FEATUREDGeneralTravel

ஆகும்பே தென்னிந்தியாவின் சீரபுஞ்சி

Spread the love

ஆகும்பே(AGUMBE).

இது மங்களூர் இருந்து ஒரு 100 km தொலைவில் shimoga மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து ஒரு 2300 அடி உயரத்தில் இருக்கும் ஒரு மலை கிராமம்… இதை தென்னிந்தியாவின் சீரபுஞ்சி ன்னு சொல்றாங்க.. ஏன்னா இங்க வருடத்தில் அதிகப்படியான நாட்கள் மழை பெய்யுமாம்.. இங்குதான் இந்தியாவில் பத்தாவது பெரிய நீர்வீழ்ச்சி (barkana water falls )இருக்குதாம். இது ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கு தான் இந்தியா விலே ராஜா நாகங்கள் நிறைந்து கணபடுகிறதாம் அதை தவிர நம்ம சிறுத்தை புலி யானை போன்ற நண்பர்களும் அதிகம்..

கொழுக்குமலை தீவிபத்து க்கு பிறகு நாங்கள் போகும் முதல் மலையேற்றம்.. என்னடா இவனுக மலை மலையா சுத்தராணுகளே, இவனுகளுக்கு வேற வேலையே இல்லையானு நினைச்சுடாதீங்கா .. மலையேற்றம் என்பது எப்போதுமே அழகான பசுமையான நினைவுகளை தன்னகத்தே கொண்டது…. ஒருமுறை போய் பாருங்க அப்புறம் எப்படா அடுத்த மலை ஏறலாம்னு யோசிப்பீங்க.

நான் சொல்றது மருதமலையோ பழனி மலையோ ஏறிட்டு hiked to palani hills, hiked to maruthamalai hills nu caption oda status போடறது இல்லை.. கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலைகள் , ஒரு நாளைக்கு 20 -30 கி.மீ தொலைவு பயணம் அடர்ந்த வனத்துக்குள்ள இருக்கும்… பசி சோர்வு தாகம் மழை வெயில் ன்னு எதுக்கும் கவலை படாம காட்டுக்குள்ளார உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கணும்.. சில இடங்களில் தண்ணி கூட கிடைக்காது. எல்லா கஷ்டத்தையும் தாங்கிட்டு மலை உச்சிக்கு போனா கிடைக்கும் சந்தோசம் இருக்கே அது அளப்பரியது அத அனுபவிச்சவங்களுக்கு மட்டுமே தெரியும்…

என்னோட அறிவுரை என்னன்னா வருடத்திற்கு ஒருமுறையாவது மலை ஏற்றம் போங்க ஏன்னா MEMEORIES speaks lot than MONEY does.. பணம் மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்து இதுமாதிரி சின்ன சின்னஅற்புதமான விசயங்களை தொலைச்சுடாதீங்க….

கவியரசு ராமசாமி.