FEATUREDPolitics

அத்திவரதரும் கான்சப்ட் மார்க்கட்டிங்கும்

Spread the love

#அத்திவரதரும் #கான்சப்ட் #மார்க்கட்டிங்கும்
———————————–

லாபகரமான வியாபாரத்திற்கு இரண்டு வகையான மார்க்கட்டிங் முறை உள்ளது,

ஒன்று : ப்ராடக்ட் மார்க்கட்டிங்,
இரண்டு : கான்சப்ட் மார்க்கட்டிங்.

ப்ராடக்ட் மார்க்கெட்டிங் என்றால் ஒரு பொருளைக் காண்பித்து, அதன் பயனையும், பயன்பாட்டையும், சிறப்பையும், பொருளையும் நேரடியாகக் காண்பித்து அதை செய்முறையால் விளக்கி பிறகு விற்பது.

அதே கான்சப்ட் மார்க்கட்டிங்கில் இவைகள் எதுவும் தேவையில்லை, உதாரணத்திற்கு காப்பீட்டுத் துறையை சொல்லலாம்,

நாளை நீ விபத்துக்குள்ளாவாய், செத்து விடுவாய், மகள் திருமணம் என்று மனிதனின் கூச்சப் புள்ளியை அல்லது பலகீனங்களை மையப்படுத்தியே கருத்தை முன்வைத்து மார்க்கட்டிங் செய்வது.

இந்த கான்சப்ட் மார்க்கட்டிங்தான் இன்று உலகிலேயே அதிக லாபம் தரும் துறையாக உள்ளது என்பதை எந்த வியாபார வல்லுனர்களாலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இது ஏறக்குறைய கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையாகும்.

இதெல்லாம் அறிவியலும், சந்தையும் விரிவடைந்த நிலையில், பெரு முதலாளிகள் லாபம், லாபம், மேலும் லாபம் எப்படி ஈட்டுவது என சிந்தித்து ஆய்ந்து கண்டறிந்த வியாபார யுக்தி.

ஆனால்..! வரலாறு வசப்படாத, அல்லது தெளிவில்லாத காலத்திலேயே இந்த கான்சப்ட் மார்க்கட்டிங்கை கண்டு பிடித்து, அதை இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டிலும் தோல்வியடையாத நல்ல லாபம் கொழிக்கும் ஒரு தொழிலாக மாற்றி,

அதற்கு பக்தி, புனிதம், மறு பிறப்பு என்று பெயரும் சூட்டி வெற்றி கரமாக நடத்தி வரும் பார்ப்பனர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

கிரியேசன் தியரி,
எவாலுவேசன் தியரி,
இவை இரண்டில்தான் உலக தத்துவங்கள் அனைத்தும் அடங்கியிருக்கிறது.

ஆனால் இவைகளின் சொற்களைக்கூட கண்டு பிடிக்காத காலத்தில், மக்களிடம் நேரடியாக சென்று மனிதனின் துன்பகரமான வாழ்க்கையை எடுத்துக் கூறி..!

இதற்கெல்லாம் காரணம் உன்னைப் படைத்தக் கடவுள்தான், பூர்வ ஜென்ம கர்மாதான் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்,உனக்கு மகிழ்ச்சியான மறு பிறப்போ, சொர்க்கமோ நிச்சயம் உண்டு…

அதற்கு இந்தக் கடவுளை கும்பிடு, இந்த சாங்கியங்களைப் பின்பற்று என்று கூறி திறம்பட கான்சப்ட் மார்க்கட்டிங்கை நடைமுறைப் படுத்தியது மட்டுமல்லாமல்,

தனது சந்தைக்கான நிரந்தர நுகர் – வோனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தக்க வைக்க எவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

கருத்தை மட்டும் நம்பி தொடங்கப் பட்டப் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதியில் ஓடிய வரலாறெல்லாம் நாம் அறிந்ததுதான்..!

ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கான்சப்ட் மார்க்கட்டிங்கை மட்டும் நம்பி மத நிறுவனங்கள் இந்த நாகரீக, அறிவியல் காலத்திலும் வெற்றிகரமாக நடை போடுகிறது என்றால் இது எப்படி சாத்தியம்..!?

