FEATUREDNature

மருத்துவ குணம் வாய்ந்த காளான் ஆரிகுலேரியா

Spread the love
மருத்துவ குணம் வாய்ந்த காளான் ஆரிகுலேரியா

இன்றைய கற்பித்தலில் நாம் காண்பது ‘ மருத்துவ குணம் வாய்ந்த காளான் ” ஆரிகுலேரியா ”

இனி இந்த காளானை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இனி காண்போம்..

ஆரிகுலேரியா என்பது உண்ணக்கூடிய ‘ ( Edible fungus ) ஆரிகுலாரியேல்ஸ் ‘ ( Order ) பூஞ்சை ஆகும். இது உலகளவில் காணப்படுகின்ற மருத்துவ குணமுள்ள பூஞ்சை என்றும் அறியப்படுகிறது.

இது மரத்தின் மேல் வளர்கின்ற பூஞ்சை . இவ்வினத்தை முதன்முதலாக அறிவியல் இலக்கியத்தில் ‘ Tremella auricula ‘ மூலம் வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் அவரது 1753 வது இனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் இதன் பரவல் இருந்தாலும் , இந்தியாவை பொருத்தமட்டில் ‘மேற்கு தொடர்ச்சி மலையில் அரை பசுமையான முதல் பசுமையான மற்றும் ஈரப்பதமான காடுகள் இதன் வாழ்விடம் என அறியப்படுகிறது.

ஆரிகுலேரியா காளான் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது, ஆனாலும் இலையுதிர் காலங்கள் மிகவும் பொதுவானது. இது உலகளவில் மிதமான மற்றும் துணை வெப்பமண்டலம் முழுவதும் பரவலாக உள்ளது. இந்தப் பூஞ்சையானது பெரிய மரங்கள் மற்றும் பட்டுப்போன மரங்களிலும் வளர்கின்றன. இந்த இனமானது கொத்தாக , பெரிய கூரை மீது இருக்கும் ஓடுகள் போன்று ஒன்றன் மீது ஒன்றாக அமைந்திருக்கும். ஒவ்வொரு ஓடுகள் ( இந்த இனத்தில் பழ உடல்கள் ) அடிப்பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்தில் பல லட்ச விதைகள் (ஸபோர்ஸ் ) தன் இன விருத்திக்காக விதைகளைப் பரப்பி தன் இனத்தை செழிக்க செய்கின்றன .

ஆரிகுலேரியா பல மூலிகை மருத்துவர்களால் தொண்டைப் பகுதியில் உள்ள புண் , கண்களின் அழற்சியை குணப்படுத்தவும் மற்றும் உடலின் வெப்பத்தை தணிப்பதின் மூலமாக சளி மற்றும் காய்ச்சலை க் கையாள்வதற்கு இந்த இனத்தின் மருத்துவ குணமுள்ள ‘ சூப் ‘ பயன்படுத்தினர் என்ற குறிப்பு உள்ளது. ஆனால் இந்த இனங்கள் பச்சையாக இருக்கும் போது உண்ண முடியாது. முழு பழ உடலையும் சமைப்பதற்கு முன்பு நன்கு கழுவிய பின் நன்கு வேக வைத்த பின் தான் சாப்பிட வேண்டும். சமையல் சில நேரங்களில் ஒப்பீட்டளவில் நீண்ட நேரம் ஆகலாம். புதிய காளான்கள் 90% ஈரப்பதத்தைக் கொண்டுள்ளன. உலர்ந்த காளான்களை , சிறு சிறு தூளாக மாற்றப்பட்டு சூப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரிகுலேரியா மிகுந்த ஊட்டச்சத்து கலவை என அறியப்பட்டுள்ளது. இதில் கொழுப்பு, புரதம் மற்றும் தாதுக்களும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 100 கிராம் காளானில் 284 கிலோ கலோரி சக்தி உள்ளதாக அறிந்துள்ளனர்.

Botanical Name: Auricularia auricula – judae

இந்த மருத்துவ குணமுள்ள காளானை “காது பூஞ்சை ” ,” சீன பூஞ்சை ” , ” பன்றியின் காது “, ” மரம் காது ” மற்றும் ” பூஞ்சை சம்புகா ” என்றெல்லாம் அழைக்கப்பட்டன .

ஆனாலும் நாம் பார்க்கும் இந்தக் காளான் பார்ப்பதற்கு ஜெல்லியை நினைவு படுத்துவதாக இருப்பதினால் ” ஜெல்லி காது ” என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.. மேலும் பார்ப்பதற்கு பளபளப்பான தோற்றத்தில் இருப்பதினால் இதனை
” Radiant Tree Mushroom ” என்றழைத்தாலும் பொருத்தமாகத்தான் இருக்கும்.

Lakshmi Narayanan Subramania Bhattar 

Leave a Reply