EntertainmentFEATUREDLatest

TENET ஒரு விளக்கம்

Spread the love

TENET ஒரு விளக்கம்

ரா பிரபு

‘நோலன் படம் என்றாலே ‘மண்டை பத்திரம் ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டுதான் படம் பார்க்க தோன்றும். அப்படி மீண்டும் ஒரு மண்டை குழப்பி படம் தான் TENET .

நோலன் படங்கள் மண்டையை குழப்ப காரணம் அவர் சாதாரணமாக பிசிக்சை பயன்படுத்துவது அல்ல மாறாக எதார்த்தத்தில் நாம் காணாத பிசிக்சை பயன்படுத்துவது தான்.

TENET புரிந்து கொள்ள நீங்கள் சில அறிவியல் கான்செப்ட்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே முதலில் அறிவியல்….

“Entropy ” இந்த வார்த்தையை நீங்கள் பிஸிக்ஸ் இல்..தெர்மோ டைனமிக்ஸ் இல் கேள்வி பட்டு இருப்பீர்கள். அப்படி என்றால் என்ன ?

காலையில் தேநீர் கோப்பை கையில் எடுக்கும் தருணம் அதை தவறுதலாக போட்டு உடைத்து விட்டீர்கள். இப்போ என்ன ஆகும் ?
சிம்பிள் ஒரு ஒழுங்காக இருந்த கோப்பை இப்போ ஒழுங்கற்ற சில்லுகளாக உடைந்து விடும். சரி தானே ?
ஆனால் அந்த சில்லுகள் மீண்டும் ஒன்று சேர்ந்து கோப்பை ஆகுமா..? அது எப்படி சார் முடியும் ?

முடியாது அல்லவா.. இதே போல அடுக்கி வைக்க பட்ட பந்துகள் கலைத்து விடுங்கள்.. இப்போ ஒழுங்கில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு நீங்கள் பந்துகளை தள்ளி இருக்கிறீர்கள். அதன் இப்போதைய ஒவ்வொரு பந்தின் நிலை நீங்கள் தனிதனியாக முடிவு பண்ணது இல்ல ஆனால் நீங்கள் செய்த செயல் தான் அதன் இப்போதைய நிலைக்கு காரணம். இப்போ அந்த கலைந்த நிலையில் உள்ள பந்துகள் மீண்டும் தானாக அடுக்க பட நீங்கள் ஒன்னும் செய்வதற்கு அல்ல.

இந்த பந்து மற்றும் கோப்பை மட்டும் அல்ல மொத்த பிரபஞ்சமும் ஒழுங்கில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு தான் சென்று கொண்டு இருக்கின்றன. பிக் பாங் இல் மொத்த பிரபஞ்சமும் அடக்கி அடுக்கி வைக்க பட்டு இருந்தது.. இப்போ வெடித்த பட்டாசு வானில் பரவுவதை போல பரவி கொண்டு இருக்கிறது.. சிதறும் கண்ணாடி சில்லை அது சிதறும் வினாடிகளுக்கு நாம் வீடியோ பண்ணி பார்ப்பது போல இப்போ சிதறும் பிரபஞ்சத்தை நாம் காணுகிறோம்.. அந்த ஒழுங்கில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு விஷயங்களை காலம் பண்ணும் மாறுதல் அதன் பெயர் தான் ‘entropy ‘.

ஒரு அறையில் ஒரு மூலையில் காற்றை அமுக்கி வைத்து ரிலீஸ் பண்ணா காற்றின் மூலக்கூறுகள் இப்போ அரை பூரா பரவும். ஆனால் மீண்டும் அதே மூலைக்கு ஒன்றாக முன்பு போல சேர்ந்து உட்கார இங்கே தடை ஏதும் இல்லை…காற்று மூலக்கூறுகள் தனிச்சையானவை ஆனால் ஒரு போதும் அவைகள் மூலையில் மட்டும் ஒன்று சேர்ந்து விடுவது இல்லை.

Entropy என்பது காலத்தால் எந்த ஒரு பொருட்களும் நிலை’ அ ‘விலுருந்து நிலை’ ஆ ‘ விற்கு செல்லும் ஆனால் ஒரு போதும்’ஆ ‘விலுருந்து ‘அ’ வுக்கு திரும்பாது. அதாவது entropy என்பது ஒரு ..ஒருவழி பயணம். சுருக்கமா சொல்லனும்னா.. கருவாடு மீன் ஆகாது..பாஸ்..

‘அந்த 7 நாட்கள் படத்தில் பாக்யராஜ் சொல்லி இருப்பாரே.. “சாரே என்ற காதலி உங்கள் மனைவி ஆயிட்டு வரும் ஆனால் உங்கள் மனைவி என்ற காதலி ஆகாது ” னு அந்த மாதிரினும் கூட வச்சிக்கோங்களேன்.

