எழுத்தாணிக்குருவி – கொண்டலாத்தி – EURASIAN HOOPOE

Spread the love

இவர் தான் எழுத்தாணிக்குருவிங்க. கொண்டலாத்திங்கிற பெயர் தான் பரவலா மக்கள் மத்தில இருக்கு. ஆனா இவருக்கு பல பெயர்கள் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்குதுங்க.

வயல்வெளிகளின் ஓரங்களிலும், புதர்களுக்கு அருகிலும் இவர பார்க்க முடியும். மண்ணைக் கிளறியபடி புழு, பூச்சிகளை பிடித்து சாப்டுவாப்ள. அதேபோல வெட்டுக்கிளி, வண்டுகள், தவளைகள், சிறுவிதைகள், பழங்கள், சிறு ஊர்வன னு இவரோட உணவு வரிசை ஏராளம்.இவரோட தனித்துவமே உடலமைப்பு தான்ங்க. கவர்ச்சியான தலை ல விசிறி மாதிரி அமைப்புல சுருங்க கூடிய கொண்டை இருக்கும்ங்க. அதுபோக முதுகு, இறக்கை மற்றும் வாலில் கருப்பு வெள்ளை வரிகள் இருக்கும்ங்க.

இரண்டு அல்லது நான்கைந்து னு குழுவா சேர்ந்து தான் இருப்பாப்ள. இவரு பயப்படும் போதும் கோவப்படும் போதும் கொண்டை சிறகு விசிறி மாதிரி விரியும்‌. பார்க்க ரொம்பவே அருமையா இருக்கும்.

அதேபோல இவர் மற்ற பறவைகள் மாதிரி பறக்காது. பட்டாம்பூச்சி போல படபட னு அடிச்சுட்டு பறக்குறத பார்க்குறதே தனி அழகு தான். விளைநிலங்கள் உள்ள பகுதில கண்டிப்பா இவர் இருப்பாப்ள. ஏன்னா உணவே விளைநிலங்கள் உள்ள புழு பூச்சிகள சாப்டுறது தான்.

நகர்ப்புறங்களில் இவரை பார்க்க முடியாது. பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கோவில்களுக்கு செல்லும் போது இவரை நிறைய இடங்கள்ள பார்த்துருக்கேன். இங்க நம்ம பார்க்குறது பட்டடக்கல், அய்கொளே னு சாளுக்கிய தேசத்திலும் கஜுராஹோலையும் அதுபோக ஆவடி பக்கமும் இருந்த நண்பர்களை தான்.

இவருக்கு பின்வரும் வழக்கு பெயர்கள் தமிழில் உண்டுங்க.

கொண்டலாத்தி – சாவல்குருவி – கொண்டை உலர்த்தி – எழுத்தாணிக்குருவி – உப்பொபான் – கொண்டைக்கிளாரன் – விசிறிக்கொண்டைக் குருவி – கொண்டை வளர்த்தி – புழுக்கொத்தி – கொண்டஞ்சிலாடி | பட்டடக்கல் – அய்கொளே – கஜுராஹோ – சேக்காடு | கர்நாடகம் – மத்திய பிரதேசம் – தமிழ்நாடு

EURASIAN HOOPOE – UPUPA EPOPS | PATTADAKAL – AIHOLE – KHAJURAHO – AVADI | KARNATAKA – MADHYA PRADESH – TAMILNADU

Saravana Manian P.A

Leave a Reply