முருங்கை கற்பகத் தரு பிரம்ம விருட்சம்

Spread the love

முருங்கை #1

சதீஷ்
(Please like my page: சதீஷ்குமார் சுப்பிரமணி 🙏🙏🙏🙏)

கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.

இந்த கட்டுரையில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.

முருங்கையை “கற்பகத் தரு” “பிரம்ம விருட்சம்” போன்ற பெயர்களால் சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர். அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும். எளிதில் உடையும் தன்மை கொண்டது. இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் இக்கால தலைமுறையினருக்கு முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்புதம் தான். இது கடவுளின் கொடை.

ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் C அடங்கியது .

பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது

காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது

வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது

தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது

இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

எனவே, முருங்கையை இறைவனின் கொடை என கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இது 200 நாடுகளுக்கு மேல் உலகில் விளைகிறது.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கையின் ஒவ்வொரு பாகத்தின் பயன் மற்றும் அதை எப்படி எளிதாக மருந்தாக்கிப் பயன்படுத்துவது மற்றும் இதர தகவல்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம். முருங்கை பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது (யாருக்ககேனும் பாக்கியராஜ் படம் ஞாபகம் வருதா?)

Leave a Reply