LatestNature

புதர் வானம்பாடி

Spread the love

புதர் வானம்பாடியானது தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.தமிழகம் எங்கும் புஞ்சை, நஞ்சை விளைநிலங்களிலும் புல்லும் புதருமான தரிசு நிலங்களிலும் காணலாம். தனது உடல் நிறத்தோடு ஒட்டி அமைகின்ற செஞ்சரள் கற்களோடு கூடிய செம்மண் நிலத்திலேயே அதிகம் காணக்கூடியது. தரையில் ஓடியபடி புல்விதைகள், வண்டு, புழு பூச்சிகளை இரையாகத் தேடும். புதர்களின் உச்சி, பாறை, தந்திக் கம்பி ஆகியவற்றில் அமர்ந்திருக்கும். ஆண் பறவை திடீரென இறக்கை விரித்து எழுந்து செங்குத்தாக 10மீ உயரம் வரை சுவீர்.. சுவீர்.. சுவீர்.. என மென்குரலில் பாடியபடி சென்று பின் சுற்றிச் சுழன்றபடி கீழே வந்து முன் இருந்த இடத்தில் அமரும். இனப்பெருக்க காலத்தில் நாள் முழுதும் சில மணித்துளிக்கொரு முறை இப்படிப் பாடிப் பறந்தபடி இருக்கும்.டிசம்பர் முதல் மே முடிய தரையில் கால்நடைகளின் குளம்பு ஏற்படுத்திய குழிவில் கோப்பை வடிவில் கூடமைத்து 3 முதல் 4 முட்டைகள் இடும்.

Leave a Reply