HealthLatest

கொள்ளை நோய் ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

Spread the love

கொள்ளை நோய் ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

கொள்ளை நோய் ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நாம் மற்ற நாடுகளில் இருந்து கற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நமது கிராமங்களில் உள்ள மாரி அம்மன் கோவில் திருவிழாக்களில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றினர் என கூர்ந்து கவனியுங்கள்.

1. ஊர் எல்லை கட்டுதல். தம் ஊரில் உள்ளவர்கள் அடுத்த ஊருக்கு செல்ல கூடாது. அடுத்த ஊரில் உள்ளவர்கள் நம் ஊருக்குள் வரக்கூடாது.

2. வீதி மற்றும் வாசல்கள் தோறும் வேப்பிலை மாவிலை தோரணங்கள் மற்றும் சாணி மெழுகுதல். வீட்டினுள் கிருமிகள் நுழையாமல் தடுத்தல்.

3. வீட்டு வாசலில் மஞ்சள் பொடி கலந்த நீரை அண்டாவில் கரைத்து வைத்தல். வீட்டிற்க்குள் வருபவர்கள் கை கால் அலம்பி வர வேண்டும்.

4.அசைவ உணவை அரவே தவிர்த்து ஒரு வேளை அல்லது இரு வேளை மட்டும் சைவ உணவு உட்கொண்டு விரதம் பூண்டல்.

5.கையில் மஞ்சளுடன் கூடிய காப்பு கயிறு கட்டுதல். கணவன் மனைவி உறவு கொள்ளாதிருத்தல்.

6. எளிய உணவான கூழ் கரைத்து உண்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துததல்.

7.தினமும் இரண்டு வேளை குளித்து மஞ்சளில் தோய்த்த ஆடை அணிதல்.

8. சுக்கு பனைவெல்லம் கலந்த பாணகம் மற்றும் மாவிலக்கு வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் போன்ற உணவை சமைத்து படையல் போடுதல். இவற்றை உண்ணும் போது உடல் சுத்தி பெற்று வெப்பம் அதிகமாகி நோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாகும்.

9. வீடுகளில் காலை மாலை இரு வேளைகளிலும் சாம்பிராணி புகையிடுதல் மற்றும் வாசலில் சிறு போகி கொளுத்துதல். இதனால் வைரஸ் கிருமிகள் பரவாமல் அழிந்து போகும்.

10. எல்லாவற்றிற்க்கும் மேலாக விரதம் இருந்து கரகம் எடுத்தல் நெருப்பு மிதித்தல் போன்ற பக்தியோடு கூடிய செயல்களால் உடல் உஷ்ணம் அதிகமாகி குண்டலிணி சக்தி தூண்டப்பட்டு மேலேறி நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பல மடங்கு பலமாக்குதல்.

கொடிய கொள்ளை நோய்களை விரட்டுவதில் நம் தமிழர்கள் முன்னோடிகள் என்பதை இப்பதிவின் மூலம் உலகுக்கு உணர்த்தவதோடு மட்டுமல்லாமல் நாம் அனைவரும் தற்சமயம் மேற்கண்ட அனைத்து செயல்களையும் முடிந்த அளவு கடைபிடிக்கவும் நமது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவும் கடமைபட்டுள்ளதை இப்பதிவின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுகின்றேன்.

இப்பதிவு மதம் சார்ந்ததல்ல நமது நோய் தடுப்பு பாதுகாப்பு சார்ந்தது.

kbalajeganathan

 

Leave a Reply