FEATUREDLatestNature

வண்ணாத்திக் குருவி or கருப்பு வெள்ளைக்குருவி ORIENTAL MAGPIE ROBIN

Spread the love

ORIENTAL MAGPIE ROBIN
வண்ணாத்திக் குருவி / கருப்பு வெள்ளைக்குருவி அல்லது குண்டு கரிச்சான்

https://www.facebook.com/paneer.selvam.16?__tn__=%2CdC-R-R&eid=ARAD711wl2sL5vUv0nRiXQVswH09TiSYxHp0QcpV4KZ17K-2dZB-CHb-8Cu9Hus7YmaBDMUeGGjpNlTT&hc_ref=ARReFJ6Y8H0PV2NHcMDPdewNwXs6hADNhPubWgwxIKj4m16hSGm0_kbc8RRHRkUlVVQ&fref=nf

இது வீட்டுத் தோட்டங்களிலும் காடுகளிலும் எளிதில் காணக்கூடிய ஒரு பாடுங்குருவி ஆகும். இந்த படங்கள் என் வீட்டு வாசலில் இருக்கும் கருவேல மரத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.


தன் வாலைத் தூக்கி இறக்கி கூவிப்பாடும் இயல்புடையது. இதன் சத்தம் சீஷ்கை அடிப்பது போல் கேட்கும். இது 19 செ.மீ நீளமுடையது. இலை தழைகளிக்கிடையிலும் வீட்டுத் தோட்டங்களில் உள்ள பூச்சி புழுக்கள் இதன் உணவாகும்.

ஆண் குருவி கருமை நிற மேல்பகுதியில் வெண்ணிறத்தில் தோள்பட்டை சிறகுடையது.அடிப்பகுதி வெண்ணிறமுடையது. இனப்பெருக்க காலங்களில் அருமையான சுருதியில் பாடும் இயல்புடையது. பெண் குருவி சாம்பல் நிறமுடையது.

வண்ணாத்திக் குருவி மக்கள் வாழும் இடங்களில்
காணப்படும் பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைப் பெரும்பாலும் காண முடியும். ஆனால் மற்ற
மாதங்களில் இதன் இருப்பிடத்தை காண்பது இயலாது.

வண்ணாத்திக் குருவி மரப்பொந்துகளிலோ வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ தன் கூட்டினை அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடையாக இருக்கும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளிவந்தவுடன் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டு வந்து குஞ்சுகளுக்கு அளிக்கும்.

#PANASONIC #LUMIX_FZ300
IMAGES EXTRACTED FROM 4K VIDEO

Leave a Reply