FEATUREDNews

Nike vs Roger Federer

Spread the love

1994

நைக்கி விளையாட்டு வீரர்களை நம்பியிருக்கும் பிராண்டு. ஒருவர் புகழ் பெறும்வரை எல்லாம் அது காத்திருப்பதில்லை. இளவயதிலேயே வளைத்துபோட்டுவிடுவதுதான் அதன் வழக்கம். அதன்பின் புகழ் பெற்றால் அவர்களை ஸ்டார் ஆக்கிவிடுவார்கள்

அப்படி 14 வயதிலேயே சிறுவர் டென்னிஸ் பந்தயங்களில் ரோஜர் பெடெரரை கண்டுபிடித்து நைக்கியுடன் ஒப்பந்தம் போட சொல்லி கேட்டார்கள். அவர்கள் அப்போது கொடுத்த தொகை ஐந்து லட்சம் டாலர்.

அதன்பின் பெடெரெர் வெற்றிமேல் வெற்றிபெற நைக்கியின் சூப்பர் ஸ்டார் ஆனார். அவரால் நைக்கியின் புகழ் கூடியது. நைக்கி அவருக்கு ஆண்டுக்கு 1 கோடி டாலர் கொடுத்தது.

2018ம் ஆண்டு அவரது பத்தாண்டு காண்டிராக்ட் முடிவுற்றது. அவரது வயது 36..இன்னும் எத்தனை ஆண்டுகள் டென்னிஸ் ஆடுவார் என கம்பனி யோசித்தது. “நீங்கள் ஓய்வுபெறும்வரை ஆண்டுக்கு 1 கோடி டாலர் கொடுக்கிறோம்” என்றது

“ஆண்டுக்கு 3 கோடி டாலர். அடுத்த பத்தாண்டுகளுக்கு தொடர்ந்து கொடுக்கவேண்டும். ஓய்வு பெற்றாலும், பெறாவிட்டாலும் பணம் வருவது நிற்ககூடாது” என்றார் பெடெரர்.

“ஓய்வு பெற்றால் உங்கள் மவுசு குறைந்துவிடும்…46 வயது ஸ்டார் விளம்பரத்தில் நடித்தால் என்ன பலன்? கொடுக்கமுடியாது” என நைக்கி மறுக்க

அடுத்த கம்பனியை தேடினார் பெடெரர். பெரிய கம்பனிகளை பிடித்தால் தன்னை மதிக்கமாட்டார்கள். அமெரிக்காவில் பிரபலம் ஆகாத, ஆனால் நல்ல பணபலம் இருக்கும் கம்பனிகளை பிடித்தால் தான் வைத்துதான் சட்டம். நைக்கிக்கு பெடெரர் லட்சம் பேரில் ஒருவர். ஆனால் பிரபலம் ஆகாத கம்பனிகளை பிடித்தால் தன்னை தங்க தட்டில் வைத்து தாங்குவார்கள்…

ஜப்பானிய பிராண்டு யுனிக்லோவை பிடித்தார் பெடெரர். அவர்கள் பெடெரர் தமக்கு கிடைப்பார் என நம்பவே இல்லை. உலகம் முழுக்க பெடெரரால் புகழ் பெறும் வாய்ப்பு…அவர் ஓய்வு பெற்றாலும் பிரான்டு அம்பாசிடர் ஆக இருப்பார்…

ஆண்டுக்கு 3 கோடி டாலர் டீலில் கையெழுத்து போட்டார் பெடெரர்

ஆனால் யுனிக்லோ டென்னிஸ் ஷூ எதுவும் விற்கவில்லை. உடைகள் தான்..டென்னிஸ் ஷூவுக்கு இன்னொரு சின்ன கம்பனியை பிடித்தார் பெடெரர். அதன் பெயர் ஆன் ஷூ

பெடெரருக்கு கொடுக்க அவர்களிடம் பணம் எதுவும் இல்லை. அதனால் லாபத்தில் பங்கு என டீல் போட்டார் பெடெரர். டென்னிஸ் ஷூக்களை எப்படி தயாரிப்பது என ஐடியாவும் கொடுத்தார். ஷூ விற்பனை சக்கைபோடு போட, கம்பனியின் பங்கு பங்குசந்தையில் லிஸ்ட் செய்யபட 1100 கோடிக்கு பங்குகள் விற்பனையாகின. பெடெரருக்கு அதில் லாபம் மட்டும் 100 கோடி டாலர் கிடைத்தது

ஆண்டுக்கு 1 கோடி மட்டுமே கொடுக்கமுடியும் என சொன்ன நைக்கி வாயைப்பிளந்து இதை எல்லாம் பார்த்துக்கொன்டு இருந்தது. நைக்கிக்கே வணிகம் செய்வது எப்படி என்பதை பாடமாக கற்பித்தார் பெடெரர்.

நைக்கி ஒரு பிராண்டு என்றால் பெடெரரும் ஒரு பிராண்டுதானே?

~ நியாண்டர் செல்வன்

Leave a Reply