FEATUREDLatestசிறார் கதை

நன்னெறி இல்லாத குள்ளநரி

Spread the love
நன்னெறி இல்லாத குள்ளநரி

வணக்கம்
ஆண்டாண்டு காலமாக இன்றும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கதைகளை ஒன்றாக தொகுத்து எழுதி உள்ளேன்✍️ இது எப்படி இருக்கு படியுங்கள் விமர்சனம் சொல்லுங்க நன்றி
____________________________________________________
நன்னெறி இல்லாத குள்ளநரி

ஒரு நரி காடு இருந்துச்சு…. அதை ஏன் நரி காடு சொல்றோம்?
அந்த காட்டுல எல்லா மிருகங்களும் இருக்கும் ஆனா நரிகள் தான் அதிகம், அதனால நரி காடுன்னு சொல்றோம்.

நரி இனத்தில் குள்ளநரி சிலதும் இருந்துச்சு, அதுகளுக்கு வேட்டையாடி சாப்பிட பிடிக்காது ஏன்ன அதுகள் சோம்பேறி.

அதுகளுக்கு பசிக்கும் அல்லவா.. அதனால மற்றவர்களை ஏமாற்றி சாப்புட்டு வாழ்வதுதான் பழக்கம்.

அதுலயும் ஒரு குள்ளநரி ரொம்ப சோம்பேறி.

அது ஒரு நாள் பக்கத்து காட்டுல என்ன இருக்குது அதை சாப்பிடலாம் ன்னு பக்கத்து காட்டுக்கு போச்சு, அது திராட்சைத் தோட்டம், அங்கே நிறைய திராட்சைப்பழம் பழுத்து கொடியிலே தொங்கிட்டு இருந்துச்சு,

இதைப் பார்த்த குள்ள நரிக்கு சாப்பிடலாம் என்று ஆசை வந்துச்சு,

ஆனா திராட்சைப்பழம் மேலே இருக்குதே எப்படி சாப்பிடுவது.?
குள்ளநரி குதிச்சு குதிச்சு புடுங்க பார்த்துச்சு கிடைக்கவே மாட்டேங்குது.

குள்ளநரி அல்லவா சும்மா விடுமா….!

தோட்டக்காரர் திராட்சைப்பழம் பறிக்க உயரமான நாற்காலி வைத்திருந்தார்
அதுமேல ஏரி திராட்சைப்பழம் புடுங்க முயற்சி செய்தது அப்பவும் திராட்சைப்பழம் எட்ட மாட்டேங்குது.

குதித்து குதித்து பார்த்துட்டே இருந்துச்சு அப்போது தோட்டக்காரர் வந்துட்டார் தடியை எடுத்து குள்ள நரியை அடிக்க துரத்திகிட்டு வந்தாரு.

த்து.. எனக்கு கிடைக்கவே மாட்டேங்குது..த்து..த்து‌‌.. இது நல்ல பழம் இல்லை புளிப்பா இருக்கும்,

இப்படி சத்தம் போட்டுட்டே திராட்சைத் தோட்டத்தை விட்டுட்டு வேகமா தோட்டத்துக்கு வெளியே ஓடுது குள்ளநரி.

அப்போது குள்ளநரி காட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற நாட்டுக்கு போயிருச்சு.

நன்னெறி இல்லாத குள்ளநரி
நன்னெறி இல்லாத குள்ளநரி

பாதையெல்லாம் ஈரம் ..ரெண்டு நாளா காட்டுல நாட்டுல நல்ல மழை பெய்து இருந்தது.

அங்க பார்த்தா.. ஒரு பாட்டி வடை சூடா வடை மாவு ஒரு அடுப்பு கொஞ்சம் விறகு  எடுத்து வச்சாங்க.

வட போடுற பாட்டி உட்கார்ந்திருக்கும் பக்கத்துல ஒரு வேப்பமரம் இருக்கு, மரத்திலே காக்கா ஒன்று கூடுகட்டி முட்டை வைத்து காக்கா குஞ்சுகள் மகிழ்ச்சியா வாழ்ந்துகிட்டு இருந்துச்சு.

ரெண்டு நாளா மழை அதனால குஞ்சுகளை விட்டுட்டு காக்கா எங்கேயும் இரை  தேட போகவில்லை,…. ஆனா பசிக்குது  என்ன பண்றது ?

பாட்டி!  பாட்டி!  எனக்கு ஒரு வட கொடுங்க நான் என் குஞ்சுகளுக்கு கொடுக்கணும் கொடுங்க பாட்டி” என்று காக்கா கேட்டுச்சு,

காக்காவை பார்த்துட்டு பாட்டி சொன்னது “காசு கொடு நான் வடை தரேன்”. அப்படின்னு கடுமையா சொல்லிடுச்சு பாட்டி.

