வறட்டு இருமல்

Spread the love

குளிர்காலத்தின் தொடக்கத்தில் வரும் இருமல். வறட்டு இருமல். வந்தால் சில வாரங்கள் வரை போகாது. வருடாவருடம் வரும். இந்தமுறையும் வந்தது என் பள்ளிசெல்லும் மகனுக்கு.

இஞ்சி சாறு+தேன் அல்லது வெங்காய சாறு+தேன் என்பது கைமருந்து. அதுபோக எப்போதும் போகும் ஹோமியோபதி மருத்துவச்சியிடம் சில சின்ன வில்லைகளை வாங்கி விழுங்கியாயிற்று. இருந்தாலும் வறட்டு இருமலால் தூக்கம் குறைந்தது. காலாண்டு தேர்வு நேரம்.

“முட்டாளே ! காலத்தில் ஒரு மருத்துவரிடம் காண்பித்திருக்கவேணாமா ! படித்தவன்தானே நீ ?” என்று ஆகாயத்திலிருந்து ஒரு அசரீரி மண்டையில் ஒலிக்க உடனே பக்கத்தில் உள்ள ஒரு குடும்ப மருத்துவரிடம் ஆஜர்.

கூச்சமாகவெட்டிய மயிரில் தாமிரநிற சாயம் பூசிக்கொண்டு குருவிக்கூடு போல சிகைவைத்துள்ள அலட்டலான 55 வயது நவீன மருத்துவர். கேள்விகள் கேட்டார், பரிசோத்தித்தார், எப்போதும்போல ஒரு பாகு மருந்தும் (syrup) , மூன்று மாத்திரைகளும் எழுதிக்கொடுத்தார். ஒன்றுமில்லை, 5 நாளில் குணமாகவில்லையென்றால் ரத்தத்தை மேலும் பரிசோதிப்போம் என்று காற்புள்ளி வைத்தார்.

நவீன மருத்துவர்கள் அப்படித்தான். “எல்லாம் நலம், ஆனால்…..” என்று இழுப்பார்கள். நல்லவர்தான்.

எதேச்சையாக இந்த மருந்துகள் செய்யும் வேலையை இணையத்தில் பார்த்தபோது திடுக்கிட்டேன். அவையாவன.

Deletus Pearls Capsule : பார்க்க ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இது தொண்டைக்கு சென்று இருமல் உண்டுபண்ணும் கிருமிகளிடம் போரிடும் என்று நீங்கள் கற்பனை செய்தால் நீங்களும் நம்மைப்போன்ற ஒரு அப்பாவி.

இந்த மருந்து ரத்த நாளங்களை சுருக்கி சுலபமாக மூச்சு விடவைக்கும். இருமலை உண்டாக்கும் நினைவை உங்கள் மூளையில் எழவிடாமல் நினைவை அமுக்கும். இதன் பக்கவிளைவாக, நாளங்கள் சுருங்குவதால் ரத்தஅழுத்தம் உச்சத்துக்கு போகும். மனிதனை மப்பு நிலைக்கு (Drowsy) கொண்டுசெல்லும் அல்லது பதற்றம் (Nervous and excitable) உண்டாக்கும்.

அடுத்தது MOON FX TABLET. இது உடம்பை ஒவ்வாமை (allergy) கொள்ளவிடாமல் அதை அமுக்கும். இது ஆஸ்துமாவுக்கு (?) கொடுக்கப்படும் மருந்து ! பக்கவிளைவாக, காய்ச்சல் போன்ற உணர்வு, நடுக்கம், தலைவலி, வயிற்றுவலி, வாதம் வந்தாலும் வரும்.

