FEATUREDLatestNature

தேன் சிட்டு Fiery-throated hummingbird

Spread the love

இன்றைய பார்வையில் நாம் காண்பது ” உமிழும் தொண்டையான தேன் சிட்டு ” ( Fiery – throated hummingbird ). இது Panterpe பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றின பறவையாகும்.

இப்பறவைகளின் தொண்டையை நல்ல வெளிச்சத்தில் பார்க்கும் போது இதனுடைய அழகை வர்ணிக்க இயலாது. இப்பறவைகள் தொண்டையிலும் , மார்பகத்திலும் வானவில்லின் உள்ள ஒவ்வொரு நிறத்தையும் இணைத்துள்ளது. தலமன்கா மழைக்காடுகளை உடைய கோஸ்டாரிகா மற்றும் மேற்கு பனாமா நாடுகளுக்கு உரித்தான இந்தத் தேன் சிட்டுகள்.

இப்பறவைகள் சராசரி 11 செ.மீ நீளம் மற்றும் 5.7 கிராம் எடையும் கொண்டது . நேராக இருக்கும் அலகையும் , மங்கலான நிற கால்களைக் கொண்டிருக்கும்.

வயது வந்த பறவைகளில் பச்சை நிற உடலமைப்பு , அடர் நீல வால் மற்றும் ஒவ்வொரு கண்ணுக்கும் பின்னால் ஒரு வெள்ளை புள்ளி உள்ளது. நீல கிரீடம் , மஞ்சள் நுனி கொண்ட தாமிர ஆரஞ்சு தொண்டை மற்றும் நீல மார்பக இணைப்பு , அதன் பக்கங்களும் தலையின் பின்புறமும் வெல்வெட் கருப்பு.

இருபாலினரும் ஒரே மாதிரியாக காணப்படும். முதிர்ச்சியடையாத பறவைகளின் தலை இறகுகளுக்கு காவி ( ரூஃபஸ் ) நிற விளிம்புகள் உள்ளன.

தேன் சிட்டு Fiery-throated hummingbird
தேன் சிட்டு Fiery-throated hummingbird

ஹம்மிங் பறவைகள் தங்கள் இறக்கைகள் அடிப்பதன் மூலம் ஒலிக்கும் சத்தத்திற்கு பெயரிடப்பட்டுள்ளன. இதனுடைய இறக்கைகள் வினாடிக்கு 100 முறை துடிக்கின்றன. வெறும் கண்களால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வேகமாக நகருகின்றன. முன்னோக்கி , பின்னோக்கி மற்றும் பக்கவாட்டிலும் பறக்க இயலும் இப்பறவைகளால்.

ஹம்மிங் பறவைகள் இனப்பெருக்கம் தவிர வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தனிமையாக இருக்கின்றன. இனப்பெருக்க செயல்பாட்டில் ஆணின் ஒரே ஈடுபாடு பெண்ணுடன் உண்மையான இனச்சேர்க்கை ஆகும். ஒரு ஆண் பல பெண்களுடன் துணையாக இருக்கலாம். பெண்ணும் பல ஆண்களுடன் துணையாக இருக்கின்றது. கூடுகள் சார்ந்த எந்த வேலையிலும் மற்றும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் ஆண் பறவைகள் பங்கேற்காது.

தேன் சிட்டு Fiery-throated hummingbird
தேன் சிட்டு Fiery-throated hummingbird

இப் பறவைகளின் கூடுகள் பொதுவாக குறைந்த மெல்லிய கிடைமட்ட கிளையில் , மென்மையான தாவர இழைகள் , விலங்குகளின் உரோமங்கள் மற்றும் பறவைகளின் இறகுகளைக் கொண்டு பருமனான கப் வடிவ கூட்டைக் கட்டி , பாதுகாக்கப்பட்ட இடத்தில் உருமறைப்புக் காக வெளியில் பச்சை பாசியையும் கட்டி எழுப்புவது பெண் பறவைகள். சிலந்தி வலையமைப்பு மற்றும் பிற ஒட்டும் பொருட்களால் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன.

