புரத சந்தை

Spread the love

புரத சந்தை:
புரதம் சரி, அது என்ன புரத சந்தை?
இதை புரிந்துகொள்ள புரதம் (protein) என்பதை நாம் இரண்டு வகையாக பிரித்து பார்போம்.
1. தாவர புரதம் (Plant Proteins)
2. மாமிச புரதம் (animal protein)

இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால் எண்கள் தான். அதாவது தாவர புரதத்தில் இரண்டு மூன்று அமினோ அசிட்கள் குறைவாகவோ காணப்படும் அல்லது இறுக்காது, மாமிச புரதத்தில் அவை கூடுதலாக இருக்கும்.

புரதங்கள் உடலுக்கு எடை மற்றும் வலு கொடுக்கின்றன. தற்போது மாமிச புரதம் அதிக அளவு உலகில் தேவையிருப்பதால், விலங்குகளை மாமிச புரதம் தயாரிக்கும் எந்திரமாக பார்க்கபடுகின்றன.
இதற்கு சிறந்த உதாரணம் தற்போது அதிகரித்து வரும் மீன் மற்றும் இறால் வளர்ப்பு.

மீன் உடலுக்கு நல்லதுதான, அதில் என்ன சிக்கல் இருக்கு?

ஆம் மீன் உடலுக்கு நன்மை. மேலும் இதில் கவனிக்க வேண்டியது மீன்களில் தான் feed conversion rate அதாவது நாம் கொடுக்கும் தீவனத்தை உடல் எடையாக மாற்றும் விகிதம் சிறப்பாக உள்ளது.
இதனால் தற்போது தீவனங்களில் ஏகபட்ட enzymes, probiotics, essential amino acids, minerals, vitamins, antibiotics என நிறைய சேர்க்கப்படுகிறது. இதனின் வேலைகள் என்னவென்றால் மீன் தீவனத்தில் இருக்கும் தாவர புரதத்தை (plant protein) முடிந்தவரை அப்படியே மாமிச புரதமாக மாற்றி விலங்கின் எடையை அதிகரிப்பது தான். புரியும்படி சொல்லவேண்டுமென்றால் அதனை ஒரு obese animal அதாவது குண்டு விலங்காக மாற்றுவதுதான் நோக்கம். இயற்கையாக விலங்கின் உடல் எடை கூடுவதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.

இது ஒருபுறமிருக்க அயல்நாடுகளில் தற்போது மாமிச புரதத்தினை அதே சுவையில் தற்போது நொதித்தல் முறையில் (Fermentation) தாவரங்களிலிருந்து செய்கின்றனர். இதன் பெயர் plant based meat அதாவது தாவர மாமிசம்.

இது நல்லது தானே, பிராய்லர் கோழி போன்ற சுகாதாரமற்ற விலங்குகளை உன்பதைவிட இது சிறந்ததுதானே என எனக்கும் தோன்றியது. ஆனால் இந்த தாவர மாமிசத்தை தயாரிக்க Genetically Engineered Organism அதாவது மரபனு கட்டமைக்கபட்ட நுண்ணுயிர் உபயோகிக்க வேண்டும்.

விரைவில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அனைத்து நாடுகளையும் சென்றடையும். ஏற்கனவே வெளிநாடுகளில் சோயா, மரவள்ளி போன்ற பயிர்கள் 90% மரபனு மாற்றப்பட்டவை என கூறப்படுகிறது, அதிலிருந்துதான் கால்நடை தீவனமும் தயாராகிறது.

இனி ஆடு கோழி, பன்னி போன்றவற்றை கறிக்காக யாரும் மெனகெட்டு வளர்க்க வேண்டாம், சாராயம் போல் அவைகளை நாங்கள் நொதிக்க வைத்து காய்ச்சி வடித்து சுவையாக தருகிறோம் உங்களுக்காக என்கிறது இன்றைய தொழில்நுட்பம்.

வானவில் செ. கணேஷ் குமார்

Leave a Reply