FEATUREDNatureTOP STORIES

வேண்டாம் விதைபந்து விதைபையை கையில் எடுங்கள்

Spread the love

வேண்டாம் விதைபந்து விதைபையை கையில் எடுங்கள்!

உயிர் பெற்று சாகும் அவலம் இனியும் வேண்டாம் விதைகளுக்கு !!
தமிழகத்தில் விதைபந்து சாத்தியமே இல்லை!!!
வீணாக ஒரு லட்சம் இரண்டு லட்சம் ஏன் கோடி வரை போய் விட்டது விதை பந்து தூவல் பசுமை ஆர்வலர்களின் நேரத்தை வீனடிக்கும் செயல் இது!
இப்போது மழைகாலம் துவங்கி விட்டதால் விதை பந்து தாயாரிக்கும் வேளைகளும் மும்முரமாக நடந்து வருவதை கேள்வி பட்டு என் மனம் வேதனைபடுகிறது
ஐயோ இந்த ஆண்டில் எத்தனை கோடி விதைகளுக்கு உயிர் கொடுத்து கொள்ள போராங்களேனு நினைக்கும் போது என் மனம் படபடக்குது…
உங்களுக்கு தெரியுமா ஒரு சில விதைகள் மண் உருண்டையில் பிடிக்கும் போதே ஈரத் தன்மையால் உயிர் பெற்று நீங்கள் மண்ணில் தூவும் நேரம் அதிகமானால் அந்த குட்டி உயிர் நீரில்லாமல் காற்றில்லாத பெட்டிக்குள் இருப்பது போல் மண் உருன்டை உள்ளே இறந்துவிடும்
மழை காலங்களில் தூவும் விதைகள் நன்றாக தான் முளைக்கும் இந்த உலகமே நமக்கு தான் சொந்தம் என்று சந்தோசமாக என்னி கொன்டு தனது இலைகளை துளிர் விடும்
சூரியனை பார்த்து சிரித்து கொண்டு இருக்கும் அந்த சிரிய கன்றுக்கு தெரியாது இன்னும் சில மாதங்களில் நாம் இறக்க போகிறோம் என்று
ஆம் மே மாதத்தில் தொடங்கும் மழை தொடந்து மூன்று மாதங்கள் தான் வரும்
அப்புரம் பனிகாலம் தொடங்கிடும் அதற்க்கு பிறகு கடும் வறட்சி நான்கு மாதங்களுக்கு
இப்போதுதான் அறங்கேறும் இந்த கொடூர கொலைகள்
ஆம் வெயிலின் தாக்கம் தாங்காமல் அந்த சின்ன சிறு மரகன்று ஒரு சொட்டு தண்ணீருக்கு ஏங்கி இறந்து விடும்.
வெயில் காலத்தில் குறைந்தது நான்கு அடி வரைக்கும் பூமி வெப்பமையமாக வரண்டு கிடக்கும்
அனைத்து மர கன்றுகளும் கருகி வெரும் குச்சி மட்டுமே இருக்கும் நினைத்து பார்க்கவே முடியாத சோகம் அடிமைகளை கொண்டு போய் கறியும் சோரும் போட்டு கொல்வதற்கு சமம்
இந்த விதை பந்து முறை
ஒரு குழந்தை பாலுக்கு அழுவது போல் அழுது நா வரண்டு அந்த பிஞ்சு மரகன்று
மரனித்து விடும் பாவம்
இன்னும் சொல்ல போனால் டெஸ்ட்டியுப் பேபி போன்றதுதான் விதைபந்து
பறவைகளால் மட்டுமே வீரியம் மிக்க விதைகளை உருவாக்க முடியும் அதன் எச்சத்தில் இருந்து வரும் விதைக்கு அதிக உயிர் சக்தியும் வீரியமும் உன்டு
அதோடு காட்டில் பல நூரு ஆண்டுகளாய் மழை வெயில் என்று இயர்கை சூலழ் அனைத்தையும் தாங்கி வளர்ந்த மரங்களில் இருந்து விழும் ஆயிரகனக்கான விதைகளில் பல நுரு விதைகள் உயிர்சக்தி மிகுந்த விதைகளாக இருக்கும் அந்த விதைகளாலும்
காற்றில் கிடைக்கும் ஈரபதத்தை கொண்டு உயிர் வாழும் அத்தி ஆலம் அரசன் இச்சி இன்னும் பல மர விதைகளை பறவைகள்
காடெங்கிலும் பரப்பி வனம் உருவானது அந்த காடுகளில் பல சிற்றாறுகள் உருவானது
அதன் மூலம் மலை அடிவாரத்தில் உள்ள பல ஏரிகள் நிறம்பின நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தன அதன் வழியே விவசாயமும் சிறப்பாக நடந்தது
இனியும் வேண்டாம் விதை பந்து
இதற்க்கு மாற்றாக விதைபையை கையில் எடுங்கள் மாணவர்களிடம் சென்று பள்ளிகளில் கொடுங்கள் கண்டிப்பாக அந்த விதைகள் மாணவர்களின் மனதில் பசுமை என்னத்தை விதைக்கும்
ஒருமாதம் அந்த விதைபையை வளர்க்கும் குழந்தை அந்த விதைபைக்கு தாயாகுவாள் பின்னர் அது முளைத்து துளிர் விடும் போது அந்த குழந்தை அடையும் சந்தோசத்திற்க்கு அளவேகிடையாது
ஒரு தாய் பத்துமாசம் சுமந்து குழந்தையை ஈன்றெடுக்கும் சந்தோசத்தை அடையும் அக்குழந்தை அந்த கன்றுக்கு தாயாகிறாள்
அதற்கப்புறம் பள்ளியில் கான்பித்து சந்தோச மடைந்த அந்த குழந்தை தான் வளர்த்த கன்றுகளை தன் மார்போடு ஒரு தாய் உள்ளத்தோடு அனைத்து செல்லும் அழகை வார்த்தைகளால் வர்னிக்க முடியாது அதற்கு அந்த குழந்தை அந்த மரகன்றை வளர்க்கவே ஆசைப்படும்
நாம் பசுமை பறவைகள் அடுத்த தலைமுறையினரிடம் இது போன்று பசுமை விதையை தூவி விட்டு செல்வோம்
அதில் நம்மை போன்ற பசுமை ஆர்வளர்கள் கன்டிப்பாக உருவாகுவார்கள்
என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு உங்களுக்கும் இருந்தால் இந்த தகவளை மற்றவர்களுடன் பகிருங்கள்
நான் செயல்  படுத்திய அனுபவத்தைதான் உங்களுடன் பகிர்கிறேன்
அன்புடன் K M A Dhanapal

Leave a Reply