FEATUREDLatestNewsPoliticsSocialmedia

பட்டேல் சிலையை உருவாக்கியது யார்?

Spread the love

பட்டேல் சிலையை உருவாக்கியது யார்?

இப்பொழுது இணையத்தில் ஒரு காமெடி ஓடிக்
கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால்
இந்தியாவின் ஒற்றுமை அடையாளம் படேல் என்றுக்கூறி கொண்டு படேல் சிலையை சீனாவை
வைத்து உருவாக்கி இந்தியாவையே கேவலப் படுத்தி விட்டார்கள் என்று ஒரு குரூப் அள்ளி விட்டுக்
கொண்டு இருக்கிறது.

இதை கூறுபவர்கள் யாரென்றால் 1962 ல் இந்தியா
வுக்கும் சீனாவுக்கும் இருந்த எல்லை பிரச்சினை
யால் உண்டான போரின் பொழுது இந்தியாசீனா
எல்லைக் கோடான மக்மோகன் கோடு செல்லாது
.அது ஆங்கிலேயர் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட து
அதை நாங்கள் ஏற்க மாட்டோம். சீனா இந்தியா வை அடிப்பது சரி தான் என்று கூறி அப்பொழுது இந்தி யாவில் எதிர்க்கட்சி யாக இருந்த இந்திய கம்யூனி ஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சீனா ஆதரவுடன்
தனிக்கட்சி கண்ட மார்க்சிஸ்ட் கள்.

அவர்களின் கண்ணுக்கு எல்லாமே சீனாவாக தானேதெரியும். தாய் நாட்டு பாசத்தை அவ்வளவு சுலபமாக யாரும் விட்டு விட முடியாது.. அதனால் தான்படேல் சிலையை சீனா உருவாக்கி கொடுத்த துஎன்று கூசாமல் கூறுகிறார்கள்

குஜராத் தில் இன்று திறக்கப்பட்ட 182 மீட்டர் அதாவது 597 அடி உயரம் கொண்ட வல்லபாய்
படேல் சிலையை வடிவமைத்தவர். பத்மஸ்ரீ ராம்
வாஞ்சி சுதர் என்கிற மராட்டிய ர்.இவருக்கு வயது
93 .இவருடைய குடும்பமே சிற்பிகள் தான். உலகின்
முதல் ஆர்க்கிடெக்ட் யார் என்றால் அது இந்திய
புராணங்கள் போற்றும் மயன் விஸ்வகர்மா தான்.

ராம் வாஞ்சி சுதனும் விஸ்வகர்மா வழியில் வந்த
ஒரு மாபெரும் சிற்பி.இந்திய அரசின் ஆர்க்கி யாலஜி டிபார்ட்மெண்ட் டில் வேலை பார்த்து பிறகு
அதில் இருந்து வெளிவந்து தன்னுடைய கலைத்தி றமைக்கு சவால் விடும் வேலைகளை செய்ய
ஆரம்பித்தார்.

இவர் செய்த முதல் வெலையே சம்பல் நதிக்கரையில்
மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட காந்தி சாகர் அணையில் 45 அடி உயரத்தில் கட்டப்பட்ட சம்பல்
தேவி சிலை தான். இதை அடுத்து நிறைய சிறிய
பெரியளவில் சிலைகளை அணைகளில் ஐயா
ராம் சுதர் அவர்கள் அமைத்து கொடுத்து ள்ளார்கள்
இதுவரை 50 க்கும் மேற்பட்ட சிலைகளை வடிவமை த்து உள்ளார்.

இதனால் தான் நர்மதா நதிக்கரையில் சர்தார் சரோவர் அணையில் வல்லபாய் படேல் சிலையை
வடிவமைக்கும் பொறுப்பை மோடி ராம் சுதன் அவர்
களுக்கு வழங்கினார்.மோடி என்றைக்கும் ஒரு
செயலை செய்தார் என்றால் அது உலக வரலாறு
இருக்கும் வரை அந்த செயல் இருக்க வேண்டும்
என்று நினைத்து செயல் படுபவர்.

