மடையான் – குருட்டுக் கொக்கு

Spread the love
Saravana Manian P A 

ஏரிக்கரையோரமாக செல்லும் போது ஒரு கொக்கு நம்மள தாண்டி ஜுவைங்க் னு பறந்துச்சு.என்னடா இது சரியான குருட்டு பறவையா இருக்கும் போல னு நெனச்சுட்டு வண்டிய நிறுத்தி புகைப்படம் எடுக்கலாம் னு படவிய எடுத்து பதிவு செய்து பார்த்தா மெய்யாலுமே குருட்டுக் கொக்கு தான் மக்களே.இவருக்கு சாம்பல் கொக்கு, நொள்ளை மடையான் னு பல பெயர் வேற இருக்கு.இவர் கொக்கு வகையறால வர்றாப்ள.

கரையோரமா உட்கார்ந்து இருக்கும்போது மணற் பழுப்பு நிறத்துல கண்களுக்கு அவ்வளவு எளிதாக தெரியாத வண்ணம் இருந்தவரு வானத்துல பறக்கும் போது டைஃடு விளம்பரத்துல வர்ற வெண்மையா ஜொலிக்குறாப்ள.ஆமாங்க உடலின் மேற்பகுதி மணற் பழுப்பாகவும், இறக்கைகளின் மேற்பகுதி சற்று பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கு.நீண்ட கழுத்து இருந்தாலும் தோள்களுக்கிடையே இழுத்து வச்சுட்டு கூனி குருகி உட்கார்ந்திருப்பதை பார்க்க முடியுது.நீர்கரையோரத்தில் வெகு தீவிரமாக ஒரே இடத்தில் ஆடாது அசையாது மணிக்கணக்காக நின்றுக்கொண்டு கண்காணித்து தன்னுடைய மூக்கினுல் குத்திப் பிடிக்கக் கூடிய தூரத்தில் மீனை பார்த்ததும் மின்னல் வேகத்துல தன்னோட கழுத்தை நீட்டி சரட்டுனு மீனை பிடிச்சு சாப்டுது.வேட்டையாடும்போது இதற்கு இருக்கற பொறுமை மனிதனுக்கு இருந்தாலே வாழ்வின் பல சிக்கலான கட்டங்களிலும் தன்னை மீட்டு கொள்வான்.

மீன் கோடற் கிருக்கும் வழி அது வந்தெய்தும் துணையும் முன்னறிந்து தப்பாமற் பொருட்டு உயிரில்லது போன்றிருக்கு மாகலானும் எய்தியவழிப் பின் றப்புவதற்கு முன்பே விரைந்து குத்துமாகலானும் இருப்பிற்கும் செயலிற்குங் கொக்கு உவமையாயிற்று என சங்ககால நூல்களிலே இதனின் வேட்டையாடும் திறனை மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்கள்னா பார்த்துக்கோங்களேன்.

நீர் குறைந்த ஆறு,குளம்,ஏரி,வயல் னு சுத்திட்டே மீன், நண்டு, தவளை, பூச்சிகள வேட்டையாடி தனது பசியை போக்கி கொள்கின்றன.

பார்வல் கொக்கு – குடுமிக்கொக்கு – மடையான் – குருட்டுக் கொக்கு – குளத்துக் கொக்கு – வயல்கொக்கு – குளநாரை – சாம்பல் கொக்கு – நொள்ளை மடையான் | அய்யப்பாக்கம் | சென்னை

INDIAN POND HERON | ARDEOLA GRAYII | AYYAPAKKAM | CHENNAI

Saravana Manian P A 

Leave a Reply