மத நிறுவனங்களின் வெற்றியே மக்களை ஒரு மௌடீகத்திலும், தொடர்ந்து அச்சத்திலும் ஆழ்த்துவதில்தான் இருக்கிறது அவர்களின் கான்சப்ட் மார்க்கட்டிங் வெற்றி.

ஆம்..!
ஒரு நாளில்..! நல்ல நேரம், ராகு, குளிகை,
வாரத்தில்..! வெள்ளி, செவ்வாய்,
மாதத்தில்..! அமாவாசை, பௌர்ணமி,
வருடத்தில்..! தீபாவளி, கார்த்திகை, பூசம், தேர், திருவிழா,

என..!
மனிதனை சிந்திக்கவே நேரமில்லாத அளவிற்கு அவனை தொடர்ந்து மத, கடவுள் சிந்தனையிலேயே ஆழ்த்துவதில் இருக்கிறது மத நிறுவனங்களின் வெற்றி.

இது அந்த மதம், இந்த மதமெல்லாம் கிடையாது, எல்லா மதத்திற்கும் ஒரே பார்முலாதான், அதுவும் சக்சஸ் பார்முலாவான கான்சப்ட் மார்க்கட்டிங் பார்முலாதான்.

எப்பவாவது மனிதனுக்கு அறிவியல் வெளிச்சம் பட்டு, விழிப்புணர்வு ஏற்படுமானால், எந்த அறிவியலை காலமெல்லாம் எதிர்த்து தனது மதக் கருத்துக்களை நிறுவினார்களோ, அறிவியலாளர்களைக் கொன்றுப் புதைத்தார்களோ,

ஆஹா..! பார்த்தாயா அந்தக் காலத்திலேயே எங்கள் வேத அறிவியல் அறிவை..!? இதைத்தான் நாங்கள் அன்றே சொன்னோம் என்றுக் கூறி, தன் வயிற்றுப் பிழைப்பிற்காக, கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் அறிவியலின் பின்னால் போய் ஒழிந்துக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள்..!

இப்படி எந்த சூழலிலும் தனது பொய்யை நிலை நிறுத்த, இந்த மத வாதிகள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்த இடத்தில்தான் உதாரணத்திற்கு நாம் காஞ்சி அத்திவரதரை நினைவுக்கூற வேண்டியிருக்கிறது..!

குளத்தில் மூழ்கியவர் மக்களைக்காண நாற்பதாண்டு களுக்கு ஒரு முறை தரைக்கு வருகிறார்,

வந்தவர் நேரே மக்களைச் சந்திக்கவில்லை, அரசு செலவில் இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்று கோடிக் கணக்கான ரூபாய்களை கொட்டி விளம்பரம் செய்து, பஸ் வசதி, ரயில் வசதி செய்துக் கொடுத்து,

இதுவும் போதாதென்று அத்திவரதருக்கு புனிதமும், சக்தி இருப்பதாகவும் பரப்புரை செய்து, மக்களை ஓரிடத்தில் கூட்டி, ஆஹா பார்த்தாயா பல லட்சம் பக்தர்கள் இதுவரை தரிசித்திருக்கிறா ர்கள்,

ஏன் நீ மட்டும் சோம்பேறியாய் வீட்டில் இருக்கிறாய், நீயும் கிளம்பி வா என்று இதுவரை வராத மக்களையும் வர வைக்கும் தந்திரமாக, தினமும் ஊடகங்களில் செய்தி போட்டு அத்திவரதருக்கு விளம்பரம் தேடித் தருகிறார்கள்..!

அவர் தானாக குளத்திற்குள்ளும் போகவில்லை, தானாக தண்ணியிலிருந்தும் வெளி வரவில்லை, அவர்களே தண்ணியில் போட்டார்கள், அவர்களே தண்ணியிலிருந்து வெளியே எடுத்தார் கள்,

ஆனால் மக்களின் அறியாமையும், சுயநலமும் பார்ப்பனர்களுக்கு காலம் தோரும் கொழுத்த லாபத்தையே தருகிறது, பாவம் விதியை நொந்த மக்கள் அத்தி வரதராவது நம் துன்பத்தைப் போக்க மாட்டாரா என்று கூடுகிறார்கள்..!

