FEATUREDLatestஅறிவியல்

பச்சோந்தி நிறமும் குவாண்டம் இயற்பியலும்

Spread the love

இந்த பிரபஞ்சத்துல இருக்க எல்லாமே,எத்தனை பெரிய சிக்கலான அமைப்பா இருந்தாலும் தனக்குள்ள ஒரு சீரான பாங்கை வைச்சுருக்கும்..மண்ணுலேந்து பிரபஞ்ச வெளியோட நட்சத்திர கூட்டங்கள் வரை சீரமைப்ப வைச்சுருக்கும். இதையே குவாண்டம் உலகத்துக்குள்ள போய் பார்த்தோம்ன்னா இன்னும் ஆச்சர்யமான அமைப்புகளை நாம தெரிஞ்சுக்கலாம்.எடுத்துக்காட்டா பச்சோந்தி தன் இணைய ஈர்க்க எப்படி குவாண்டம் இயற்பியல் உதவுதுன்னு பார்க்கலாம். பச்சோந்தியோட நிற மாற்றத்துக்கு காரணம் வேதிப்பொருட்களோட கலவை..அதுல எப்படி குவாண்டம் வந்துச்சு?

Erwin Schrödinger
Erwin Schrödinger

அதுக்கு முதல்ல ஒரு பொருளோட மூலக்கூறு அளவுல அதோட அமைப்ப தெரிஞ்சுப்போம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒன்னா சேர்ந்து ஒரு மூலக்கூறா ஆகும் போது அதனோட அணுக்கள் ஒரு சீரான அளவுல அமைஞ்சு ஒரு படிக அலகுக்கூடா மாறும். எடுத்துக்காட்டு உப்பு (NaCl).. அப்படி crystal (படிகம்) ஆக இருக்க அமைப்பு ஓர் அலக்கூடா  அணுக்களால அடுக்கப்பட்டு,அணுக்களோட வெளி வட்டப்பாதையில எலக்ட்ரான்கள் சுத்திக்கிட்டும் இருக்கும்.இந்த எலக்ட்ரான்களுக்கு ஆற்றல் மட்டம் கிடையாது.அதனால தான் அது சீரான அமைப்பா இருக்கு..

சரி இந்த எலக்ட்ரான்கள் இருக்கே அது துகளா அலையான்னு ஏற்கனவே பிரச்சனை ஓடிகிட்டு இருக்கு.ரெண்டுமேன்னு நாம ஒரு முடிவுக்கு வந்தாச்சு..சரி மொதல்ல எலக்ட்ரானோட அலை பண்ப பாப்போம். எலக்ட்ரானோட இடத்தை நம்மால துல்லியமா சொல்லவே முடியாது.ஆனா அது இங்கனக்குள்ள எங்கையாச்சும் இருக்கலாம்ன்னு ஒரு எல்லையை சொல்லலாம்.அப்படி கோடு போட்டா அது மேலையும் கீழையும் போய்ட்டு வர்ற அலையா இருக்கும்..Sinusoidal wave.. இந்த அலைகளோட நீளம் இருக்குல்ல அதோட அளவு ஒரே மாதிரியா இருந்தாதான் சீரான அமைப்ப பெற முடியும்.ரெண்டு வெவ்வேற நீளமுள்ள கம்பிய எடுத்து இரண்டு முனையும் நல்லா இறுக்க கட்டி சுண்டி விட்டா வர்ற சத்தம் வெவ்வேறா இருக்கும். ஆக ஒரே அலை நீளம் உடைய எலக்ட்ரான்கள் தான் அந்த படிகத்தோட அலகுக்கூட்டுல இருக்கும். இந்த ஆற்றல் மட்டத்தையும் எலக்ரானோட வேறு சில பண்பையும் நாம கண்டுபிடிக்கனும்ன்னா அதுக்கு ஸ்ரோடீங்கரோட அலைச்சமன்பாடு வேணும்.அதை தீர்த்தோம்ன்னா இந்த ஆற்றல் மட்டம் எப்படி ஒன்னு ஒன்னா அதிகரிக்குதுன்னு நம்மால புரிஞ்சுக்க முடியும்.

ஸ்ரோடீங்கர் அலைச்சமன்பாடு
ஸ்ரோடீங்கர் அலைச்சமன்பாடு

சரி இப்ப லைட்ட எடுத்து அந்த அலகுக்கூட்டுல அடிச்சோம்ன்னா ஒத்த அலைநீளம் உடைய எலக்ட்ரான்கள் ஈர்க்கப்படும்..மத்ததெல்லாம் அடிச்சு துரத்தப்படும்.அப்ப எலக்ட்ரானோட ஆற்றல் மட்டம் பட்டையா ஆகும் ?(இத தான் அலைச்சமன்பாடு சொல்லுது..ஒரு கம்பிய எடுத்து பட்டையா அடுக்குற மாதிரி)அப்ப மொத்த படிகத்தோட அமைப்பும் ஒரே கலர் தெரியுமா?

இப்படி தான் ஒரு பொருளுக்கு கலர் வருது.. ஒரு பொருளோட வேதிப்பொருளோட கலவை மட்டும் அதுக்கு கலரை தரல அதோட அமைப்பும் நிறத்துக்கு காரணம்ன்னு புரியுதா?

இதே விசயத்தை எடுத்துட்டு பச்சோந்திட்ட போவோம். பச்சோந்திக்கு இணை வேணும்ன்னு தேடுறப்ப அதோட iridophore ங்குற செல்களோட படிக அமைப்ப மாத்துறது மூலமா ஒளியோட குறிப்பிட்ட அலைநீளத்த மட்டும் அனுமதிச்சு நிறத்த மாத்திக்குதுன்னு ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க..தோல் இருக்க பிக்மெண்ட் னால இந்த மாற்றம் வரலைன்னு உறுதியா சொல்றாங்க.. இந்த மாதிரி நிறமாற்றங்களை மத்த பச்சோந்திகள் கிட்ட தொடர்பு கொள்ளவும் பயன்படுத்துது.. இப்படி பல விசயம் இருக்கு.மேலும் சூரிய ஒளியில வர்ற அகச்சிவப்பு கதிர்களை அப்படியே எதிரொளிக்கவும் செய்யுது..அதன் மூலமா வெப்பத்துலேந்து தன்னை பாதுகாக்கவும் செய்யுதாம். பரிணாமத்தோட அழகே அழகுதான்.

ஜெகதீசன் சாய்வராஜ்

Leave a Reply