FEATUREDGeneral

ஒயிலாக நிற்கும் யுவதி

Spread the love

“ஒயிலாக நிற்கும் யுவதி ”

மீள் பதிவு-

எண்ணெய் வண்ண ஓவியம் -தீட்டிய ஆண்டு 1984,

ஓவியர்.ஆர்.ராஜராஜன்,
—————————————————
ஓவியக்கலை பயிற்சிகளில் வெளிப்புறக் காட்சிகளை பார்த்து வரைந்து பயிற்சி பெறுவது ஓர் பகுதி. புகைப்படத்தை பார்த்து வரைவது போல் எளிதல்ல இந்த பயிற்சி முறை.கண்களால் பார்த்து காட்சியினை உள்வாங்கி அதனை அதன் காட்சி அமைப்பு வழுவாது , இயல்பு சாயலை அப்படியே பதிவு செய்வது . குறிப்பாக வெளிப்புற காட்சிகளில் ஜன நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ஓவியம் தீட்டும் போது பலர் அருகில் நின்று பார்ப்பதும் நம்மிடம் ஓவியம் பற்றி கேட்பதும் அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே ஓவியம் தீட்டும் அனுபவம் வித்தியாசமானதகும்.அத்துடன் கோவில்களில் அப்போது மிக கடுமையான் கட்டுப்பாடு இருக்காது என்றாலும், மதியம் 12 மணிக்கு கோவில் நடை சாத்துவது நடைமுறை அதன் பிறகு மதியம் 3.30 மணிக்குதான் கோவில் கதவை திறப்பார்கள். அதன் பிறகு உள்ளே சென்று ஐந்து மணிவரைதான் ஓவியம் தீட்ட முடியும். இந்த தரத்திலான ஓவியத்தை முடிக்க சுமார்.20 முதல் 25 நாட்கள் ஆகும் இதற்கென கல்லூரியில் ஐந்து நாட்கள் மட்டுமே அனுமதி தருவார்கள் .அதன் பிறகு மீண்டும் கடிதம் எழுதிக் கொடுத்து அனுமதியை நீட்டித்துக்கொள்ள வேண்டும். ஓவியம் முடியும் வரை வருகை பதிவேட்டில் புள்ளி மட்டும் வைத்து இருப்பார்கள் .ஓவியத்தை முடித்து கல்லூரிக்கு கொண்டுவ்ந்த பின்தான் .அனுமதி நாட்களுக்கு பிரசன்ட் கிடைக்கும். வெளிப்புறக்காட்சி ஓவியங்களின் கடுமையான சாதகமாக இந்த வகை ஓவியங்கள் எனது மாணவ பருவத்தில் தீட்டப்பட்டது.எனது இதுபோன்ற முயற்சிகளுக்கு எங்களின் ஆசிரியர்கள் திரு.கோ.கங்காதரன் மாஸ்டர்.திரு.சீ.ரெங்கராஜன் மாஸ்டர் ஆகியோரின் ஊக்குவிப்பு மறக்கமுடியாதது. 1984 ஆம் வருடம், நான்காம் ஆண்டு பயிலும் போது இந்த ஓவியம் தீட்டப்பட்டது.


.கும்பகோணம் ராமசாமி கோவில் உள் மண்டப தூணில் காணப்படும் இந்த சிற்பத்தை அதன் நுட்பமான தோற்ற அழகை , நேரடியாக பார்த்து வரைந்தது போல இன்று வரைவதற்கு அனுமதியும் வாய்ப்பும் கிடைப்பது மிக கடிணம். .கோவிலுக்கு இடையூறின்றி,தியானம் செய்வது போல் பனியாற்றும் போதுதான் காட்சியை தத்ரூபமாக வரைய முடியும். ,சிற்பத்தின் மீது படிந்திருந்த ஒட்டடை,தூசு போண்ற யதார்த்தத்தின் மதிப்பு ஒளிரும் ஓவியம் .இன்றும் எனது வீட்டில் பத்திரமாக இந்த ஓவியம் உள்ளது. எப்போதாவது மாணவர்கள் வரும் போது இந்த ஓவியத்தை காண்பிப்பது இன்றும் தொடர்கிறது.
(தீட்டிய ஆண்டு 1984-கேன்வாஸ் மீது எண்ணெய் வண்ணம், அளவு-30 in x 24 in ) எனது மாணவ பருவத்தின் தீர்க்க மிக்க பயிற்சி நிலையை நினைவு படுத்தும் ஓவியங்களில் இது சிறப்பு வாய்ந்தது.

Rajarajan from fb

Leave a Reply