யாவர்க்குமாம் வேதியியல்-3

Spread the love

யாவர்க்குமாம் வேதியியல்-3
#Chemistry_for_everyone

பழைய நாள்களில் ஊருக்கு ஒரு மந்திரவாதியோ அல்லது குட்டி(த்தாச்சி)ச்சாத்தான் படித்தவரோ இருப்பார். ஏவல், பில்லி சூனியம், முச்சந்தியில் பிண்டம் கழித்தல் என்று அவரின் மக்கள் பணிகள் மகத்தானதாக இருந்தது. Vaa Manikandan னின் லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன் சிறுகதைத் தொகுப்பிலும் இப்படி வீராவேசம் போடும் கொங்குப்புற மந்திரவாதி பற்றி ஒரு கதையுண்டு. இது போன்ற மந்திரவாதிகள் ஊரையே தம் பிழைப்புக்காக பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஊரும் பயந்தேதான் கிடந்தது. சில சமயங்களில், மந்திரவாதிகளின் செயல்பாடுகளுக்கு ஊர்மக்கள் மாறுபடுவதுபோல இருந்தால், கோபப்பட்டு ஊர் முன்னிலையில் தன் செம்புத் தீர்த்தத்தை பச்சை மரத்தின் மீது வீசித் தெளிக்க அது பசுந்தழைகளோடுப் பற்றியெரியும். தீர்ப்பு சொல்லும் நாட்டாமைகளுக்கு சொம்பு ஒரு குறியீடு என்பதைப்போல, மந்திரவாதிகளுக்கும் நிறைசொம்பு நீர் ஒரு குறியீடாக இருந்தது. எல்லா மந்திர தந்திர செயல்களும் சொம்பு நீரைக்கொண்டுதான் செய்யப்பட்டன. குட்டிச்சாத்தான்களை ஏவுவதற்குகூட சொம்புநீர்தான் மூலகாரணியாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி, மந்திர-தந்திரவாதிகள் ஊரை ஏமாற்றியதற்கும் 16 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தனிமமொன்றுக்கும் தொடர்பிருக்கிறது.
விரைவில் வாசிக்கக் காத்திருங்கள்!!

முனைவர் செ. அன்புச்செல்வன் MSc PhD MRSC