130 கோடி மக்கள் நலமோடு வாழ ஒத்துழைப்பு தாருங்கள்

Spread the love

130 கோடி மக்கள், நலமோடு வாழ ஒத்துழைப்பு தாருங்கள்.

“இளைஞர்களே! (இன்று) உங்களுக்கான ஒரு செய்தி என்னிடம் உள்ளது: நீங்கள் எதையும் வெல்ல முடியாதவர்கள் அல்லர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் உங்களைத் தொற்றினால், நீங்கள் பல வாரங்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடலாம், அல்லது இந்த வைரஸ் உங்களைக் கொல்லக்கூடும்.

ஒருவேளை நீங்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள், தங்குகிறீர்கள் என்பது குறித்து நீங்கள் செய்யும் தேர்வுதான் மற்றொருவரின் வாழ்க்கைக்கும் இறப்புக்குமான முடிவாக அமைந்துவிடும். எனவே ஒத்துழைப்பு தாருங்கள்.

நான் மிகவும் நன்றியோடு உங்களைப் பார்க்கிறேன். ஏன் தெரியுமா – அதிவேகமாகப் பரவும் உயிர்க்கொல்லி வைரஸைவிட ’ஒற்றுமை’ எனும் ஒற்றைச் சொல்தான் உங்களால் அதிகம் பரப்பப்படுகிறது.

நான் மிகவும் நன்றியோடு உங்களைப் பார்க்கிறேன். ஏன் தெரியுமா – அதிவேகமாகப் பரவும் உயிர்க்கொல்லி வைரஸைவிட ’ஒற்றுமை’ எனும் ஒற்றைச் சொல்தான் உங்களால் அதிகம் பரப்பப்படுகிறது.

இந்த உயிர்க்கொல்லி நோய், எல்லைப் பாகுபாடின்றி எங்கும் பரவி மனித உயிர்களையும், அவர்களின் வாழ்வையும் பறித்து நமக்குப் பெரும் சவாலாக இருக்கிறது என்பது நாம் அறிகிறோம். இருப்பினும் வரலாற்றில் முன்பு பெரும் அழிவைக் கொடுத்த நோய்களைப் போலல்லாமல் இதை ஒழித்துக்கட்ட நம்மிடம் இப்பொழுது தொழில்நுட்ப சக்தியிருக்கிறது.

நான் வழக்கமாகச் சொல்வது போல, நாடு, வயது வித்தியாசம், (இனம், மொழி) கடந்து நாம் பற்றிப் பிடிக்கும் ஒற்றுமை மட்டுமே COVID-19 போன்ற சவால் மிகுந்த நோய்களுக்குச் சாவு மணி அடிக்கும்.

உலக நாடுகளுக்கு மட்டும் அறிவுரை வழங்கிவிட்டு நாங்கள் ஒதுங்கிக் கொள்வதில்லை; உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்குவதையும் எங்கள் கடமையாகக் கருதுகிறோம்.

இப்போதைய சூழல், பெருவாரியான மக்களின் இயல்பு வாழ்க்கையைத் திடீரெனப் புரட்டிப் போட்டிருக்கிறது. எனது குடும்பத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் எனது மகள் இப்போது தொலைதூரக் கல்வி முறையில் தான் படிக்கிறாள்.

இது போன்ற துயர் மிகுந்த நேரங்களில், நம்முடைய உடல் நலனிலும் உள்ளத்தின் நலனிலும் நாம் பெரிதும் கவனம் கொள்ள வேண்டும்.

இது போன்ற துயர் மிகுந்த நேரங்களில், நம்முடைய உடல் நலனிலும் உள்ளத்தின் நலனிலும் நாம் பெரிதும் கவனம் கொள்ள வேண்டும். இது நீண்ட காலத்திற்குப் பயனைத் தரும் என்றாலும் தற்போதைய COVID-19 தொற்றினால், அதை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும்.

முதலாவதாக, சத்து நிறைந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்

இரண்டாவதாக, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.

மூன்றாவதாக, புகைப்பதை நிறுத்திவிடுங்கள். ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டால், புகைப்பதின் காரணமாக அதிக சிக்கல்களை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

நான்காவதாக, குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். சிறுவர்களாக இருந்தால் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாட்டு போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். (உங்கள் உள்ளூர் அரசு அனுமதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைப் பயிற்சியோ (அ) வெளிப்புற விளையாட்டுகளையோ விளையாடுங்கள். (குறிப்பிட்ட இடைவெளி விடுவதில் கவனமாக இருங்கள்) தவிர, நடனம், இசை, யோகா மற்றும் மாடிப் படிகள் ஏறி இறங்குதல் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடலாம்.

ஒருவேளை நீங்கள் வீட்டிலிருந்துகொண்டு அலுவலகப் பணியினை மேற்கொண்டிருந்தீர்கள் என்றால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதீர்கள். முப்பது நிமிடத்திற்கொரு முறை மூன்று நிமிடங்கள் இடைவேளை கொடுங்கள்.

வரும் வாரங்களில் உங்கள் நலன் சார்ந்த சில குறிப்புகளை அவ்வப்போது உங்களுக்குத் தருகிறேன்.

அடுத்தது ஐந்தாவதாக, உங்கள் உள்ளம் சார்ந்த நலன் காப்பது அவசியம். பரவிவரும் வைரஸ் மனதில் கவலை, பயம், கலக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். அது போன்ற கவலை, நமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும். எனவே உங்களின் நம்பிக்கைக்குரியவருடன் மனம் திறந்து பேசுங்கள்.

அடுத்தவருக்கு உதவும் பெரும் குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் அண்டை வீட்டாருக்கு மிகவும் உறுதுணையாகவும், அனுசரணையாகவும் இருங்கள்.

அனுசரணையே அருமருந்து!

உங்களுப் பிடித்த புத்தகங்கள் படிக்கலாம்; இசையை இரசிக்கலாம்.

இறுதியாக, பதட்டத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகளைப் பார்ப்பதையும் கேட்பதையும் தவிர்த்துவிடுங்கள்.

ஆதாரப் பூர்வமாக வெளிவரும் செய்திகளை நாளொன்றுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ படித்து /பார்த்து உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

ஒற்றுமை.. ஒற்றுமை… ஒற்றுமை எனும் வெற்றி மந்திரத்தால் COVID-19 வென்றெடுக்க நாங்கள் விடுத்த அழைப்பிற்கு செவிமடுத்த உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்!”

– டாக்டர். டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெஸுஸ்

டைரக்டர் ஜெனரல் – உலக சுகாதார மையம்.

இதை தமிழில் கொடுத்த நண்பருக்கு நன்றி.

By Kaligounder pulli

Leave a Reply