Time Inverse

ஆனால் ஒரு வேளை உங்கள் கோப்பை மீண்டும் அப்படியே ரிவர்ஸ் வீடியோ போட்ட மாதிரி ஒன்று கூடி ஒன்றாக ஒட்டி கொண்டால் எப்படி இருக்கும் ? கோப்பை அப்படி ஒரு inverse ஆப்ஜெக்ட் ஆல் செய்ய பட்டு இருந்தால் எப்படி இருக்கும் ? அந்த கற்பனை தான் TENET இன் அடி நாதம்.

படத்தில் பயன்படுத்த படும் இன்வெர்ஸ் புல்லட் கள் தலைகீழாக சுட்ட இடத்தில் இருந்து துப்பாகிக்கு செல்ல கூடியவை. புல்லட் மட்டும் அல்ல.. மனிதனையே இன்வெர்ஸ் நுட்பம் கொண்டு பின்னோக்கி செலுத்த முடியும்.அதன் மூலம் ஒரு செயல் நடந்து முடிந்த பின்பும் மீண்டும் அதன் ஆரம்பத்திற்கு கடந்த காலத்திற்கு சென்று அதை தடுக்க முடியும்.

ஒரு நிமிஷம் …

இதான் நாம பல படங்களில் பார்த்து விட்டோமே.. கடந்த காலத்திற்கு சென்று நிகழ்ச்சியை மாற்றுவது தான் நாம்’ இன்று நேற்று நாளை’ படத்திலேயே பார்த்து விட்டோமே என்று நீங்கள் கேட்கலாம் .ஆனால் இங்கே TENET இல் கொஞ்சம் வித்யாசம் உள்ளது. அது அந்த ‘ஒவொரு நிகழ்ச்சிக்கான டிராவல் கால கட்டம் ‘.

அதாவது 8 மணிக்கு ஒரு பாம் வெடிக்குது னு வையுங்கள் நீங்கள் 10 மணிக்கு பாம் வெடித்த இடத்துக்கு போறீங்க.. அப்போ டைம் மிஷின் வைத்து அதை தடுக்க கடந்த காலத்துக்கு அதாவது 7.55 கு போறீங்க னு வையுங்க இப்போ இடை பட்ட 2 மணி நேரத்தை என்ன பண்ணுவீங்க ? அதில் உங்கள் தலையீடு ஏதும் இல்லாமல் அப்படியே SKIP பண்ணி தானே 7.55 ஐ அடைவீர்கள். ஆனால் TENET இன் ‘entropy reverse ‘ தொழில் நுட்பம் படி நீங்கள் 10 to 8 காண ஒவொரு வினாடியும் அப்படியே ரிவர்ஸில் தலியிட்ட படி அதை அனுபவித்த படி அதை கடந்து செல்வீர்கள் அதாவது ஒரு 2 மணி நேர வீடியோவை தலைகீழா ரிவர்ஸ் ல ஓட விட்ட மாதிரி இருக்கும் நிகழ்வுகள். இப்போ இடையில் எந்த ஒரு வினாடியையும் நீங்கள் மாற்றி அமைக்க முடியும்.

டவுன்லோடு செய்ய பட்ட ஒரு திரை படத்தில் நமக்கு பிடித்த ஒரு கால் மணி நேர பகுதியை மட்டும் நாம் வைத்து பார்ப்பது போல.. எதிர்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு நமக்கு பிடித்த எந்த ஒரு கால நேரத்திலும் நாம் இன்வெர்ஸ் பண்ணலாம். அதான் TENET இல் நாம் காண்பது. இதன் மூலம் அவர்கள் எந்த வினாடியில் எந்த சம்பவம் நடந்தது என்பதை ஏற்கனவே அறிந்தவர்கள் என்பதால் அதை கையாள மாற்றி அமைக்க ஏதுவாக இருக்கும்.

சரி நோலன் இதோடு விடுவாரா உங்களை..”. temporal pincer” இது அடுத்ததா நீங்கள் கேள்வி படும் வார்த்தை..
இது ஒன்னும் இல்ல முன்பு சொன்னது போல ஒருவர் முன்னால் இருந்து பின்னால் ரிவர்ஸில் பயணித்து கொண்டு இருக்கும் போது இன்னொருவர் (அதே கால கட்டத்தில் அதே கணத்தில் ) வழக்கமான இயக்கத்தில் பின்னால் இருந்து முன்னால் பயணிப்பார் இதான் ”temporal pincer ” (அந்த இன்னோரு நபர் வேற யாரும் இல்லை இவரே தான்…என்று நோலன் உங்கள் மண்டையை சோதிபார் பொறுத்து கொள்ளுங்கள்..)

