற்றும் வால் உள்ளது . பறவையின் மேல் மார்பகம் கருப்பாகவும் , கீழ் மார்பகம் ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். கீழ் முதுகு மற்றும் வளைவு மிகவும் மங்கலான ஆரஞ்சு மஞ்சள் நிறமாக உள்ளது. அலகுகள் கருப்பு நிறத்திலும் , கண்கள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஆண் பெண் இருபாலரும் தோற்றத்தில் சுமார் ஒத்ததாக உள்ளது. இளம் பறவைகளும் பெரியவர்களுக்கு ஒத்ததாக இருக்கிறது இருந்தாலும் வெளிறிய வண்ணம் கொண்டவை. இளம் பறவைகளின் ஆரஞ்சு இறகுகள் பெரியவர்களை விட மெல்லியவை. இறகுகள் கருப்புக்கு பதிலாக பழுப்பு நிறமாகவும் , கண்கள் கருமையாக இருக்கும்.

Orange-backed troupial
Orange-backed troupial
வாழிடம்:

வாழ்வதற்கு இப்பறவைகள் திறந்தவெளி பகுதிகளுக்கு வெளிப்படையான ஆர்வத்தை காட்டுகின்றன . அதிக நேரங்களை மரங்களில் அல்லது ஆறுகள் மற்றும் ஏரிகளின் ஒரங்களுக்கு அருகில் செலவிடுகின்றன . ஆனால் பொதுவாக காடுகள் இல்லாத பகுதிகளில் காணப்படுவதில்லை. இதன் வாழ்விட பகுதிகள் வெப்பமண்டல நிலப்பரப்பு எனவும் , தென்கிழக்கு பெரு அமேசானின் வரம்பில் வடமேற்கில் உள்ள பிரேசில் தொடங்கி பொலிவியா , வடக்கு அர்ஜென்டினா மற்றும் தென்மேற்கு பிரேசிலில் உள்ள மாடோ க்ரோசோ மாநிலத்திலும் காணப்படுகின்றது.

Orange-backed-troupial-on-tree
Orange-backed-troupial-on-tree

பறவைகளின் இனச்சேர்க்கை பொதுவாக தனியாக அல்லது ஜோடிகளில் காணப்படுகிறது. உயர்ந்த மரங்களில் , எளிதில் அடையாளம் காணக்கூடிய டூயட் செய்கின்றன ஜோடிகள். டூயட் செய்யும் போது கிரீடம் இறகுகளை உயர்த்துவதன் மூலம் எளிதாக தன் இணையை கவர்ந்து கொள்கிறது.

இப்பறவைகள் பொதுவாக பருவகால இனப்பெருக்க முறையைக் கொண்டுள்ளன. இவற்றின் இனச்சேர்க்கை கூடுகட்டும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். இப்பறவைகளை ‘ கட்டாய கூடு கொள்ளையர்கள் ‘ எனவும் அழைக்கலாம். பிற உயிரினங் களால் கட்டப்பட்ட கூடுகளை ஆக்கிரமித்து பின்னர் தேவையான மாற்றங்களை செய்து தனது கூடாக மாற்றிய பின்னர் முட்டை இடுகின்றன. கிழக்கு ஈக்வடார் மற்றும் வடக்கு பொலிவியா வில், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடையில் கூடுகளை அமைக்கத் தொடங்குகின்றன.

இப்பறவைகள் மஞ்சள் – ரம்பட் கேசிக்ஸ் கட்டிய கூடுகளை விரும்புகின்றன. ஏனெனில் மஞ்சள் ரம்பட் கேசிக்ஸ் தன் இன விருத்தியை முடிக்கும் நேரத்தில் இதன் இனவிருத்தி ஆரம்பிக்கிறது. பிற பறவைகளின் வெற்றுக் கூடுகளை தேர்ந்தெடுத்து இனவிருத்தி செய்வது என்பது முழுக்க முழுக்க பறவைகளின் வேட்டையாடுபவர்களின் கண்களில் இருந்து தப்பிப்பதற்காக. இந்த நுட்பம் இப்பறவைகளின் பாதுகாப்பு தந்திர முறை என்றும் அறியப்படுகிறது.

இப்பறவைகளின் கூடுகளை தவிர இனப்பெருக்க நடத்தை நன்கு அறிந்து கொள்ள முடியவில்லை எனவும் , மூன்று முட்டைகளை இட்டு ,21-23 நாட்களில் குஞ்சுகளை பொரிக்கும் . இளம் பறவைகள் கூட்டை விட்டு வெளியேறிய பின்னர் பெற்றோருடன் பயணிக்கின்றன.

இப்பறவைகள் பருவ காலமாக இடம்பெயரவோ அல்லது இடங்களை மாற்றவோ அறியப்படவில்லை. ஆயுட்காலம் குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆரஞ்சு பேக்ட் ட்ரூபியலின் உணவு முதன்மையாக பழம் . பூக்களில் இருந்து அமிர்தம் மற்றும் தேன் . பூச்சிகள் இதனுடைய விலங்கு உணவுகளாக உள்ளது. தபேபியா பூவிலிருந்து வரும் அமிர்தத்தை மிகவும் விரும்புகின்றன.

( Zoological Name : Icterus croconotus )

ஆரஞ்ச் பேக்ட் ட்ரூபியல் பழங்களைத் தேடி , தேனீரை உட்கொள்வதால் , இப்பறவைகள் விதை பரவலுக்கும் மகரந்த சேர்க்கைக்கும் பங்களிக்கக் கூடும்.

Lakshmi Narayanan Subramania Bhattar

Leave a Reply