FEATUREDLatestNewsPoliticsTOP STORIES

உங்கள் கிராமத்திற்கு நிதி இத்தனை லட்சங்கள் வந்துள்ளதா

Spread the love

ஒரு பஞ்சாயத்துக்கு ஆண்டுக்கு 50லட்சம் முதல் 1.5கோடி வரை மத்திய மாநில அரசுகளின் நிதி வருகிறது… எனில் உங்கள் கிராமத்திற்கு?

https://accountingonline.gov.in/ReportAbstract.do?OWASP_CSRFTOKEN=ZSFL-C09W-RSCD-75L1-DJPT-3RME-5LUB-4BN7&method=openAnnualReport&target=topband&help=0

Or

1. accountonline.gov.in
2. Mas register (8format)
3. Annual receipt and payments

மேற்கண்ட லிங்க் மூலம் (கணினியில் மட்டும்) உங்கள் கிராம வரவு செல்வு கணக்கினை அறிந்துகொள்ளுங்கள்.

இந்த லிங்க் மூலம் உங்கள் பகுதி கிராமத்தின் வரவு செலவு கணக்கினைத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் கிராமத்திற்கு மத்திய மாநில நிதிகள் இத்தனை லட்சங்கள் வந்துள்ளதா என வியந்துதான் போவீர்கள். இந்த லிங்கினை உங்கள் போனில் சாதாரணாமகத் திறக்க முடியாது. கணினி அல்லது போனில் Setting சென்று desktop view மூலம் மட்டுமே பார்க்க முடியும்.

அக்- 2, கிராமசபைக் கூட்டம்.
உங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கலந்துகொள்ளச் சொல்லுங்கள். உங்கள் கிராமம் தங்களுக்குத் தேவையானவற்றை தீர்மானமாக இயற்றி, வேண்டியதைக் கேட்காமல் விட்டுவிட்டால் அந்த நிதி வேறு திட்டத்திற்கு வேறு ஊர்களுக்குச் சென்று சென்றுவிடும்.

உங்கள் கிராமத்தின் நிதிகள் அனைத்தும் கொள்ளையடிக்கப் படாமல் இருக்க வேண்டுமெனில், இன்னும் நிதி வேண்டுமெனில், உங்களின் கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாக மாற்றவேண்டுமெனில் தயவுசெய்து கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஊரில் உள்ள டாஸ்மார்க்கினை அப்புறப்படுத்த, வேலிக் கருவைகளை தூர்வார, கண்மாய் ஏரி குளங்களுக்கான வாரிகளை சுத்தப்படுத்த, சாலைகளைப் போட, சிறு பாலங்கள் அமைக்க, குடிநீர் தட்டுப்பாட்டினைப் போக்க, ஆழ்குழாய் கிணறுகள் ஏற்படுத்த, புதிய தெருவிளக்கு இணைப்புகள் ஏற்படுத்த, பள்ளிகளுக்கு தேவையானவற்றை செய்ய…. இதுபோல் அனைத்து நல்ல திட்டங்களை, உங்கள் ஊருக்குத் தேவையானவற்றை தீர்மானமாகப் போடுங்கள்.

நகர்ப்புற மக்களே… இச்செய்தியினை கிராமங்களுக்குக் கொண்டு செல்லுங்கள்.

கிராமங்களே நம் நாட்டின் முதுகெலும்பு. நிதிகள் வீணாவதையும் கொள்ளையடிப்பதையும் தடுப்போம்.

சமீரா,
மாநிலத் தலைவர்
தமிழக மக்கள் மன்றம்
9095867001