அதனால் தான் வல்லபாய் படேல் சிலையை
அமைக்க போகிறோம் என்று முடிவெடுத்த உடனே
இது வரை உலகில் உள்ள சிலைகளின் உயரங் களை விட அதிக உயரத்தில் படேல் சிலை இருக்க
வேண்டும் என்று நினைத்தார்.

இதுவரை உலகில் உயரமான சிலை என்கிற
பெருமையை சீனாவில் இருக்கும் ஸ்பிரிங் டெம்பில்
புத்தர் சிலைக்குத்தான் இருந்தது. இந்த சிலையின்
மொத்த உயரமே 503 அடி தான் இதில் பீடம் மட்டுமே
82 அடியாகும்.இதனால் புத்தர் சிலையின் உயரம்
420 அடி மட்டுமே.

ஆனால் படேல் சிலை 597 அடியாவும். அதாவது. இப்பொழுது சீனாவில் இருக்கும் ஸ்பிரிங் டெம்பில்
புத்தர் சிலையை விட 100 அடி உயரம் ஜாஸ்தி. இன் னொரு முக்கிய மானது.என்னவென்றால் அமெரி க்காவின் லிபர்டி சிலையை விட படேல் சிலை இரு மடங்கு உயரமானது…சூப்பரல.

இப்போதைக்கு உலகிலேயே உயர்ந்த சிலை
எது என்றால் அது நம்முடைய படேல் சிலை தான்
இதை முறியடிக்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம். ஆகாமல் கூட போகலாம். எது வென்றா லும் இன்னும் 10 வருடங்களுக்கு உலகின் உயர்ந்த
சிலை என்று வல்லபாய் படேல் தான் இனிஉலகில்
உயர்ந்து நிறக போகிறார்.கூடவே இதற்கு அடிக்கல்
நிறுவி திறந்து வைத்தவர் மோடி என்கிற பெயரும்
உலக வரலாற்றில் இணைந்து இருக்கும்.

இன்னொரு சாதனையும் படேல் சிலைக்கு இருக்கி றது.அது என்னவென்றால் இன்றைக்கு படேல்
சிலையை சீனா தான் உருவாக்கியது என்று
அள்ளி விடுகிறார்கள் அல்லவா..அந்த சீனாவில்
உள்ள இதுவரை உலகின் உயர்ந்த சிலை என்று
இருந்த ஸ்பிரிங் டெம்பில் புத்தர் சிலையை
உருவாக்க 11 ஆண்டுகள் ஆனது.ஆனால் புத்தர்
சிலையை விட 100 அடி உயரம் கொண்ட படேல்
சிலையை ஜஸ்ட் 33 மாதங்களில் உருவாக்கி
சாதனை படைத்துள்ளது எல்& டி நிறுவனம்.

எல்& டி நிறுவனம் எந்த நாட்டு கம்பெனி என்று
எல்கேஜி குழந்தை களுக்கு கூட தெரியும் பொழுது
இடது சாரி அறிவு ஜீவி கூட்டங்கள் படேல் சிலையை
சீனா தான் உருவாக்கி யது என்று உளறி வருவதை
பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது.எல்&டி
நிறுவனம் மகாராட்டிரா வில் 1938 ல் உருவாக்க ப்பட்ட இந்திய தனியார் நிறுவனம்.

இந்த வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர்
மும்பையை சேர்ந்த ஐயா பத்மஸ்ரீ ராம் சுதர் மற்றும்
அவருடைய பையன்கள் தான் என்றாலும் அதை
உருவாக்கிய ப்ராஜெக்ட் மேனஜர் .இன்னொரு குட்
நியூஸ் தெரியுமா? முகேஸ் ராவேஸ் இருப்பது
சென்னை மணப்பாக்கம் பூந்தமல்லி ரோட்டில்
உள்ள எல்& டி நிறுவன ஆபீசில் தான் இரண்டாவது
மாடியில் இருக்கிறார்.