இப்போ காட்சி எப்படி இருக்கும் பாருங்க …

இன்வெர்ஸ் பொருட்களை கானும் சாதாரண மனிதன் அது தலைகீழாக செயல்படுவதை காண்பான்.. உடைந்த கோப்பை ஒன்றாக ஒட்டும் சுட பட்ட புல்லட் மீண்டும் துப்பாக்கி வந்து சேரும்.

அதே சமயம் இன்வெர்ஸ் செய்ய பட்ட ஓரு இன்வெர்ஸ் மனிதன் உலகை எப்படி காண்பான் யோசியுங்கள்… தன்னை தவிர பூரா உலகமும் ரிவர்ஸில் ஓடுவதாக காண்பார். இந்த நிலையில் அவர் நுரையீரல் ஆக்சிஜனை வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை ஏற்கும் எனவே தனி ஆக்சிஜன் மாஸ்க் தேவை (படத்தில் மாஸ்க் அணிந்து இருப்பவர்கள் இன்வெர்ஸ் பயணிகள்…) சுட பட்டால் ice போல குளிர்ந்து விடுவார்கள்.. வெப்பம் அங்கே இன்வெர்ஸ் ஆக செயல் படுவதால்.. வேகமாக ஓடினால் காற்று முதுகில் வேகமாக தாக்கும்… இப்படி…நிறைய..

இப்படி பட்ட ஒரு உலகத்தில் பின்னே முன்னே அலைந்து செல்வது தான் TENET படத்தின் திரை கதை.

சரி இனி படத்தின் கதை பற்றி ரத்தின சுருக்கமாக பார்க்கலாம்.

-ஸ்பாயிலர் அலர்ட்…….!-

( கதை டவிஸ்ட் மற்றும் ரகசியங்கள் கேட்க விரும்பாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்..மீறி படித்தால் என்னை திட்ட வேணாம்..)

எதிர் கால மனிதனுக்கும் நிகழ்கால மக்களுக்கும் நடக்கும் போர் ..அதை தடுக்கும் ஹீரோ போராட்டம் இதான் ஒன் லைன்.

எதிர் காலத்தில் இந்த உலகம் மக்கள் வாழ தகுதி இல்லாத கிரகமாக மாறுகிறது அதற்கு காரணம் இன்றைய மனிதன் இயற்கையை மனிதன் சிதைத்து வைத்து இருக்கும் குளோபல் வார்மிங்.. இயற்கை வளங்கள் அழிப்பு..மாதிரி சமாச்சாரங்கள். எனவே எதிர் கால மனிதர்கள் மொத்த உலகத்தை இன்வெர்ஸ் பண்ணி அழிக்க பார்க்கிறார்கள்.

இதனால் உலகம் பின் நோக்கி சென்று நல்ல ஆரோக்கியமான கிரகம் கிடைக்கும் அதே சமயம் இன்றைய மனித குலம் அழிந்து போகும் இங்கே எதிர்கால மனிதர்கள் வந்து சேருவார்கள் புதிய பூமியில் குடியேற.. ஆனால் இது நடக்க ஒரு அல்காரிதம் செயல் பட வேண்டும் அதை உண்டாக்கிய விஞ்ஞானி அந்த அல்காரிதத்தை 9 பாகமாக மாற்றி கடந்த காலத்தில் புதைத்து வைத்து விட்டு தற்கொலையும் செய்து கொண்டார். (தன்னை யாரும் பயன்படுத்தி மீண்டும் மறு உருவாக்கம் பண்ணிட கூடாது என )

இப்போ நிகழ் காலத்தில்….. இருக்கான் sator னு ஒரு வில்லன்.

அவன் அந்த அலகாரித்ததை தேடி சேர்த்துட்டு இருக்கான்.. (கதை ல 8 முன்பே சேர்த்து விட்டு இருப்பான் 9 ஆவது சேர்க்க படும் போது தான் ஹீரோ தலையீடு…) .
எல்லாவற்றையும் சேர்த்து விட்டால் உலகை அழித்து விட தயார்.. கூடவே தானும் சேர்ந்து சாவது பற்றி அவன் கவலை கொள்ள வில்லை காரணம் அவன் ஏற்கனவே செத்து கொண்டு இருக்கிற ஒரு கேன்சர் பேசண்ட். எனவே இவனை பயன்படுத்தி இந்த காரியம் பண்ண வைக்கிறார்கள் எதிர்கால மனிதர்கள்.

CIA ரகசிய ஏஜென்ட் ஆன ஹீரோவை அங்கிருந்து TENET னு ஒரு நிறுவனம் கையக படுத்துகிறது.. (இந்த நிறுவனம் எதிர்காலத்தில் உண்டாக்க பட்டது மேலும் இதை உண்டாக்கியது ஹீரோவே தான் என்கிற உண்மையை இப்போவே போட்டு உடைத்திட்ட பாவி ஆகிட்டேன்…)

நிறுவனத்தின் வேலை உலக அழிவை தவிர்ப்பது… எனவே ஹீரோவுக்கு இந்த வேலையை கொடுக்கிறது.

