FEATUREDLatestNature

குக்குறுவான் brown-headed barbet

Spread the love

brown-headed barbet,
கீச்சென்று ஒலியெழுப்பும், பசுநிறமுள்ள ஒரு சிறு பறவை இனம்.
குக்குறுவான்
குக்குறுப்பான்

இனி படம் எடுத்த கதை

யாழில், ஊரெழு எனும் கிராமத்தில், எனது மனைவி வெண்ணிலாவின் வீட்டுக்கு முன்னால், கிளுவை வேலியொன்று தோட்டக்காணியையும், அவர்கள் வீட்டின் முன்னாள் உள்ள ஒழுங்கையையும் பிரிக்கிறது. இந்த காலத்தில், கிராமங்களிலேயே வீட்டு எல்லைகள் எல்லாமே மதில்களாக மாறி பசுமை வறண்டுவிட்டது.

ஆனால், இது தோட்டக்காணி எண்டபடியால் கிளுவை வேலி தப்பி இருந்தது. அந்த வேலியில் உள்ள கிளுவை மரம் ஒண்டில், கொவ்வை மரம் கொடி விட்டு வளர்ந்து இருந்தது. அதிகாலை வேளைகளில், குயிலும், மைனாவும், காகமும், சிட்டுக் குருவிகளும் இன்னும் சில பெயர் தெரியாத சிறு பறவைகளும் போட்டி போட்டு கொண்டு கொவ்வை பழத்தை சுவைக்க வருவார்கள்.
வந்த இடத்தில் கண்டு கொண்ட, மிகவும் நாணம் கொண்ட பறவை தான் இது.
முன்னர் ஒரு போதும் காணவில்லை, இரண்டு தரம் கமெரா தூக்க முன்னரே பறந்துவிட்டது. இன்னுமொரு நாள் மறைந்து இருந்து இந்த படத்தை எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

என் மனதில் தோன்றியது இது தான், அட ஒரு கொவ்வை கொடிக்கே இத்தனை பறவைகள் வருகிறதே…ஒரு கொவ்வை காட்டுக்குள் போனால் எப்படி இருக்கும்? அதோட வீடுகளை சுற்றி மதில்கள் கட்டினாலும் , இப்படியான கொடிகளை வளர்ப்பதன் மூலம் இயற்கை சமனிலையை பாதுக்காக்கலாம் என்பது தான்.

 

Leave a Reply