சந்தேகம் இருப்பவர்கள் சென்னை பூந்தமல்லி
ரோட்டில் உள்ள எல்&டி ஆபிஸ் சென்று எப்படி
சிலை உருவானது என்று கேட்டுக் கொள்ளலாம்

சிலையைப்பற்றி முகேஷ் ராவல் என்ன கூறுகிறார்
தெரியுமா? தினமும் 200 பேர் தொடர்ந்து வேலை
செய்தார்களாம். மத்திய பிரதேசம் குஜராத் மாநில
எல்லைகள் சந்திக்கும் விந்திய சாதபூரா மலைக்
காடுகளில் வைத்து உருவாக்கி சர்தார் சரோவர் அணை இருக்கும் சாது மழைக்காடுகளில் வைத்து இணைத்து அணையில் நிறுவி இருக்கிறார் கள்.

இன்னொரு விசயம் என்னவெனில் இந்த சிலை யில் கான்கிரீட் இரும்பு அலுமினியம் போல்டு
நட்டு ஸ்க்ரூ என்று அனைத்து மே மேட் இன் இந்
தியா தான்.இப்படி இருந்தும் இடதுசாரிகள் எப்படி
இந்த சிலையை சீனா தயாரித்தது என்று கூசாமல்
பொய் கூறுகிறார் கள் என்று யோசித்து பார்த்தால்
ஒரு உண்மை தெரிய வரும்.

அது என்ன வென்றால் இது வரை உலகின்
உயர்ந்த சிலை உள்ள நாடு என்கிற பெருமை
யை சீனா தான் வைத்து இருந்தது. ஆனால் அதை
மோடி தகர்த்து எறிந்து சீனாவை விட உலகின் உயரமான சிலை இந்தியாவில் இருக்கிறது
என்று உலக வரலாற்றில் எழுதி விட்டார். அதோடு
இனி வருங்காலங்களில் உலகில் அனைத்து துறை
களிலும் இந்தியா சீனாவை விட உயர்ந்து விட்டது
என்று உலக வரலாற்றில் எழுத இருக்கிறார்.

அப்பொழுதும் இந்தியாவில் இருக்கும் இடது
சாரிகள் என்ன இருந்தாலும் எங்க சீனா மாதிரி
இந்தியா வருமா? என்று தாய் நாட்டு பாசத்தில்
கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். நாம தான்
விடுங்கப்ப்பா..பாவம் என்று கண்டு கொள்ளாமல்
இருக்க வேண்டும்.

ஏம்ப்பா இது வரை சரியாகத்தானே கூறிக்கொண்டு வந்தாய் கடைசியில் கோட்டை விட்டு விட்டாயே
என்று என்னை நீங்கள் திட்ட வருவது எனக்கு
தெரிகிறது.. அதனால் பேக் டூ லாஸ்ட் பேரா

அதாவது இந்தியா சீனாவை விட உயர்ந்தாலும் என்ன இருந்தாலும் சீனா மாதிரி இந்தியா
வர முடியாது என்று இடது சாரிகள் கூறிக்கொண்டு
இருப்பார்கள் என்று கூறினேன் அல்லவா… ஸாரி
அதில் ஒரு சின்ன திருத்தம்.. இந்தியா சீனாவை
விட அனைத்து துறைகளிலும் உயரம் ்பொழுது
இந்தியாவில் இடதுசாரிகளே இருக்க மாட்டார்கள்.

எனி ஹவ்..உலக அரங்கில் உலகின் உயர்ந்த
சிலையை வடிவமைத்த ஐயா பத்மஸ்ரீ ராம் சுதன்
அவர்களுக்கு ம் அதை உருவாக்கிய ப்ராஜெக்ட்
டைரக்டர் முகேஸ் ராவல் அவர்களுக்கும் இந்த
சிலையை உருவாக்க வேண்டும் அதிலும் உலகில்
உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து
செயல் படுத்திய பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு ம் தலை நிமிர்ந்து சல்யூட்….