ப்ளூ மோர்மன் பட்டாம்பூச்சிகள்

Spread the love

த ப்ளூ மோர்மன் அல்லது பாப்பிலியோ பாலி மென்ஸ்டர் என்று அழைக்கப்படும் இவ்வழகிய பட்டாம்பூச்சிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் மிகவும் பிரபலமானவை.
இந்தியாவில் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உகந்த கால நிலையைக் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் ராமநதி அணைக்கட்டு பகுதியில் சிறகடித்த இவற்றை அப்போது கையில் இருந்த மொபைல் போனை வைத்து எடுத்த ஷாட் இது!

அண்டப் பெருவெளியில் சிறு துளியாய் இருக்கும் இம் மனித இனங்கள் தன்னோடு வாழ பிற உயிர்களுக்கும் அனுமதி கொடுக்கும் வரை இவ்வுலகம் அழகாக சிறகடிக்கிறது!
பன்னீர் போன்ற தண்ணீர் சுரக்கும் அமுத காடுகளுக்குள்ளும் குடிகாரர்கள் சென்று கண்ணாடி புட்டிகளை உடைத்து விசிறி அடிக்கும் போது ஒவ்வொரு அழகிய சிறகுகளுக்கும் தீ வைக்கப்படுகிறது!

Leave a Reply