GeneralLatest

நீரின்றி அமையாது உலகு

Spread the love

நீரின்றி அமையாது உலகு..    Engals Raja from FB

குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழல் திடீரென ஏற்பட்ட ஒன்று அல்ல.

மழை பொய்த்துப் போகவும், வெப்பம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கவும் காரணம் என்ன என்பதை அறிய தேடுவோம்.

“வான் சிறப்பு” என்பது பற்றி ஏதாவது நமக்கு புரிகிறதா? நாம் எதை நோக்கி பயணிக்கிறோம்?

“உண்டவன் உரம் பன்னுவான்” என்பது இல்லாமல் போய் கக்கூஸ் கழிவுகளை கொண்டு ஆறுகளையெல்லாம் சாக்கடைகளாக்குகிறோம்.

வெஸ்டர்ன் கக்கூஸ்ல போனால் 12 லிட்டர் தண்ணீர் ஊற்றி தான் மலத்தை உள்ளே தள்ள முடிகிறது. இந்தியன் கக்கூஸ்ன்னா 4-5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது . குளிக்க 10 லிட்டர் தண்ணீராவது வேண்டியுள்ளது. R.O தண்ணீருக்கு ஒரு லிட்டருக்கு 1.5 லிட்டர் தண்ணீரை விரையம் செய்ய வேண்டியுள்ளதாம்.

20000 ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்த்தால் போதும் அலுவலகம் வர வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்கள்.

விளையும் பூமியில் மலம் கழித்தால் காலையில் மண்ணிற்கு உரமாக போகிறது. உடம்பை கழுவ 1-2 லிட்டர் தண்ணீர் போதுமாகிறது. கழிவில் இருந்து உணவு உற்பத்தி ஆகிறது.

ஆனால் இது பழமைவாதிகள் சிந்தனை என்கிறார்கள்.. இயற்கையோ மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக குவிவதை விரும்பாமல் நகரத்தை விட்டு விரட்டி அடிக்கிறது.

மைய சென்னையில் இருந்து மக்கள் வீடுகளை காலி செய்து காஞ்சிபுரம் , திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற சுற்று வட்டார பகுதிகளில் குடியேறுகின்றனர்.

மழை குறைகிறது, தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. புத்திசாலிகளோ மழை நீர் சேமிப்பு பற்றி பேசுகிறார்கள்.

ஆனால் மழையே பெய்யாமல் இருக்கும் போது எப்படி மழை நீரை சேமிப்பது.. மழை பெய்ய செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.

மரம் வளர்த்தால் மழை வருமென்று ஏமாற்றுகிறார்கள். மரத்தை எங்கே நட வேண்டும் என்பது பற்றி பேச மறுக்கிறார்கள்.

இப்போது நாம் ஊடகங்களில் பேசிக்கொண்டு இருப்பது தண்ணீர் தன்னிரைவுக்கான தீர்வை கொடுக்கப் போவது இல்லை.

தண்ணீர் தன்னிரைவுக்கான உண்மை பாதை குறித்து பேச துணிவு கொள்வோம்..

Leave a Reply