மூலிகை மூட்டுவலி இயற்கை எண்ணெய்

Spread the love
மூட்டு வலி முதல் முதுகு வலி வரை உள்ள தசை சார்ந்த அனைத்து வலிகளும் குணமாக இயற்கை எண்ணெய் தயார் செய்யும் முறை விளக்கம் – 1
மூட்டு வலி முதல் முதுகு வலி வரை குணமாக்கக்கூடிய ஓர் வலி நிவாரணியாக காணப்படும் இந்த மூலிகை மூட்டுவலி எண்ணெயை பற்றி தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்றவற்றால் கஷ்டப்பட்டு வருகின்றனர். அப்படி வலியால் கஷ்டப்படுபவர்கள் இந்த எண்ணெயை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தி பாருங்கள் உடனேயே தீர்வு காணலாம்.
தேவையான மூல பொருட்கள்:
1.நல்லெண்ணெய் – 250 மிலி
2.பூண்டு – 15 பல்
3.சோற்றுக்கற்றாழை – 2 துண்டு
4.வெந்தயம் – 1 ஸ்பூன்
5.கிராம்பு – 1 ஸ்பூன்
6.ஓமம் – 1 ஸ்பூன்
7.பட்டை – 2 துண்டு
8.எள்ளு – 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் 250 மிலி நல்லெண்ணெயை ஊற்றி அதிலே சிறிது நொறுக்கிய 15 பல் பூண்டு, வெந்தயம், கிராம்பு, தோல் நீக்கிய சோற்றுக்கற்றாழை, ஓமம், பட்டை, எள்ளு இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை சிறு தீயில் 20 நிமிடங்கள் வைத்து நன்றாக காய விட வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு இதனை நன்றாக ஆற வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக ஆறிய பின் 10 லிருந்து 15 மணி நேரமாவது அப்படியே ஊற வைக்க வேண்டும். ஊற வைக்கும் பொழுது இந்த எண்ணெயில் 8 துண்டு பச்சை கற்பூரத்தை நன்றாக பொடி செய்து போட்டு விடுங்கள். இந்த பச்சை கற்பூரமானது நாட்டு மருந்து கடைகளில் வாங்க கிடைக்கும். இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள். பிறகு ஒரூ பாத்திரத்தை கொண்டு எண்ணெயை ஒரு நாள் வரைக்கும் அப்படியே மூடி வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து வடிகட்டி கொள்ளுங்கள். அனைத்து வலிகளையும் சரிசெய்ய கூடிய மூலிகை மூட்டு வலி எண்ணெய் ரெடி. இதனை ஒரு பாட்டிலில் சேர்த்து வைத்து தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை :
●இந்த மூலிகை மூட்டு வலி எண்ணயை சிறிதளவு விரல்களில் எடுத்து வலி இருக்கும் இடத்தில் தேய்த்து, உள்ளங்கையால் நன்றாக சூடு பறக்க 5 நிமிடங்கள் வரை தேய்த்து விடுங்கள்.
●இந்த மூலிகை மூட்டு வலி எண்ணெயானது முதுகு வலி மட்டுமல்ல கை, கால் வலி, சதை பிடிப்பு இப்படி எந்த மாதிரியான வலியாக இருந்தாலும் இந்த மூலிகை மூட்டுவலி எண்ணெயை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
●இரவு தூங்க போவதற்கு முன்னாடி இந்த மூட்டுவலி எண்ணெயை தேய்த்து விடுங்க, வலி இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும். நீங்களும் வீட்டில் இந்த மூலிகை மூட்டுவலி எண்ணெயை தயார் செய்து, பயன்படுத்தி நோயில்லாத வாழ்க்கை வாழுங்கள்.

Leave a Reply