FoodLatestTOP STORIES

தேத்தான் விதையில் – காபித் தூள்

Spread the love
தேத்தான் விதையில் – காபித் தூள்
*தேத்தான் கொட்டையை தேவையான அளவு எடுத்து நீரில் ஊற விடவும் மறுநாள் காலை நீரை வடித்துவிட்டு புதிதாக நீர் ஊற்றி திரும்பவும் ஊற விடவும்.
* மூன்றாம் நாள் ஊறிய நீரை வடித்து விட்டு நாட்டு மாட்டுப்பால் சேர்த்து ஊற விடவும்ங்க,மறுநாள் காலை வடித்துவிட்டு.செம்மண் எடுத்து அதில் ஊறிய விதைகளைச் சேர்த்து நீர் தெளித்து நன்றாக கலந்துக்கொள்ளவும்ங்க.(துவரைக்கு மண் கட்டுவது போலங்க)
* செம்மண் கட்டிய விதைகளை காரை வாசலில் கூம்பு வடிவில் கொட்டி ஈர சணல் சாக்கை கொண்டு மூடி விடவும். அவ்வப்போது சிறிது நீர் தெளித்து கலந்து திரும்பவும் சாக்கை கொண்டு மூடி விடவும்ங்க.
* மறுநாள் காலை வெயிலில் பரப்பி காய விடவும், நன்றாக காய்த்தும் செம்மண் போக புடைத்து எடுத்து, இரும்பு வடகல்லில் சிறிது சிறிது போட்டு வறுத்து எடுத்து ஆறவிட்ட பின்பு ராகி கல்லில் சிறுக சிறுக போட்டு அரைத்து எடுத்தால் காபி பொடி தயார்ங்க.வீடே காபி பொடி மணம் வீசும்ங்க.
* 100ml தண்ணிக்கு தேவையான அளவு கருப்பட்டி (அ) நாட்டு சர்க்கரை சேர்த்து தேற்றான் விதைத்தூள் 2 சிட்டிகை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். அப்படியே காபி போலவே இருக்கும்ங்க. மிக மிக குறைந்தளவு தூள் போதும்ங்க அதிகமானால் காபியில் வரும் கசப்பு சுவை இதிலும் வரும்ங்க.
* காபிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் மற்றவர்களிடம் நீங்க சொன்னால் மட்டுமே தெரியும் இது தேற்றான் விதையில் தயாரித்தது என்று.
* வறுத்த கொட்டைகளை இடிகல்லில் போட்டு இடித்தால் இடிபடனும் எகிறி வந்தால் இன்னும் வருபடனும்ங்க.
* தேத்தான் விதை-சிறந்த நீர் சுத்திகரிப்பான், உடல் சூட்டைக் குறைக்கும், இரத்தத்தை சுத்திகரிக்கும், வெள்ளை படுதல்லுக்கு தீர்வுங்க.
* இம்முறையை அறிமுகப்படுத்தியவர் திரு.மேகநாதன் அவர்கள், மிக்க நன்றிங்க.
* காபியில்லுள்ள கெடுதல்கள் இதில் இல்லங்க. தயாரித்து பயன்பெறுங்க.

Leave a Reply