புலிகள் அழிந்தால்

Spread the love

by Kaadugal from FB

ஒரு புலி ஒரு வருடத்தில் சுமார் 45 முதல் 55 வரையிலான இரை விலங்குகளை உணவாகp கொள்ளும். இரை விலங்குகளின் எண்ணிக்கையை கொன்றுண்ணிகள் சரியான அளவில் வைத்திருக்க பெரும் உதவி செய்கின்றன.

இரை விலங்குகள் பெருகி, வேட்டை விலங்குகளின் எண்ணிக்கை குறைந்தால் காடுகளின் தரம் வெகுவாக குறையும். இறுதியில், அனைத்தையும் இழக்க வேண்டி வரும். சமநிலை இருப்பது மிக முக்கியம்.

இரை விலங்குகள் பெருகி, வேட்டை விலங்குகளின் எண்ணிக்கை குறைந்தால் காடுகளின் தரம் வெகுவாக குறையும். இறுதியில், அனைத்தையும் இழக்க வேண்டி வரும். சமநிலை இருப்பது மிக முக்கியம்.

புலியின் முக்கிய இரை விலங்குகள் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். புள்ளி மான், கடமான், காட்டு மாடு, காட்டுப் பன்றி, கேளை ஆடு போன்றவை நமது பகுதியில் இருக்கும் இரை விலங்குகள் ஆகும்.

இரலைகள் (Black Buck), Four Horned Antelope, முள்ளம் பன்றி போன்றவற்றை பிடிப்பது சவாலான ஒன்று என்றாலும் சமயத்தில் அவை பிடிபடுவது உண்டு.

சிறிய அளவிலான யானைகள் வேட்டையாடப்பட்ட நிகழ்வுகள் நம் அருகாமையில் கூட நடந்திருக்கின்றன.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் பாரசிங்கா, nilgai, hog deer போன்ற விலங்குகள் புலிகளின் உணவுப் பட்டியலில் இருக்கின்றன.

மற்ற கொன்றுண்ணிகளான சிறுத்தை, செந்நாய் மற்றும் அணைத்துண்ணியான கரடிகள் கூட உணவு பட்டியலில் உண்டு.

ஒரு புலி இன்னொரு புலியை கொன்று அதன் மாமிசத்தை உண்ட காட்சிகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போல கொன்றுண்ணிகளை உணவுக்காக என வேட்டையாடுவது இல்லை. தன்னுடைய அதிகாரத்தை, வலிமையை நிலை நிறுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவே இருக்கும்.

காடுகளில் காணப்படும் கோழி வகை பறவைகள், நமது தேசிய பறவையான மயில் போன்றவை சில நேரம் பிடிபடும்.

 

உருவத்திலும், வலுவிலும் புலிகளுக்கு நிகரான ஒரு விலங்கு நமது நாட்டில் கிடையாது.


பெரிய விலங்குகளை வேட்டையாடும் ஆண் புலிகள்

ஆண் புலிகள் பெரும்பாலும் பெரிய விலங்குகளை வேட்டையாடும் (கடமான், காட்டுமாடு). ஆண் புலிகள் பெரும்பாலும் தன்னுடைய பரந்த எல்லையை கண்காணிக்க நெடுந்தூரம் சுற்றி வர வேண்டும்.

புள்ளிமான் போன்ற சிறிய விலங்கு ஒரு பெரிய ஆண் புலிக்கு ஒரு நாள் வருவதே கடினம். வேட்டையாடி உண்பது மிகக் கடினமான, திட்டமிட்டு, மிகுந்த உடல் வலிமையை செலவிட்டு, இம்மி பிசகாமல் செய்ய வேண்டிய ஒன்று என்பதால், பெரிய விலங்குகளை பிடிப்பது சரியான ஒன்றாக இருக்கும்.

ஆண் புலிகளின் உடல் அளவிற்கு இது கூட காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து ஒன்று இருக்கிறது.

பெண் புலியின் எல்லைகள்

பெண் புலியின் எல்லைகள், ஆண் புலியை காட்டிலும் சிறப்பாக கட்டமைக்க பட்ட ஒன்றாக இருக்கும். இதற்குள் வரும் அனைத்தும் அதன் இரை என்றே வைத்துக்கொள்ளலாம். அதனால் பெரியது, சிறியது என்ற பேதம் இங்கே பெரும்பாலும் இருக்காது.

பெண் புலிகளுக்கு ஓரளவு வளர்ந்த குட்டிகள் இருந்தால், மான் குட்டிகளை உயிருடன் பிடித்து வந்து வேட்டையாட பழக்கும். குட்டிகள் வளர வளர உணவு தேவை அதிகமாக இருக்கும் என்பதால் அதிக அளவிலான இரையைப் பிடிக்க வேண்டும்.

மாடுகளை வேட்டையாடுவது எப்போது ?

வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு.

வன எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் வாழும் புலிகள் இது போன்ற பிரச்சினைகளை அதிகம் சந்திக்கும். தோல், நகம், மீசை, எலும்புகள் என ஒன்றுக்கும் உதவாத விஷயங்களுக்காக மனிதர்களால் வேட்டையாடபடுவதும் இந்த பகுதிகளில் வாழும் புலிகளே.

உணவில்லாமல், வேறிடம் செல்ல வழி இல்லாமல் ஒரு பகுதியில் உள்ள மொத்த புலிகள் தனிமைப்பட்டு முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகலாம்.


புலிகள் அழிந்தால் ……!!

அழிந்து போனால் என்ன நல்லது தானே என்று நீங்கள் நினைத்தால், உங்களை சுற்றியுள்ள வனங்கள் தங்கள் இயல்புகளை இழந்து விட்டன என்பதையும் மனதில் கொள்ளுங்கள். வனத்தின் இயல்புகள் தொலைந்தால் அது நம் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

மனிதர்களின் அல்ப ஆசைக்காக புலிகளின் இரை விலங்குகள் வேட்டையாட படுகின்றன. அதனால் இன்னொருவர் வாழ்க்கை முற்றிலும் தடம் மாறிப்போகும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இரை விலங்குகளை பாதுகாப்பது, வன எல்லைகளை விரிவுபடுத்தல் புலிகளின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று.

உருவத்திலும், வலுவிலும் புலிகளுக்கு நிகரான ஒரு விலங்கு நமது நாட்டில் கிடையாது.

புலிகளும் இராணுவ வீரர்களை போன்றவை தான். நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தில் அவர்கள் ஆற்றும் தன்னலமில்லா பணி நிறைந்துள்ளது. கருத்தில் கொள்வோம். புலிகளை, வனத்தை காக்க உறுதி கொள்வோம்.

நன்றி.

Kaadugal from FB

 

Leave a Reply