FEATUREDLatestNature

சோழிங்கநல்லூர் ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில்

Spread the love

ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில் எங்களின் கவனம்:

சரியாக மாலை 3.30 மணிக்கு மிதிவண்டியில் காரப்பாக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்புநில பகுதிக்கு சென்றுவிட்டோம்.‌

தாய் தாழைக்கோழிக்கு நடத்தப்பட்ட பலப்பரீட்சை:

முதலில் நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தோம் ஆனால் ஒரு இடத்தில் தனது குஞ்சுகளுடன் மேய்ந்துகொண்டிருந்த தாழைக்கோழி ஒரு 6அடி நீள பாம்பை துரத்திக்கொண்டிருந்ததை வியப்புடன் கவனித்தோம். முடிந்தவரை அந்த தாய் தாழைக்கோழி தன்னுடைய தோற்றத்தை பெரிதாக காட்ட தனது இறக்கைகளை விரித்து அந்த பாம்பை துரத்திக்கொண்டு ஓடியதை திகைத்து பார்த்து கொண்டிருந்தோம். ஆனால் முதலில் யார் யாரை துரத்துகிறார்கள் என்று குழம்பினோம். பிறகு தான் புரிந்தது.
தனது குஞ்சுகளுக்கு ஆபத்து என்றவுடன் அவைகளை காப்பாற்ற அந்த தாய் தாழைக்கோழி எடுத்து முயற்சி வீண்போகவில்லை.

செங்குறுகுடன் செலவழித்த சிலமணிநேரம்:

குறிப்பாக செங்குறுகை பார்த்தோம். அது என்னவாக இருக்கும் என்று மிகவும் குழம்பினோம். முதலில் அது தனது கழுத்தை நீட்டாமல் அமர்ந்திருந்தது குடிமியுடன் தூக்கியெறியப்பட் தேங்காய் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது பின்பு நன்கு ஆராய்ந்துவிட்டுதான் அது செங்குறுகு என்ற முடிவுக்கு வந்ததோம். இன்று அதிக நேரம் செலவிட்டது இதற்கு தான்.

வழியெங்கும் எங்களுடன் பயணித்த ஊதாத் தேன்சிட்டு:

நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களுடன் ஊதாத் தேன்சிட்டும் பயணித்து. உருவில் மிகச்சிறியவை என்றாலும் அவைகள் எழுப்பும் சத்தம் பெரிதே. ஊதாத் தேன்சிட்டை மிக அருகிலேயே பார்த்து ரசித்து மகிழ்ந்தோம்.

இன்னும் பல தகவல்கள்:

சிறிய பஞ்சுருட்டான் பூச்சியை பிடித்துவந்து மின்கம்பியில் அமர்ந்து விழுங்கியதை கண்டு ரசித்தோம்.

ஒரு பெண் மாங்குயில் பிறகு ஒரு கரிச்சான் காகத்தை துரத்தியதையும் கண்டோம்.

சாதாரண நாட்டுக் கோழிகளை போன்று தெருக்களில் சுற்றித்திரிந்த வெண்மார்புக் கானாங்கோழி மற்றும் நீலத் தாழைக்கோழிகளை பார்த்து வியந்தோம்.

வெண்மார்பு கானாங்கோழி சீமை கருவேல மரத்தில் அவசர அவசரமாக கூடிகட்டியதை கண்டோம்.

மின்கம்பிகள் தகைவிலான்கள் மற்றும் அவ்வப்போது காட்சியளித்த சில்லைகலாள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நாங்கள் வந்ததை கூட கவனிக்காமல் மேய்ந்துகொண்டிருந்த அரிவாள் மூக்கன்கள்.

இன்னும் பார்த்து ரசித்த பல பறவைகளை கீழ் பதிவு செய்துள்ளேன்.

மிகுந்த மனநிறைவுடன் 5.40 மணிக்கு அங்கிருந்து எங்கள் மிதிவண்டியை மிதிக்க தொடங்கினோம்.

-மு.நிர்மல் குமார் சில்லை.
-ர.சிவஞானம்.
-சி.பாலாஜி.
-இ.ஜோசப் அருன்.

நன்றி 🦉

இன்று பார்த்தவை (23/12/19)

நீலத் தாழைக் கோழி
தாழைக் கோழி(குஞ்சுகளுடன்)
வெண்மார்பு கானாங்கோழி
நீர்க்காகம்
வெள்ளை அரிவாள் மூக்கன்
உண்ணிக் கொக்கு
கருப்பு வெள்ளை மீன்கொத்தி
வெண்மார்பு மீன்கொத்தி
கருந்தலைச் சில்லை
கதிர்க்குருவி
சாம்பல் கதிர்குருவி
கருங்குருகு
செங்குருகு
சிகப்பு மார்பு கானாங்கோழி~Ruddy breasted crake
பொரி மண்கொத்தி
மஞ்சள் வாலாட்டி
புள்ளிச் சில்லை
ஊதாத் தேன்சிட்டு
ஊர் தேன்சிட்டு
கூழைக்கடா
நத்தை குத்தி நாரை
மஞ்சள் முக்கு நாரை
செந்நீல நாரை
சின்ன கொக்கு
நெடலைக் கொக்கு
புள்ளி மூக்கு வாத்து
செம்மூக்கு ஆள்காட்டி
மீசை ஆலா
மடையான்
மாங்குயில்
பொண்முதுகு மரங்கொத்தி
கரிச்சான்
சிறிய பஞ்சுருட்டான்
நீல வால் பஞ்சுருட்டான்
சின்னான்
தகைவிலான்
கல்லுக்குருவி
மைனா
மணிப்புறா
மாடப்புறா
கரும்பருந்து.

Leave a Reply