FEATUREDNatureSocialmedia

சாம்பல் நாரை Grey Heron

Spread the love

#Grey_Heron

சாம்பல் நாரை (Grey Heron, Ardea cinerea) நீருக்கு அருகாமையில் வாழும் பறவையினம். இது ஒரு பெரிய பறவையினம். மிகவும் உயரமாகவும் ஒல்லியாகவும் நீண்ட வளைந்த கழுத்துடனும் நீண்ட கால்களுடனும் இருக்கும்.

நதியன், நாராயணப் பட்சி, நரையான், கொய்யடி நாரை, கருநாரை ஆகியவை இதன் வேறு பெயர்கள். பெருங்கொக்கு, சாம்பல்கொக்கு

பல மணி நேரங்கள் அசைவின்றி ஆழமற்ற நீரில் நின்றுகொண்டு இவை மீன், தவளை, தேரை, விலாங்கு மீன், பாம்புகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், மற்றும் சிறு பறவைகளை பிடித்து உட்கொள்ளும். இரையை அலகில் பிடித்தவுடன் இவை தலையினை ஆட்டி அவற்றை செயலிழக்கச்செய்தும் அப்படியேவும் விழுங்கும். தேவைபட்டால் இவை மெதுவே இரையை பின்தொடர்ந்து செல்லவும் செய்கின்றன.

இனவிருத்தி தொகு
இவை கூட்டம் கூட்டமாக மரக்கிளைகளில் கூடுகட்டுகின்றதை வேடந்தாங்கல் போன்ற பறவை சரணாலயங்களில் காண இயல்கிறது. இவை பெரும்பாலும் நதி, குளம், மற்றும் கடற்கறைகளிலும் கூட்டினை அமைக்கின்றன. எனினும் இவை கோரைப்புற்கள் மீதும் கூட்டினை அமைக்கும் தன்மையுண்டு.