FEATUREDNature

மூன்றாம் வகுப்பு குழந்தையின் இயற்கை அவதானித்தல்

Spread the love

இயற்கை அவதானித்தல் மூலம் மூன்றாம் வகுப்பு குழந்தையின் கை வண்ணத்தில் உருவாகிய அவர் அவதானித்த பறவைகளின் கோட்டோவியம் !  Deepak Venkatachalam
மார்ச்சு 18, 2020

கடந்த மார்ச் 7 அன்று நடந்த பறவைகள் காணல் உடனான இயற்கை நடையில் தான் அவதானித்த பறவைகளை இன்று பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் மீண்டும் ஞாபகம் கொண்டு ஓவியமாக வரைந்த “சிறார் ஆதிரனுக்கு” மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 

90களில் மற்றும் இரண்டாயிரத்தில் பிறந்தோர் பிரதானமாக ரசினி-கமல், அசித்-விசய், சச்சின்-கங்குலி, டோனி-கோலி என வாழ்க்கைக்கு முற்றிலும் தேவையற்ற ஒரு மாய உலகில் நேரத்தை வீணடித்து வாழ்ந்த வாழும் நிலையில் 2010 பிறகு பிறந்த குழந்தைகள் இயற்கையை நோக்கித் திரும்புவது மனதிற்கு பெரும் நம்பிக்கையாகவும் மகிழ்வாகவும் உள்ளது !

தற்போது எந்த கல்லூரியில் பேசச் சென்றாலும் சில கேள்விகள் எழுப்புவேன்; விசய் மற்றும் அசித்தின் அடுத்த படம் என்ன, கோலி எவ்வளவு சதம் அடித்துள்ளார் போன்ற கேள்விகளுக்கு மிகச் சத்தமாக பதில்கள் கூட்டமாக வரும் அதே சமயத்தில் அடுத்ததாக அவர்கள் இருப்பிடத்தின் உள்ள சில மரங்கள் பறவைகள் ஆறுகள் என கேட்டால் மிக மிக குறைந்த சிலரின் பதில்களே வருகிறது.

இதுவரை நான் பேசிய பல கல்லூரிகளில் பத்து பறவைகள் மற்றும் பத்து மண்ணின் மரத்தின் பெயர்களை மாணவர்கள் மூலம் அறிவதே சிரமமாக உள்ளது.

இவ்வாறு ஒரு பெரும் கூட்டம் இயற்கை விட்டு விலகி ஒரு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில் “ஆதிரன்” போன்ற குழந்தைகளை இயற்கையை நோக்கி நகர்த்தும் அவர்கள் பெற்றோரும் நமக்கு கிடைக்கும் பெரும் நம்பிக்கைகளும் வழிகாட்டுதலும் ஆகும் 

பறவைகள் அவதானித்தலுடனான இயற்கை நடைகள் குழந்தைகளை இயற்கையை ரசிக்க வைத்து இயற்கை சார்ந்த சிந்தனைகளை அவர்களிடம் வித்திட சிறந்த வழிகாட்டியாக அமைகிறதை இது போன்ற குழந்தைகளின் செயல்கள் மூலம் உணர்ந்து மகிழ முடிகிறது  இது போன்ற நிகழ்வுகளை பரவலாக தொடர்ந்து முன்னெடுப்போம் !

இயற்கையோடு இணைந்து தற்சார்பாக வாழ தொடர்ந்து முற்படுவோம் !

Deepak Venkatachalam from fb

Leave a Reply