தாவர வகைப்பாட்டியலில் மகரந்தங்கள்

Spread the love

தாவர வகைப்பாட்டியலில் மகரந்தங்கள்…

Plant taxonomy on the basis of pollengrains.

எங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதியின் தாவரங்களின் மகரந்தங்களை நுண்ணோக்கி மூலம் பதிவதில் தொடர்ந்து எனது மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதில் பல தாவரங்களின் மகரந்தங்களின் வடிவங்கள் ஒரே வகையினதாக உள்ளதை உற்று கவனித்து வருகிறோம்.

இதில் கடந்த ஒரு மாதத்தில் பதிந்த

1. கொய்யா (Psidium guajava)
2.யூகலிப்டஸ் (Eucalyptus globulus)
3.நாவல் மரம் (Syzygium cumini)
4.நரிநாவல் அல்லது சிறுநாவல் (Syzygium caryophyllatum)

தாவரங்களின் மகரந்தங்கள் ஒரே வடிவமான சிறிய முக்கோண வடிவத்தைப் பெற்றிருந்தது.

இதன் குடும்ப வகைப்பாடு

Family: Myrtaceae.

என்னும் ஒரே வகையினதாகும்.

எனவே தாவர வகைப்படுத்துதலில் மகரந்தங்களின் வடிவ ஒற்றுமை முக்கியப்பங்காற்றுகிறது.

இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட தாவரங்களின் மகரந்தங்களை அட்டவணைப்படுத்தியுள்ளோமீ. இதில் நூறு தாவரங்களைக்கொண்ட முதல் தொகுதியை இலவச மின்னூலாக வெளியிட்டுள்ளோம்.

நமது குழுவில் யாருக்கேனும் வேண்டுமென்றால் மின்னஞ்சல் முகவரி தருக. அனுப்புகிறேன்.

நன்றி!

Leave a Reply