Politics

இந்தியாவின் இறுதித்தேர்தல்

Spread the love

தேதி 03-மே-2019 நேரம் மாலை 05:00

இனி இப்படி செய்தி வரும் !!!

இந்தியாவின் தேர்தலையும் அதனால் அரசியலையும் மாற்றி அமைத்த ஃபனி சூறாவளி.

ஃபனி சூறாவளியானது ஒடிஷாவில் இன்று (03-மே-2019) கரையைக்கடந்தபோது Category 4 ஆக கடந்தது. இதனால் இன்னும் 20 நாட்களில் தேர்தல் முடிவு வருமா என்பது சந்தேகம் தான்.

காரணம் இன்னமும் பகுதி 5, பகுதி 6 மற்றும் பகுதி 7 க்கான தேர்தல் நடக்கவேண்டிய தொகுதிகள் ஃபனி தற்போது பாதித்து கொண்டிருக்கும் மேற்கு வங்கத்தில் 7+8+9=24 தொகுதிகளும் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4+4+3=11 தொகுதிகளும் உள்ளன. இவற்றில் மோசமாக பாதிக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் தள்ளிப்போனால் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளது. காரணம் மே 23 வாக்கு எண்ணிய பிறகு இங்கே தேர்தல் நடத்தினால் அது முடிவுகளை தீர்மானிக்கும் வலிமை உடையதாகிவிடும். ஆதலால் தான் பகுதிவாரியாக தேர்தல் நடத்தி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகின்றது. ஆதலால் தான் வாக்கு எந்திரங்களை ஒரு மண்டலத்திற்க்கு மேல் ஊறுகாய் போட வேண்டியதாகி விட்டது.

தவிர ஒடிஷாவின் 21 தொகுதிகளுக்கும் பகுதி 1 ஆரம்பித்து பகுதி 4 வரையில் 4+5+6+6=21 என எல்லா வாக்குப்பதிவுகளும் முடிந்து விட்டது. ஆனால் வாக்கு எந்திரங்களும், VVPAT எந்திரங்களும் எத்தனை தொகுதிகளில் இந்த ஃபனியால் அங்கு ஜலசமாதி அடைந்தன என்ற தகவல் இனிதான் வரும். வாக்குப்பதிவு முடிந்த உடன் பேட்டரி பேக்குகள் அகற்றப்பட்டு விடும். அப்படி செய்யாமல் இருந்திருந்தால் லித்தியம் பேட்டரியில் தண்ணீர் பட்டால் தீபாவளி தான் :(. VVPAT ல் ப்ரிண்ட் ஆகியவைகள் தண்ணீர் பட்டால் ஒன்றோடு ஒன்று ஒட்டி உறவாட ஆரம்பித்து விடும். பிரித்து எண்ணுவதெல்லாம் பெரும்பாடு தான். அதன் உள்ளே பாம்பு நுழைய முடியும் போது ஃபனியால் வந்த பானி (நீர்) நுழையாத என்ன ?

எனக்கென்னவே இது இந்தியாவின் இறுதித்தேர்தல் என்றே தோன்றுகிறது. இனி நடக்க இருப்பதைப் பார்ப்போம்.

எச்சரிக்கை : இதை வைத்து paid media களில் செய்தி போட்டால் நான் காப்பிரைட் வழக்கு தொடுக்க வேண்டி வரும். 🙂 ஆதலால் பேமெண்ட் கொடுத்த பிறகு செய்தியாக்கவும் 😛 😛

Muhammed ismail h .

ஒரு சூறாவளியானது அரசியலை மாற்றியமைக்குமா என கேட்பவர்களுக்கான விளக்கம் இது.

1970 வருடம் நவம்பர் 3ம் தேதி வங்காளவிரிகுடாவில் உருவான போலா சூறாவளியானது நவம்பர் 12 ம் தேதி அன்றைய கிழக்கு பாகிஸ்தானை தாக்கியது. அதன் வகையும் 4 தான். அதில் 5 லட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட மக்கள் இறந்து விட்டனர். இன்றைக்கு வரை அதிக மக்களை கொன்ற சூறாவளி அந்த போலா தான்.

அன்றைக்கு மேற்கு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி புரிந்த யஹ்யா கான் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யவில்லை. சூறாவளிக்கு பின்னரான நிவாரணப்பணிகளில் மெத்தனமாக இருந்த காரணத்தினால் அடுத்த வந்த தேர்தலில் அங்கே அவாமி லீக் பெருவாரியாக வெற்றி பெற்றது. அதன் பிறகு அங்கே உள்நாட்டுப் போர் ஏற்ப்பட்டு அதில் இந்தியா தலையிட்டு பங்களாதேஷ் என்ற நாடு உருவானதெல்லாம் என்னைப் போல வரலாற்றை இஷ்டப்பட்டு படித்தவர்களுக்குத் தான் தெரியும். கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து படித்தவர்கள் மதிப்பெண் வாங்கியதும் மறந்து விடுவார்கள் 😛

https://en.wikipedia.org/wiki/1970_Bhola_cyclone