Nature

வெல்வெட் நெற்றி பசையெடுப்பான்

Spread the love

பொரிவரை பாறை ஓவியங்கள பார்த்துட்டு திரும்ப கரிக்கையூர் வந்ததும் எல்லோரும் அங்க இருந்த ஓர் வீட்டில் சற்று இளைப்பாற அமர்ந்தாங்க.டீ ரசம் லாம் போட்டு கொடுத்தாங்க அந்த வீட்டின் உரிமையாளரான ஓர் அக்காவும் லட்சுமி பாட்டியும்..அத குடித்ததும் ஓர் பறவை எனது கண்களில் தென்படவே சட்டுனு படவிய கையில் எடுத்து தூரத்துல இருந்து எடுத்தேன்.பக்கத்துல போய் எடுப்பா பறந்து போனாலும் பத்து பதினைந்து நிமிடங்கள்ள திரும்ப வந்துடும்.அந்த மரத்துல இருக்குறது தான் அதோட கூடு னு சொன்னதும் நானும் வேலுதரன் ஐயாவும் சிட்டா பக்கத்துல போய் நிழற்படமா எடுத்தாச்சு.

என்ன பறவை இது புதுசா இருக்கேனு பார்த்தா
நம்ம வெல்வெட் நெற்றி பசையெடுப்பான்.
தமிழகத்துல மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளிலும், பசுமை மாறாக் காடுகளிலும் பருவமழை பெறும் இலையுதிர் காடுகளிலும் இதனை பார்க்கலாம்.

அதோட உடலின் மேற்பகுதி ஊதா கலந்த நீலமாகவும், உடலோட கீழ் பகுதி சாம்பல் தோய்ந்த இளஞ்சிவப்பு நிறமாகவும், நெற்றி வெல்வெட் கருப்புலயும் இருக்கு.மேவாயும் தொண்டையும் வெண்மையா இருக்கு.

தலைவர் விஜயகாந்த் ஃபேன் போல.மரத்துல மேல்நோக்கி ஏறுவது மட்டுமின்றி, எந்த திசையிலும் மேலும், பக்கங்களிலும், கீழ்நோக்கியும் ஓடுது. அடிக்கடி கிளைகளின் கீழ்ப்பக்கங்களில் தலைகீழாக, முதுகு தரைப்பக்கமாகத் திரும்பி இருக்கும் படியும் ஓடுது. சாதாரணமாகப் பறவைகள் கிளையைக் கால்விரல்களால் பற்றிக் கொண்டு உட்காருவது போல இதுவும் உட்காரக்கூடும். ஆனால், இது மிக்க முயற்சியுடனும், துடிதுடிப்பாகவும் சோம்பல் எதுவும் இல்லாமலும் இருக்கும் இயல்பை சிறப்பாகப் பெற்றுள்ளது. சீழ்க்கை ஒலி கொடுத்து ஒன்றோடு ஒன்று பேசிக்குறது பார்க்க அவ்வளவு அழகு.

முன்மென்பட்டுப் பச்சைக்குருவி – வெல்வெட் நெற்றி பசையெடுப்பான் – பளபளக்கும் நெற்றி – மரம் இறங்கி | கரிக்கையூர் | நீலகிரி மாவட்டம் | தமிழ்நாடு

VELVET FRONTED NUTHATCH – SITTA FRONTALIS | KARIKKAIYUR | NILAGIRI DIST | TAMILNADU
https://www.facebook.com/saravanamania?__tn__=%2CdC-R-R&eid=ARAevIiRc01z6llqJYw9WEs5rD7UNmPBVU87x19PkzT7gdYFOv8WHC0eTp5RZfFne6duTeCzQeSDl-Kd&hc_ref=ARQp_230A5YKz4zVWkB_Hp2VlNZ_lHyx9Rvz2s3OBHKS-BnNEtfr7DgR0exIgDHxP0M&fref=nf

Leave a Reply