Socialmediaகாமிக்ஸ்

மந்திரவாதி மாண்ட்ரேக்

Spread the love

 

பிரபல காமிக்ஸ் வரலாற்றாளர் டான் மார்க்ஸ்டீய்னைப் பொறுத்தவரையில், மந்திரவாதி மாண்ட்ரேக்தான் உலகின் முதல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ. இந்த மந்திரவாதி மாண்ட்ரேக் காமிக்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் லீ ஃபாக். இவர்தான் நமக்கெல்லாம் நன்று பரிச்சயமான வேதாளர் (தமிழில், முகமூடி வீரர் மாயாவி) காமிக்ஸ் தொடரையும் பின்னர் படைத்தார். மாண்ட்ரேக்கின் நண்பராகவும், சாகசங்களில் துணைவராக வருபவர் லொதர்.

ஆப்பிரிக்காவில் மாண்ட்ரேக் சாகசம் செய்யும்போது அவருக்கு அறிமுகமானவர்தான் லொதர். இவர் ஏழு நாடுகளின் இளவரசர். மன்னராக முடியேற்க மறுத்து, மாண்ட்ரேக்குடன் இணைந்து அநீதிக்கெதிராக போராட அமெரிக்கா வந்த லொதர் எப்படி அறியப்பட்டவர் என்று தெரியுமா? உலகிலேயே மிகவும் வலிமையான, சக்தியுள்ள மனிதன்.

ஜூன் 11, 1934ஆம் ஆண்டு முதன்முதலாக காமிக்ஸ் வடிவில் வெளிவந்த மாண்ட்ரேக், அதன் பின்னர், ரேடியோ, தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்று பல வடிவங்களில் மக்களை மகிழ்வித்தார். மாண்ட்ரேக் & லொதர் முதன்முதலாக திரையில் தோன்றியது 1939ஆம் ஆண்டு கொலம்பியா நிறுவனம் தயாரித்த ஒரு 12 பாக தொடரில்தான் (இது டீவிடியாகவும் கிடைக்கிறது).

இந்தத் தொடரில் மாண்ட்ரேக் ஆக நடித்தவர் வாரன் ஹில். லொதர் ஆக நடித்தவர் எல்மர் கிகூம் கோஸியர் என்ற ஹவாய் / அமெரிக்க நடிகர். தனது 72ஆவது வயதில் 1972ஆம் ஆண்டு இறந்த இவரது பிறந்த நாள் நேற்றுதான் (அக்டோபர் 09).

மாண்ட்ரேக் கதைகள் தமிழில் தினமணி, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், தினத்தந்தி, இந்திரஜால் காமிக்ஸ் என்று பல இதழ்களில் வெளியானது. இன்று எல்மர் கிகூமின் நினைவாக, ராணி காமிக்ஸ்சில் வந்த சில அட்டைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்.