ஹீரோ ஒரு ரிவர்ஸ் புல்லட் மூலம் இந்த entropy ரிவர்ஸ் பற்றி அறிமுக படுத்த படுகிறார். இந்த புல்லட் விற்ற ஆளு மும்பை ல இருகார் என அறிந்து அங்கே பிரியா என்கிற டீலரை சந்திக்கிறார். (கமலின் விக்ரம் படத்தில் நடித்த டிம்பல் கபாடியா …தான் அந்த பிரியா..)
அவர் “இதை விற்றது தான் நான் ஆனா இதை இன்வெர்ஸ் புல்லட் ஆ மாற்றியது வேற ஆளு “என்று கூறி ஒரு ஆளை பற்றி சொல்கிறாள் அது வேற யாரும் இல்லை முன்பு சொன்ன வில்லன் sator .

அவனை நெருங்க அவன் மனைவியை பயன் படுத்தி அவனை நெருங்கி ஹீரோ என்ன செய்தார் எதிர் கால டீம்ஆகிய TENET உதவியுடன் எப்படி உலக போரை காப்பாற்றினார் என்பதை படத்தில் பாருங்கள்.. (கவலை வேண்டாம் நிறைய சுவாரஸ்ங்கள் சொல்லாமல் விட்டு இருக்கிறேன்.)

TENET பெயர் காரனம் குறிப்பிடுக என்று TNPC எக்ஸாம் ல கேட்டா நீங்க பதில் சொல்லணும் இல்ல அதிக்கு சில விளக்கம்….

TENET ரெண்டு பக்கத்தில் இருந்து படித்தாலும் TEN னு வருது இல்லையா…
கடைசியா க்ளைமாக்ஸ் போர் ல TENET டீம் இரண்டு டீமா பிரியும் ஒன்னு ரெட் டீம் இனொன்னு ப்ளூ டீம்.. இரு டீமுக்கும் ஒரு மிஷனை முடிக்க 10 நிமிடம் கொடுக்க பட்டு இருக்கும். அந்த 10 நிமிடத்தில் ரெட் டீம் முன்னோக்கி பயணிக்கும் அதே நேரம் ப்ளூ டீம் பின் நோக்கி பயணிக்கும். ரெண்டு டீமும் ரிவர்சில் ஓடும் உலகத்தில் அந்த மிஷனை முடிக்கும் அதாவது இந்த பக்கத்தில் இருந்து பாத்தாலும் 10 அந்த பக்கத்தில் இருந்து பாத்தாலும் 10. “TEN NET ”

 

மேலும் நோலன் சில நுட்பமான மேஜிக் பண்ற ஆளு.. உதாரணமா கனவை அடிப்படையாக கொண்ட INSEPTION படத்தில் வரும் character கள் Dom, Robert, Eames, Arthur, Mal களின் முதல் எழுத்தை சேர்த்தால் dream என வரும்.
இதே போல.. TENET படத்தில் வரும் முக்கிய பெயர்கள்.

SATOR
AREPO
TENET
OPERA
ROTAS

இவற்றை மேலிருந்து கீழாக மற்றும்
கிடைமட்டமாக படித்தால் ஒரே பெயர்கள் வருவதை காணலாம்.

படத்தில் டைம் லைன்கள் பற்றி சொல்லனும்னா ஒவொரு கதாபாத்திரத்துக்கும் தனி தனி விளக்கம் சொல்லணும் (அதிலும் neil பாத்திரம் ரொம்ப க்ரிடிகள்..) அதற்கு தனி கட்டுரை தான் போடனும்.

அப்புறம் ரியலிசம் விரும்பி நோலன் படத்துக்காக நிஜ விமானத்தை கிராஸ் பண்ணது.. இப்படி ஒரு அறிவியல் படத்தை அதிகம் செயற்கை effect இல்லாமல் எடுத்தது னு அவர் ஒர்க் ஐ அலசி பாராட்ட ஒரு தனி கட்டுரை தேவை..

கதையில் முன்ன பின்ன பயணித்து குழப்பி இருப்பதை தெளிவு படுத்தினால் இன்னும் கட்டுரை ரொம்ப நீண்டு போகும் என்பதால் இத்தோதோடு நிறுத்தி கொள்கிறேன்…மீதி சந்தேகம் இருந்தால்…(முடிந்தால் / தெரிந்தால்…) கமன்ட் இல் பதில் சொல்கிறேன்..

(எப்பா நோலன் சந்தோஷமா.. எங்க அந்த ஜண்டு பாம்…..)

 

ரா பிரபு

 

Leave a Reply