காக்கா சொல்லுச்சு “காசு என்று சொன்னா எனக்கு என்னனு தெரியாது என்கிட்ட இல்ல பாட்டி.
பசிக்கு வடை சாப்பிட்டா சரியா போகுமுன்னு தெரியும் பாட்டி.. நீங்க கொடுங்க“.

இத பாரு… நான் எதையும் காசு இல்லாம தரமாட்டேன். அடுப்பு வேற எரிய மாட்டேங்குது..த்து..
புலம்பிக்கொண்டு இருந்துச்சு பாட்டி.

விறகு கட்டைகள் ஈரமாக இருப்பதால் பாட்டிக்கு தீ மூட்டுவதில் சிரமமாக இருந்தது, இதைப் பார்த்துக்கொண்டிருந்த காக்கைக்கு ஒரு ஆலோசனை வந்தது, வேகமாக மரத்திலிருந்து பறந்து போயிடுச்சு, கொஞ்ச நேரத்தில்……

இந்தாங்க பாட்டி இந்த சுள்ளி குச்சிகள் இதை வைத்து தீயை மூட்டுக்கள்“, என்று சொல்லிவிட்டு நன்றாக காய்ந்த மரக் குச்சிகளை பாட்டிக்கு தந்துச்சு காக்கா.

அடுப்பில் தீ மூட்டி வடை சுட ஆரம்பிச்சிட்டாங்க பாட்டி, இதையெல்லாம் சிறிது தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது குள்ளநரி.

இப்போது மீண்டும் காக்கா வந்து பாட்டியிடம் கேட்டது “இப்போது எனக்கு வடை கொடு” என்று, பாட்டி சொன்னது “காசு கொண்டு வா” என்று.

சரி… முதலில் நீங்கள் எனக்கு காய்ந்த மரக் கட்டைக்கு காசு கொடுங்க” என்று,  “பறந்து போய் உழைத்த உழைப்பு அதற்கு கூலியாக வடை கொடுங்கள்” என்றது காக்கா. சற்று நேரம் யோசித்து விட்டு சொன்னது பாட்டி,

காக்கா நீ சொன்னது சரிதான் உழைத்த உழைப்புக்கு நீ எவ்வளவு வடை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்” என்று  சொல்லுச்சு பாட்டி.

காக்கா மகிழ்ச்சியாக சொல்லுச்சு
எனக்கு ஒரு வடை போதும் அதை நான் எடுக்க மாட்டேன் நீங்களே கொடுங்கள், என்று. சொல்லிவிட்டு பாட்டி கொடுத்த வடையை வாங்கிட்டு குஞ்சுகளுக்கு கொடுக்க மரத்துக்கு போயிருச்சு காக்கா.

நடப்பது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரிக்கு வடை சாப்பிட ஆசை வந்துருச்சு, என்ன செய்வது அது சோம்பேறி, வேலை செய்யவும் தெரியாது, ஆனால் சாப்பிட வேண்டுமே..?

குள்ளநரி யோசிக்க ஆரம்பிச்சுது.. குள்ளநரி, நேரா காக்கா இருக்கிற மரத்துக்கு போய் காக்கா விடம் குள்ளநரி சொல்லுச்சு

“காக்கா காக்கா நீ அழகாய் இருக்கிறாய் அழகா பாட்டு பாடு வியா..?”

வடையை காலில் புடிச்சிட்டு, இன்னும் எத்தனை காலம்தான் எங்களை ஏமாற்றுவீர்கள் இன்னும் எத்தனை காலம்தான்… என்று வடையை காலில் பிடிச்சுக்கிட்டு சத்தம்போட்டு பாட்டு பாடுச்சு காக்கா.

பாட்டு அழகா இருக்கு உன்னால மயில் மாதிரி நடனம் ஆட முடியுமா.. கேட்டுச்சு குள்ளநரி

ஆடி காட்டறேன் பாரு.. குள்ளநரி தந்திரம் புரியாம நடனம் ஆடுச்சு காக்கா,
காலில் பிடித்திருந்த வடை கீழே விழுந்துருச்சு….. உடனே
வடையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிருச்சு, சோம்பேறி குள்ளநரி.

அச்சச்சோ நான் ஏமாந்து போயிட்டேனே.,என, பயந்து கவலைப்பட்டுட்டு  இருக்காமே குள்ள நரியை தொடர்ந்து திருடன்.. திருடன்.. திருடன்… கத்திக்கொண்டே குள்ளநரியை துரத்துச்சு காக்கா.

