FEATUREDLatestNature

சிவப்பு சில்லை – படமும் கதையும்

Spread the love

சிவப்பு சில்லை – படமும் கதையும்
Author: https://m.facebook.com/GreatPmG

எனக்கு அவ்வளவாக நீண்ட கதை எழுத தெரியாது, இருப்பினும் இதை கண்டிப்பாக படமும் & படத்தின் பின் உள்ள கதையும் என்ற தலைப்பில் எழுதி ஆகவேண்டும் என்று எழுதிகிறேன். ஆம் இந்த சிவப்பு சில்லை என்ற அழகிய சிறு பறவையை படம் எடுக்க நான் இரண்டு முறை தேடி அலைந்து உள்ளேன்.. ஆனால் என்னால் எடுக்க முடியவில்லை.. அதுமட்டுமின்றி கடந்த ஞாயிறு அன்று காலை 5.30 மணிக்கெல்லம் கிளம்பி ஒருவர் அங்கு பார்த்ததாக கூறியதை வைத்து 7மணிக்கு சென்று காட்டினுள் குறைந்தது 18 kms (சாம்சங் ஆப் ஸ்டெப் count) சுற்றாத இடமெல்லாம் நடந்து திரிந்து மாலை 6 மணி சூரியன் மறையும் வரை காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.. அன்று நாங்கள் சோகமாக வீடு திரும்பினோம்.. ஆனால் எனக்குள்ளே ஒரு நம்பிக்கை அந்த பறவையை படம் எடுத்து விடுவேன் என்று மறுபடியும் இரண்டு நாட்கள் கழித்து இன்று காலை 5.30 மணிக்கெல்லம் கிளம்பி சென்றேன்.. சூரியன் 6.30 மணிக்கு தான் உதித்தது.. அந்த இடம் சென்று எங்கெல்லாம் அவை உணவு சாப்பிட வரும் என்று படித்ததை வைத்து அந்த அந்த இடங்களுக்கு சென்று தேட ஆரம்பித்தேன்.. திடீரென கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பறவை செடிகளில் உணவு தேடி கொண்டு இருத்து.. முன்பே கேமராவை ரெடியா வைத்திருந்த நான் அந்த பறவையை பார்த்ததும் எப்படியவது படம் எடுக்க வேண்டும் என்று எண்ணி குறைந்தது 5 படங்கள் எடுக்கும் முன்பு பறந்தகு சென்று வேறு இடத்தில் அமர்ந்தது. உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்று அதை தேடி கொண்டு இருக்கையில் செந்தட்டி செடியை கவனிக்காமல் இரண்டு மூன்று உரசு உரசிவிட்டேன்.. திடீரென இரண்டு பறவை வந்து முன் உள்ள செடியில் அமர்ந்தது.. அதை படம் எடுப்பதா இல்லை அரிக்கிற கையை சொரிவதா என்று தெரியாமல் குருவி போனால் கிடைக்காது என்று அந்த வலியை தங்கி கொண்டு அந்த சிறு அழகினை பதிவு செய்து பார்க்கையில் அந்த வலிகள் எல்லாம் பறந்து போய் விட்டன😊 பின்பு எல்லையில்லா அனந்ததுடன் வீடு திரும்பினேன்..

முழுமையாக படித்ததற்கு நன்றி🙏🙏

💚PMG

2 thoughts on “சிவப்பு சில்லை – படமும் கதையும்

Leave a Reply