FEATUREDGeneralLatestNewsSocialmedia

ஆல்பிரட் நோபல்

Spread the love

இன்று நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்.
அல்பிரட் நோபல் 1834ஆம் ஆண்டு அக் டோபர் 21ஆம் தேதி ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்தார். இவர் தன் கல்வியை ரஷ்யாவில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கு எந்திரவியலில் சிறப்பு பயிற்சி பெற்றார். வெடிமருந்து உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக நைட்ரோ கிளிசரின் போன்ற வெடி மருந்துகளைப் பற்றிய ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டார்.டைனமைட் எனப்படும் வெடிமருந்தை இவர்தான் கண்டுபிடித்தார்.
நோபலின் வெடிமருந்து கண்டுபிடிப்பு பெரும் புகழையும் செல்வத்தையும் ஈட்டியது. நாடு முழுவதும் டைனமைட்டிற்கு அமோக வரவேற்பு இருந்தது. இதன் மூலம் நோபல் பெரும் செல்வந்தர் ஆனார். எனினும் தான் கண்டுபிடித்தது அழிவுப் பொருளாகையால் அதற்காக மனம் வருந்தினார். இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்த இவர், தான் பெற்ற செல்வங்களை மக்களுக்கே வழங்க தீர்மானித்து அறக்கட்டளையொன்றை நிறுவினார். அந்த நிதியிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசானது நோபல் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே கண்டு பிடிப்புகளுக் காக வழங்கப்படும் மிகப்பெரிய பரிசு நோபல் பரிசாகும்.

*🐥ஊர்க்குருவி*