காக்கா சத்தம் கேட்டதும் நிறைய காக்காகள் ஒன்று சேர்ந்துச்சு குள்ளநரியை துரத்திப் பிடிக்க துரத்தியது, குள்ளநரி காக்காய்களிடம் பிடிபட்டது குள்ளநரி

காக்காய்கள் ஒன்று சேர்ந்ததை பார்த்த குள்ளநரி பயந்து வடையை கீழே போட்டுவிட்டு ஓடியே போச்சு

வடையை எடுத்துட்டு தனக்கு உதவிய தோழர்களை பார்த்து நன்றி சொல்லிவிட்டு காக்கா குஞ்சுக்கு உணவு கொடுக்க பறந்து போயிடுச்சு காக்கா வேப்ப மரத்துக்கு.

நரி பயந்து ஓடியதால் திசை தெரியவில்லை, கொஞ்ச தூரம் போனது… ஒரு நாட்டில் கோயிலுக்குள் புகுந்துருச்சு குள்ளநரி,
அங்கே கோயிலுக்கு சாயம் அடிக்கிற மனிதர்கள்.

சாமியின் கருவறைக்குள் சாமி சிலைக்கு முன்னாலே நிறைய பழங்கள் வச்சுருந்தாங்க.

அதில் திராட்சையும் இருந்தது, இதைப் பார்த்த குள்ள நரிக்கு வாயில் எச்சில் ஊறியது, காட்டில் குதித்து குதித்து திராட்சை புடுங்கி திண்ண ஆசைப்பட்ட குள்ளநரி திராட்சையை கைக்கெட்டும் தூரத்தில் பார்த்தால் சும்மாவா விடும்,

மெதுவா மெதுவா பதுங்கிப் பதுங்கி சாமி சிலை கிட்ட போச்சு குள்ளநரி.

ஐயோ.. கோயிலுக்குள்ளே குள்ளநரி இருக்குது குள்ளநரி இருக்குது எல்லோரும் ஓடி வாங்க வாங்க வாங்க.. சத்தம் போட்டாங்க தூய்மைப் வேலை செய்யும் அம்மா ஒருவர்.

எங்கே.. எங்கே… குள்ளநரி எங்கே.. என கேட்டுக்கிட்டு கையில் தடியோடு ஓடி வந்தாங்க கோயில் சுற்றுக்கு சாயம் அடிக்கிறவங்க. இதைப் பார்த்த குள்ளநரி மீண்டும் பயந்து ஓடியது திசை தெரியாமல்.

கோயிலுக்கு வெளியே சாயம் அடிக்கிறவங்க இரண்டு அண்டாக்களில் காவி, சுண்ணாம்பு வச்சுருந்தாங்க, வேகமாக ஓடிய குள்ளநரி ஒரு அண்டாவில் தவறி விழுந்துருச்சு.. இதைப் பார்த்த அந்த அம்மா கையில் சீவக் கட்டையோடு ஓடி வந்தாங்க, அண்டக் உள்ளிருந்து எம்பி குதித்து வெளியே வந்து ஓடிருச்சு குள்ளநரி.

நரி காடு விட்டுட்டு வெளியே வந்து எதுவுமே கிடைக்கல…. மறுபடியும் பழைய காட்டுக்கே போயிரலாம் என்று மீண்டும் பழைய காட்டுக்குள்ளேயே திரும்பிப் போயிருச்சு குள்ளநரி, அங்கே..

குள்ளநரியை பார்த்தவுடன் ஒவ்வொரு விலங்குகளும் பயந்து ஓடியது.

இதைப் பார்த்தவுடன் குள்ள நரிக்கு குழப்பமாக இருந்துச்சு, ஏன் இவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து பயந்து நடுங்குகிறாங்க..! நான் என்னவாக மாறிப்போயிட்டேன்.?

குழப்பத்தில் தன் காலை பார்த்ததும் குள்ளநரியும் பயந்து போய்விட்டது, ஏன்னா கோயிலில் அண்டாவில் விழுந்தது அல்லவா அந்த அண்டாவில் காவி சாயம் இருந்திருக்கிறது அதனால் குள்ளநரியும் காவி நிறத்தில் மாறி போயிருச்சு.

அதைப் பார்த்தால் ஏதோ ஒரு புதிய மிருகம் காட்டுக்குள் வந்துவிட்டதாக நெனச்சு எல்லா விலங்குகளும் பயந்து ஓடுது.

