FEATUREDLatestNature

வெண்புருவ கொண்டைக்குருவி WHITE BROWED BULBUL

Spread the love

வெண்புருவ கொண்டைக்குருவி WHITE BROWED BULBUL

தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படும் ஒருசில பறவைகளுள் இவரும் ஒருவர்ங்க. வயல்வெளிகள் நிறைந்த பகுதிகளில் பறவைகளை தேடி சுற்றி கொண்டிருந்த போது வெண்புருவ கொண்டைக்குருவியை எதேச்சையா பார்க்க நேர்ந்தது.

பொதுவா இந்த வகை பறவைகளுக்கு கொண்டை இருக்கும்ங்க. ஆனா இவருக்கு கொண்டை கிடையாது. இருந்தாலும் அவற்றின் தோற்றம் மற்றும் உருவ ஒற்றுமையை வச்சு கொண்டைக்குருவி வகைல கொண்டு வந்துருக்காங்க. உடலின் மேற்பகுதி இடலைப் பச்சை நிறம் தோய்ந்ததாகவும் வெளிர் சாம்பல் நிற நெற்றியோடையும், தனித்துவமா புருவம் மட்டும் வெண்மையாகவும், வாலின் அடிப்பகுதி மஞ்சள் நிறத்துலயும் இருக்குறத பார்க்க முடியுது. இவரோட அலகும் கால்களும் கொம்பு நிறத்துல இருக்குது. புதர்கள் அடங்கிய வறண்ட காடுகள், சமவெளிகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் ஊர்ப்புறத் தோட்டங்களில் மட்டுமே இவரை பார்க்க முடியுது.

பசுமைமாறாக்காடுகள்ள இவரை பார்க்க முடிவதில்லைங்க. அதேபோல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகள்ள இவரை பார்க்க முடியுது. சின்ன சின்ன பூச்சிகள உணவா சாப்டுறாப்ள. அதுபோக பழங்களையும் சாப்டுறாப்ள. ரொம்பவே அரிதாக காணப்படுபவர் ஆவடி அருகேயுள்ள சேக்காட்டில் நம்ம கண்களில் சிக்கிட்டாரு. படவில படம்பிடிச்சுட்டு இருந்த பத்து வினாடிக்குள்ள கண்களிலிருந்து மறஞ்சுட்டாப்ள. டாட்டா கூட காட்டல. இவரை வேறுப்பகுதிகள் எங்கயாவது பார்த்துருந்தா சொல்லுங்க மக்களே.

வெண்புருவச் சின்னான் – வெண்புருவ கொண்டைக்குருவி – மஞ்சள் கொண்டைக்குருவி – தவிட்டன் புல்புல் | சேக்காடு | ஆவடி | சென்னை

WHITE BROWED BULBUL – PYCNONOTUS LUTEOLUS | SEKKADU | AVADI | CHENNAI

Saravana Manian P A 

— அன்புணர்ந்தவராக உணர்கிறார்.

Leave a Reply