FEATUREDPoliticsTOP STORIES

நீ வாழ்ந்துகொண்டிருக்கிறாய் சே

Spread the love

டாக்டர் என்ற உடன் நம் நினைவுக்கு வருபவை எவை?? வெள்ளை கோட், ஸ்டெதாஸ்கோப், டிப்டாப் உடை, கனிவான குரல்.

இப்பிடி எந்த அடையாளத்தையும் இந்த டாக்டரிடம் பார்க்க முடியாது, அழுக்கு ராணுவ உடை, பரட்டை தலை, நீள பூட்ஸ், சுருட்டு தான் இவனின் அடையாளங்களாக இருந்தாலும் ஆண்களையும் காதல்கொள்ள வைக்கும் பேரழகன்.

மனித உடலுக்கான மருத்துவம் படித்திருந்தாலும் அவன் மருத்துவம் பராக்க நினைத்தது இந்த சமூகத்திற்கு.

பிறப்பில் இருந்து இறக்கும் வரை அவன் எப்பொழுதும் ஒரு சராசரி மனிதனாக வாழவில்லை. காதல் பொங்கும் இளமை பருவத்தில் காதலை உதரிவிட்டு மோட்டார் சைக்கிள் ஏறி லத்தீன் அமெரிக்க முழுவதும் சுற்ற சென்றுவிட்டான்..

தொழில் செய்து பணம் சம்பாதிக்கும் வயதில் துப்பாக்கியும், முற்போக்கு கொள்கையும் ஏந்தி ஆதிக்கத்தை எதிர்த்து போராட சொன்றுவிட்டான்..

சரி போராடி வென்றாகிவிட்டது இதோ தொழில்துறை அமைச்சர் பதவி, இதோ மத்திய வங்கி தலைவர் பதவி என்றவுடன் சொகுசு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு குடும்பத்துடன் அமர்ந்துவிடவில்லை மாறாக மீண்டும் துப்பாக்கி ஏந்தி காங்கோ சென்றான், பொலிவியா சென்றுவிட்டான்..

இறப்பு நிச்சயம் என்று தெரிந்த பிறகும் தான் அடைத்து வைக்கப்பட்ட பள்ளியின் நிலைகண்டு கலங்கியவன், புரட்சி வெற்றி பெற்றால் புதிய பள்ளியை கட்டித்தருவதாக சொன்னவன் சென்றேவிட்டான்..

அவனின் இறந்த உடல் கைவிடப்பட்ட ஏசுவைப்போல் ஒளி வீசியதாக அதே ஏகாதிபத்திய நாட்டின் பத்திரிக்கைகளை எழுத வைத்தவன் சென்றுவிட்டான்..

ஆம்,ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்காவும் தன் கால்கள் சென்றுகொண்டே இருக்கும் என்றவனை, நோய்வாய்பட்ட சமூகத்திற்கு மருத்துவம் பார்க்க நினைத்த மருத்துவனை ஏகாதிபத்தியம் கொண்டு சென்றுவிட்டது.

அவர்கள் சே’வை, நம் தோழனை கொண்றுவிட்டதாக நினைத்தார்கள்.. சே’க்கள் மரிப்பதில்லை, சே’வுக்கு மரணமில்லை.

#நீ_வாழ்ந்துகொண்டிருக்கிறாய்_சே.
பதிவு – Adv Ayyanar