சிங்கமும் பயந்து நின்றுகொண்டிருந்தது, அப்போது குள்ள நரி சொன்னது

நான் ஒரு சாதாரண காட்டு விலங்கு அல்ல காட்டை ஆள்வதற்கு கடவுளால் அனுப்பி வைத்த ராஜா.. என்று கத்தியது குள்ளநரி

இதைக் கேட்டவுடன் எல்லா விலகுங்களும் பறவைகளும் பயந்து நடுங்கியது, அப்போது,
நான்தான் இனி இந்த காட்டுக்கு ராஜா நான் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்று உரத்த குரலில் கத்திக்கொண்டே சிங்கக் குகைக்கு போயிருச்சு காவி சாயம் பூசிய குள்ளநரி.

கடவுள் என்றவுடன் எல்லா உயிரினங்களும் அமைதியாக இருந்தது, அப்போது குள்ளநரிகள் எல்லாம் இங்கே வாருங்கள் என்று சத்தம் போட்டு கூப்பிட்டது ராஜா குள்ளநரி, எல்லா குள்ளநரிகளும் போகவில்லை, 2,3 குள்ளநரிகள் மட்டும் குகைக்கு போனது.

அன்றிலிருந்து குள்ளநரிகளிடமிருந்து புதிய புதிய உத்தரவுகள் வந்து கொண்டே இருந்துச்சு.

இனி குள்ளநரி வேட்டையாடுவதற்காக வெளியே வராது

அதற்குத் தேவையான விருப்பமான உணவுகள் எதை சாப்பீடு விரும்புகிறதோ அதை அந்த வந்து தர வேண்டும், என்று எல்லா விலங்குகளுக்கும் ஆணை போட்டது குள்ளநரி.

வேட்டையாட வெளியே வராமல் தனக்கு விருப்பப்பட்ட எல்லாத்தையும் அது இருந்த இடத்திலேயே வாங்கி தின்று சொகுசாக வந்து கொண்டிருந்தது காவி சாயத்தில் மூழ்கி நிறம் மாறிப்போன சோம்பேறி குள்ள நரி.

அப்போது ஒருநாள் வானம் முழுவதும் மழை மேகம் நிறைந்து இருந்துச்சு அதைக் கண்டு மகிழ்ந்த மயில்கள் தோகை விரித்து நடனம் ஆடியது. இதை குகையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குள்ள நரிக்கு நடனம் ஆட வேண்டும் என்ற ஆசை வந்துருச்சு, குகையிலிருந்து வெளியே வந்துச்சு..

குள்ளநரி மீது மழைத்துளிகள் படப்பட காவி சாயம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்க்கிட்டு இருந்துச்சு. அது தெரியாமல் குள்ளநரி பாடி ஆடிக்கொண்டே இருந்துச்சு சிறிது நேரத்தில் குள்ளநரி பழைய கருப்பு நிறத்திற்கு மாறிப்போச்சு..

இதைப்பார்த்த காக்காய் முதலில் சத்தமாக கரைந்தது அதைக்கேட்ட எல்லா விலங்குகளும் குகைக்கு முன்னால் கூடி விட்டது.

தன்னுடைய வேஷம் கலைஞ்சு போச்சுன்னு தெரிஞ்சும் மீண்டும் குகைக்குள் ஓடிப் போகப் பார்த்துச்சு குள்ளநரி, ஆனால்

ஒரு சிறு நரி கூட்டம் குள்ளநரி மீண்டும் குகைக்குள் போகாமல் பாய்ந்து தடுத்துருச்சு.

அடுத்தடுத்து எல்லாம் விலங்குகளும் ஒன்று சேர்ந்து இத்தனை நாள் தங்களை கடவுள் என்று பொய் சொல்லி முட்டாளாக்கி காட்டை ஆண்டுவந்த சோம்பேறி குள்ள நரியை காட்டைவிட்டு வெகுதூரம் துரத்தி அடித்தது.

நன்னெறி இல்லாத குள்ளநரி
நன்னெறி இல்லாத குள்ளநரி

குள்ளநரி எங்கே போவது எப்படி வாழ்வது திசை தெரியாமல் ஓய்ந்து போய் நடந்து கொண்டே போனது, தான் செய்த தவறுகளையெல்லாம் எண்ணிக்கொண்டே போனது
நன்னெறி இல்லாத குள்ளநரி.

பாட்டி வடை பகுதிக்கு உதவிய  தமிழ் இலக்கிய பேச்சாளர் தமிழழகி பர்வீன் சுல்தானா அவர்களுக்கு நன்றி.
smsகவிsas

Leave a Reply