மக்கள் தன் தேவையை, சிரமத்தை அரசால்தான் பூர்த்தி செய்ய முடியும் என்று நம்பவில்லை அல்லது அரசியலாக்க அவர்களைப் பயிற்றுவிக்கவில்லை

அரசின் மீதான கோபத்தை பக்தியாய் மடை மாற்றித் தரும் பணியைத்தான் மத நிறுவனங்கள் காலம் தோறும் செய்து வருகிறது.

எனவேதான் அரசிற்கு அடிப்படை வாதிகள் பதுகாப்பு, அடிப்படை வாதிகளுக்கு அரசு பாதுகாப்பு என்று இரட்டை தண்டவாளம் போல் இருந்து மக்களை மடை மாற்றி விடுகிறார்கள்..

பொருளாதார சுரண்டல், தேச உரிமைச் சுரண்டல், இயற்கைவள சுரண்டல் என எது நடந்தாலும்,தானே சுரண்டப்பட்டாலும் கவலையில்லாமல், பணம் சேர்த்தால் போதும், தன் சந்ததி பிழைத்துக் கொள்ளும் என்கின்ற சுயநல பிராணிகளாக மதவாதிகளால் மனிதர்கள் காயடிக்கப் படுகிறார்கள். பக்தி எனும் போதையில் மூழ்கடிக்கப் படுகிறார்கள்.

அதனால்தான் எப்போது ஏகாதிபத்தியம் பழமைவாதிகளோடு கூட்டு வைக்கிறது.

இதையெல்லாம் களைந்து மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்க பெரியார் சொன்னதுபோல்..! திருவிழாவிற்கும், உற்சவத்திற்கும், தேருக்கும், மதப் பண்டிகைகளுக்கும், கோவிலுக்கும் ஐந்தாண்டுகள் தடை விதித்தால் போதும்,

அனைத்து மத சாமிகளும் தன் சொந்தச் செலவிலேயே செத்துப் போகும்.

வேத புத்தகங்களிலும், அதன் விளக்கக் கூட்டங்களிலும், சடங்குகளிலும், விசேச வைபவங்களிலும் தான் எல்லா மதக் கடவுள்களும் உயிர் வாழ்கிறதே தவிர…

கடவுள்களுக்கும், கடவுளச்சிகளுக்கும், வேத, சாஸ்த்திர குப்பைகளுக்கும்..!வயிற்றுப் பிழைப்புவாதிகள் தொடர்ந்து பேசியும், பாடியும், விளக்க உரை கொடுத்தும், திருவிழா, பிறந்த நாள், தாலி கட்டுதல் மூலமாகவும் விளம்பரம் தேடித் தருவதால்தான் இந்த கடவுள்கள் உயிரோடயே இருக்கிறது.

இவைகளை ஒரு அ
ஐந்து வருடம் தடை செய்துவிட்டு, நான் தூதன், நான் வேதத்திற்கு விளக்கம் சொல்பவன், நான் கடவுளுக்கு புரோக்கராக இருப்பவன், கடவுளை, வேதத்தைப் பரப்புபவன் என சொல்லித் திரியும் கடவுளின் விளம்பரத் தூதர்களைப் பிடித்து…

அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானவர்கள் என்கின்ற சட்டத்தின்படி, ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்து விட்டால் போதும் கடவுள் செத்துப் போவதோடு மட்டுமல்லாமல்…

மக்களும் அறிவுத்துறையில் வேகமாக முன்னேருவார்கள், ஐம்பதாண்டில் கிடைக்கும் தேச வளர்ச்சி வெறும் ஐந்தே ஆண்டில் எட்டி விடும்.

பசி, பட்டினி, கொலை, கற்பழிப்பு, ஏழை, பணக்காரன், பொய், வஞ்சம், ஏமாற்று, விபச்சாரம் எல்லாம் நீங்கி மனிதர்கள் இன்ப வாழ்க்கையில் ஈடு படுவார்கள் என்பதுதான் கருத்து.

இறுதியாக..!?
விளம்பரமோ, மார்க்கட்டிங் தந்திரமோ, அரசின் ஆதரவோ இல்லாமல் எந்த மதக் கடவுளும் இந்தப் பூமியில் உயிர் வாழ முடியாது..!!

அத்திவரதர் நமக்கு C.D.M….
அவாளுக்கு A.T.M….

Venkat srinivasan .from fb