வெண்தொண்டை மீன்கொத்தி HALCYON SMYRNENSIS

Spread the love

வழக்கம் போல சென்னைல வயல்வெளிகளையும் மரங்கள் அதிகமாக காணப்படும் இடங்களையும் தேடி போற வழில நம்மாலு வெண்தொண்டை மீன்கொத்தி உட்கார்ந்து இருந்தாப்ள.விடுவோமா பறக்குறதுக்குள்ள படவில படம்புடுச்சுட்டு வந்தாச்சு.

மீன்கொத்திப் பறவை இனங்களில் மிகப் பெரியது வெண்தொண்டை மீன்கொத்தி (ஒயிட் த்ரோட்டட் கிங்ஃபிஷர்). இவற்றின் தொண்டைப் பகுதி வெண்மையாக இருப்பதால் இந்தக் காரணப் பெயர். நீர்நிலைகளில் இதை அதிகம் பார்க்க முடியும்.

இது ஒரு பிரதேசப் (டெரஸ்ட்ரியல்) பறவை. அதாவது, குறிப்பிட்ட ஓரிடத்தில் தனக்கான உணவு இருக்கிறது என்று தெரிந்தவுடன், அதே இடத்துக்கே திரும்பத் திரும்ப வரும் குணம் கொண்டது.

இவை சுமார் 28 செமீ நீளம் வரை வளருமாம். நன்கு வளர்ந்த நிலையில் இப்பறவையின் முதுகு, இறக்கைகள், வால் ஆகியன பளிச்சென்ற நீலநிறத்தில் இருக்கும். இதன் தலை, தோள், அடிவயிறு பழுப்பு நிறத்திலும் தொண்டையும், மார்புப்பகுதியும் வெள்ளையாக இருக்கும். பறக்கையில் இதன் இறக்கையில் வெள்ளைப் பகுதிகள் தெரியும்.

விவசாயத்துக்கு ஊறு செய்யும் எலிகள் போன்றவற்றைப் பிடித்து உண்பதால், இந்தப் பறவைகள் விவசாயிகளுக்கு நண்பராக உள்ளன. ஆனால் அதே நேரம், ஒடிசாவில் உள்ள மங்கலஜோடி போன்ற இடங்களில், மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களைத் தங்கள் பகுதிகளில் காய வைத்திருக்கும் நேரத்தில், அவற்றை வந்து உண்பதால், மீன்கொத்திகள் மீனவர்களுக்குப் பகைவர்களாகவும் மாறிடுது.

மீன்கள்தாம் இவற்றின் முக்கிய உணவு. என்றாலும், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள், பல்லிகள், தவளைகள் போன்ற ஊர்வன உயிரினங்கள் போன்றவற்றையும் இந்தப் பறவைகள் சாப்பிடுது.

வேட்டைக்கு நிற்கும் போது தான் பார்த்தேன்.டாட்டா காட்டுறதுக்கு கூட கொஞ்ச நேரம் நிற்கல.வெகு வேகமா பறந்து போய்ட்டாப்ள.அடுத்த முறை நன்றி சொல்லனும்.

வெண்மார்பு மீன்கொத்தி – வெள்ளை நெஞ்சு மீன்கொத்தி – பொன்மான் – விச்சிலி – சிச்சிலி – கலக்ககுருவி – பெருமீன்கொத்தி | சென்னை | தமிழ்நாடு | இந்தியா

WHITE THROATED KINGFISHER | HALCYON SMYRNENSIS | WHITE BREASTED KINGFISHER | SMYRNA KINGFISHER | CHENNAI | TAMILNADU | INDIA

Leave a Reply