மூன்றாவது Defcort 6 mg Tablet. இது வீக்கத்தை குறைத்து உடலின் நோய் எதிப்பு சக்தியை குறைக்கும். (ஆமாம் !). நம் உடலில் கான்சர் போன்ற வேண்டாத செல்கள் வளரும்போது அதை நம் உடலே எதிர்க்கும். அதனால்தான் நம் எல்லார் உடம்பிலும் புற்றுநோய் செல்கள் இருந்தாலும் இயற்கையே அதை வளரவிடுவதில்லை. இந்த புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை இந்த மருந்து தாற்காலிகமாக குறைக்கும்.

பக்கவிளைவாக திடீரென்று காதில் நீளமாக முடிவளருவது உண்டாகலாம். பசி கூடும், அடிக்கடி மூத்திரம் போகும், முகம் வீங்கும், தோள் பட்டை வீக்கம் (Cushingoid syndrome) வரலாம். சுருக்கமாக சொன்னால் நீங்கள் ரோட்டோரத்தில் காய்ச்சிய எண்ணையில் பக்கோடா சாப்பிட்டால் உங்கள் உடம்பு உங்களை புற்று நோயிலிருந்து காப்பாற்றாது.

இந்த மருத்துவர் நல்லவர்தான். அவரிடம்தான் நாளையும் போவோம். மருந்து கம்பெனிகள் கண்டுபிடித்து சொல்லிக்கொடுப்பதை அவர் விற்கிறார். அது அவர் பிழைப்பு. நான்தான் மருந்தை ஆராயக்கூடாது. ஆனால் நோய்க்கு சரியாக கொடுக்கப்படும் இது மருந்துதானா ? இல்லை நோயாளிகளை வலியில்லாமல் மயக்கத்தில் வைத்திருக்கும் போதையா ?

எந்த உபாதைக்கும் உடனே வலிநிவாரணி கொடுக்கிறார்கள். இது நரம்புமண்டலத்தை செயலிழக்க செய்து வலியில்லாமல் செய்கிறது. பிரவசத்துக்கு வலிநிவாரணி கொடுத்தால் குழந்தையை தாய் வெளியே தள்ளுவாளா அல்லது வயிற்றை கிழித்து எடுக்கவேண்டுமா ? காயம்பட்டாலும், வீங்கினாலும், அறுவை சிகிச்சை செய்தாலும், எல்லாவற்றுக்கும் மயக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து. (anasthetics)

நவீன மருத்துவம் அல்லது அறிவியல் எதை குறிவைக்கிறது ?

தண்டுவடத்தை, மூளையை, நரம்பு மண்டலத்தை குறிவைத்து ஒரு வித போதையில் ஆட்படுத்துகிறது. பாக்டீரியாவையும், வைரஸையும் உடம்பு பார்த்துக்கொள்ளும். காய்ச்சல் இருக்கும்வரை இருந்துவிட்டுத்தான் போகும். வந்த வியாதியை உடனே குணப்படுத்தி நான் பார்த்ததில்லை. சுளுக்கு ஏற்பட்டால் உடனே எதோ ஒன்றை ஸ்ப்ரே செய்கிறார்கள். இது நரம்பை அல்லது மூளையை தாக்கி வழியை உணராமல் செய்யுமே ஒழிய சுளுக்கை குணப்படுத்தாது.

பல்லை குடைவதற்கு நேரடியாக நரம்பை மறந்துபோகும் ஒரு ஊசி. அருகில்தான் உங்கள் மூளை.

விவசாயத்தில் கூட காணப்படும் பல்வேறு மருந்துகள் எல்லாமே செடியின் அல்லது பூச்சியின் நரம்புமண்டலத்தைத்தான் தாக்குகின்றன. மரணம் வரை கொண்டுசெல்கின்றன. யவத்மாலில் கொத்து கொத்தாக பருத்தி விவசாயிகள் அண்மையில் செத்தார்கள் (killer pesticide, Profex Super, is a combination of Profenofos and Cypermethrin). கண் தெரியாமல் போய்விடும்.

