General

கான்க்ரீட் காட்டிலும் பெரியசெலவின்றி எரு தயாரிக்க முடியும்

Spread the love

Muhammad ismail h from facebook

இதில்உள்ள இவ்வளவு எருவும் 2 மாதம் முன்னர் வரை எங்களின் வீட்டில் உருவான மக்கும் குப்பை என்றால் நீங்கள் நம்புவீர்களா ? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை. அந்த மக்கும் பொருட்களை நீங்கள் சர்வ சாதரணமாக தெருவில் வீசியெறிந்து ஊரை நாற அடிப்பது அல்லாமல் வயிற்றுப் பசி தீர்க்க உணவுக்காகவும் அலைகின்றீர்கள். 🙁

ஆற்றல் மாறா விதியின் அடிப்படையில் மக்கும் குப்பைகளை சரியாக தரம் பிரித்து நமது வீடுகளில் எருவாக மாற்றி விட்டால் அவைகள் தெரு முக்கில் குப்பைகளாக மாறி நாறாது. அல்லது அந்த குப்பைகள் எல்லாம் சேர்ந்து பெரிய குப்பைக்கிடங்காக மாறாது. இதன் மூலம் மிகப்பெரிய சூழல்கேட்டினை தடுக்கலாம். வியாதிகள் பரவுவதை தடுக்கலாம். இதில் உருவாக்கப்படும் எருவினைப் பயன்படுத்தி நமக்கான விஷமற்ற உணவினை நம் அருகாமையில் என்னைப் போல் உருவாக்கலாம். குறைந்த பட்சம் தெருவோரத்தில் பழமரங்களை வைத்து அதற்கு இந்த எருவினை விட்டு, அதற்கு வீட்டில் புழங்கும் தண்ணீரைத் திருப்பி விட்டால் அனைவரின் பசிப்பிணி போக்கலாம். ஏர்செல்லில் வேலை போனால் என்ன ? ஜெட்ஏர்வேஸில் வேலை போனால் என்ன ? நாம் உண்ணுவதற்காக உணவு நமக்கு அருகாமையில் விஷமின்றி கிடைக்கும். நாம் உயிர் வாழ அதை விட பெரிய தேவை வேறு என்ன இருக்கிறது ?

இறைவனது படைப்பில் எதுவுமே வீணானது அல்ல. சில மனிதர்களின் வீணான சிந்தனை தவிர்த்து 🙁 ஆகவே இனி குப்பைகளை தரம்பிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்தே நன்மையுடன் தீமையை கலக்காதீர்கள். அதாவது மக்கும் குப்பையுடன் மக்கா குப்பையை சேர்த்து கலந்து ஊரை நாற அடித்து நீங்களும் நாறிப்போகாதீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய இடத்தில் எவனுக்காக வேலை பார்த்தாலும் அது எல்லாம் நமது வயிற்றுப் பசி தீர்க்கத் தான். அந்த பசி தீர்க்கும் உணவினையே உங்களுக்கு அருகாமையில் உருவாக்க ஆரம்பித்தால் இப்போதைய வெனிசூலா மக்கள் போல வெருண்டோட தேவையில்லை.

இந்த எரு தயாரிப்பு எல்லாம் ஏதோ குக்கிராமத்தில் செய்யப்பட்டது அல்ல. Tier 2 Metro City ஆன திருச்சியின் விமான நிலையம் அருகே உள்ள மண்தரையே இல்லாத மாடி வீட்டின் கீழ் போர்ஷனில் தான் செய்யப்படுகின்றது. இங்கே எனக்கு எருவைப் புரட்ட போதுமான இடவசதி இல்லாமையால் தான் அந்த கம்பி வலை அமைப்பை பயன்படுத்துகின்றேன். அதன் மூலம் எரு உருவாக்க தேவையான காற்றோட்டம் கிடைக்கிறது. அதை எடுத்தால் புட்டு போல நிற்பதை எடு்த்து மறுபடியும் வலைக்குள் கொட்டி புரட்ட முடிகின்றது. எருக்குழியாக இருந்தால் புரட்டுவது பெரும்பாடு.

ஆகவே இதெல்லாம் உங்களின் வீடுகளில் செய்ய முடியாது என நினைக்காதீர்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. 🙂 நீங்கள் மனம் மாறத் தயாராக இருந்தால் நான் உதவ அணியமாக உள்ளேன் ஐயா !♥.