இப்பறவைகள் கூட்டில் , வெள்ளை நிறத்திலும் , காபி பீன் அளவுள்ள 2 முட்டைகளை இடும். சுமார் 15 முதல் 19 நாட்கள் அடைகாத்து பெண் பறவைகள் குஞ்சு பொரிக்கும் . இந்நேரத்தில் ஆண் பறவைகள் தனது பிரதேசத்தையும் மற்றும் அவைகள் உண்ணும் பூக்களையும் பாதுகாக்கும். வளர்ந்து வரும் பறவைகளுக்கு தேனில் , புரதத்தின் போதுமான ஆதாரம் இல்லாததால் , இளம் குஞ்சுகளுக்கு பெரும்பாலும் பூச்சிகள்தான் உணவு. குஞ்சுகளும் பெற்றோர்களால் இரண்டு வாரங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. சுமார் 12 நாட்களுக்குப் பின்னர் , குளிர்ந்த இரவில் கூட இளம் பறவைகள் தனியாக இருக்கின்றது. இது அநேகமாக கூடு அளவு காரணமாக கூட இருக்கலாம். இளம் பறவைகள் சுமார் 20 – 26 நாட்கள் இருக்கும்போது கூட்டை விட்டு வெளியேறுகின்றன.

இப்பறவைகள் தன் உணவாக , முதன்மையாக பலவிதமான பிரகாசமான வண்ணம் , நறுமணமுள்ள சிறிய மரங்கள் , மூலிகைகள் மற்றும் புதர்கள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தம் இதனுடைய பிரதான தேர்வு.

பெரும்பாலும் சிவப்பு நிற மற்றும் குழாய் வடிவிலானவை கொண்ட பூக்களையும் , அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட மலரையும் விரும்புகின்றன. இப்பறவைகள் நீண்ட , நீட்டிக்கக் கூடிய வைக்கோல் போன்ற நாக்குகளைப் பயன்படுத்தி தேனீரை மீட்டெடுக்கும். அதேசமயம் தங்களின் வால் மேல்நோக்கி வட்டமிடுகையில் அவை அமிர்தத்தை வினாடிக்கு 13 முறை நக்குகின்றன. சில நேரங்களில் உணவைத் தேடும் போது பூவில் தொங்குவதைக் காணலாம்.

fiery-throated humming bird

பல பூர்வீக மற்றும் பயிரிடப்பட்ட தாவரங்கள் இந்தப் பறவைகளை தங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக குழாய் வடிவிலான பூக்களை உடைய தாவரம்.

மேலும் சிறிய சிலந்திகள் மற்றும் பூச்சிகளையும் எடுத்துக் கொள்கின்றன. குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் தேவைப்படும் புரதத்தின் முக்கிய ஆதாரங்கள் அவற்றின் குஞ்சுகளை சரியான வளர்ச்சியை உறுதிசெய்ய பூச்சிகள் தான் பிரதானம். ஒரு கூடு கட்டும் பெண் ஒரு நாளைக்கு 2000 பூச்சிகளைப் பிடிக்க முடியும்.

ஆண் பறவைகள் கடுமையாக பிராந்தியமாக உள்ளது. ஆண்களுக்கு இடையிலான வான்வழி மோதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது பார்க்கும் பார்வையாளர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காக அமையும். மேலும் ஆண் பறவைகள் , பிற ஹம்மிங் பறவைகளுக்கு எதிராகவும் தங்கள் உணவு பிரதேசங்களில் உள்ள பூக்கள் மற்றும் ஸ்க்ரப் களையும் பாதுகாக்கின்றன.

Zoological Name : Panterpe insignis

இந்தத் தேன் ஊட்டி பறவைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இடை நிறுத்தப்படும் போது மட்டுமே வண்ணத்தின் முழு நிறமாலை காணப்படுகிறது என்பதே ஆகும். இவை பொதுவாக 1400 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் உள்ள மேகக் காடுகளில் காணப்படுகின்றன.

Lakshmi Narayanan Subramania Bhattar

Leave a Reply