இந்த ரசாயனங்களைத்தான் நாமும் தினமும் காய்கறிவழியாக சாப்பிடுகிறோம். எனக்கு தெரிந்த ஒரு மறவர்குல அண்ணா நெடுநெடுவென்று புல்லட்டில் வளையவருவார். விவசாயி. திடீரென்று முதுகெலும்பில் புற்றுவந்து கடுமையாக நோயுற்று இறந்துபோனார். இரசாயனம்தான் காரணம்.

நிற்க. ஆலகால விஷத்தை பேசவில்லை. அதுவாவது ஈரலை மட்டும் பாதிக்கும். இங்கே குறிப்பிடுவது நரம்பை, மூளையை பாதிக்கும் ரசாயனங்கள்.

என்னுடைய நண்பனின் விடலை பிள்ளை காதலிக்க தொடங்கினான். அதை சமாளிக்க தெரியாமல் பள்ளியும், பெற்றோர்களும் மனவியல் மருத்துவரிடம் ஏதேதோ மாத்திரைகளை வாங்கி விழுங்கச்சொன்னார்கள். 2 வருடமாகிறது. நன்றாக படித்த மாணவன் படிப்பில் இப்போது சுமார். தூங்குவதற்கு அந்த மாத்திரை வேண்டுமென்கிறான். அடிமையாகி விட்டான் போலும்.

எனக்குத்தெரிந்து பெண்மணிகள் நிறைய ஆன்டி. டிப்ரஷன் மாத்திரைகளை விழுங்கி வருகிறார்கள். அது முதலில் டோலோபரில் தொடங்கும்.

நீங்கள் வீட்டில் சாதாரணமாக உபயோகிக்கும் கொசு மருந்துகள் விஷமல்ல. அவை கொடியவை. அவை கொசுவின் நரம்பு மண்டலத்தை தாக்கி மயக்கத்தை உண்டுபண்ணுகின்றன. விளம்பரத்தில் கூட கொசு, மயங்கி விழுவதாகத்தான் வெட்கமில்லாமல் காண்பிப்பார்கள். DEET affects cells in a manner similar to nerve gas, and enhances the toxic effects of a common pesticide. அது நரம்புமண்டல போதை. அதேபோலத்தான் நவீன எலிமருந்தும். எலியை பைத்தியம்பிடிக்கவைத்து உங்கள் வீட்டிலிருந்து தள்ளிப்போய் சாகவிடும். என்று பெருமையாக விளம்பரம் வேறு. அதேபோலத்தான் எல்லா மருந்தும்.

இன்றைக்கு சாதாரணமாக கொலையும், கற்பழிப்பும், தற்கொலையும் நடக்கிறதென்றால் அது ஒருவித மயக்கம். மலைமுகட்டில் செல்பி எடுத்து செத்துப்போகும் சிறுவர்களுக்கு வலி தெரிவதில்லை. ஆழம் தெரியாத மப்பு, போதை. வாரம் முடிவில் போதையேற்றிக் கொள்ளும்
கலாசாரம். போலி சாமியார்கள் பக்தர்களை பகிரங்கமாகவே போதையேற்றுகிறார்கள். குடிகாரர்கள் போதையேற்றுகிறார்கள்.

உணவில் கலக்கிறார்கள். சிறுவர்கள் பெவிகால் போன்ற சில வாசனை பண்டங்களுக்கு அடிமையாகிறார்கள். இரானிய தேநீரில் அபின் தடவுகிறார்கள். கஞ்சாவை சட்டபூர்வாமாகவேண்டுமென்று படித்தவர்கள் (அமெரிக்கா வாழ் இந்தியர்கள்) வரிந்து எழுதுகிறார்கள்.

மீண்டும் ஒருமுறை நவீனம், அறிவியல் என்ற பெயரில் நடக்கும் பித்தலாட்டத்தை தணிக்கை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது.

அதுவரை, கைமருந்துதான் தாளாண்மை அளிக்கும்.

Alwayr narayanan