பருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது

Spread the love

பருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

பருந்து ,பறவைகளுக்கெல்லாம் அதிபதி போல்தான் பருந்துகள் பார்க்கபடுகின்றன.ஆனால் காண்பது தான் அரிது.அது சரி உலகில் சாதிபவர்களின் எண்ணிக்கை குறைவு தானே.இந்த பருந்துகளிடம் என்ன நாம் கற்று கொள்ள வேண்டி இருக்கிறது.

வாங்களேன் என்ன என்று பாப்போம்.கண்டிப்பாய் உங்களிடம் ஒரு நல்ல மாற்றம் ஏற்ப்படும்.

உயரமும் தனித்துவமும்:-
இந்த பருந்துகள் எப்போதும் உயர விரும்பிகள்.பறப்பதாய் இருப்பினின் கூட வசிப்பதாயினும் கூட அது உயரத்தையே தெரிவு செய்து கொள்ளும்.

நமது இலக்குகளும் நடவடிக்கைகளும் எப்போது உயர்ச்சியாக இருக்க வேண்டும்.எண்ணம் செயல் நோக்கம் எல்லாம் உயர்வானதாய் வைத்து கொள்ளுங்கள்.

எப்போதும் கூட்டத்துடன் இருப்பதில்லை.தனித்தே நிற்கும் வேட்டையானாலும் பயணம் ஆனாலும் சரி.

தூர பார்வையும் தூர நோக்கமும் கொண்ட பருந்து:-
பருந்துகளின் பார்வை நம்பமுடியாததும் அசாத்தியமானதும்.சுமார் 5 கிலோமீட்டர் வரைக்கும் இதன் தெளிவான பார்வை எல்லை இருக்குமாம்.இதன் அவதானம் உன்னிப்பானது.எல்லாத்தையும் மிக அவதானமாக அவதானித்த பின்னர் தான் ஈடுபடும்.

இதை போல நாம் எப்போது தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.அமைதியாக இருந்தாலும் கலவரமாக இருந்தாலும் எமது அவதானிப்புகள் கூர்மையாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது ? என்ன நடக்கும் ? என்ற ஊகிப்பும் அவதானமும் தேவை.எம்மிடம் அவை இல்லாவிட்டால் அவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.

புதியவை மட்டும்:-
பருந்துகள் தானாக இறந்த விலங்கு மாமிசத்தை உண்பதில்லை.தானே வேட்டையாடி உடனடியாக உண்ணும் பழக்கம் கொண்டது.

அடுத்தவர் உருவாக்கிய பாதையில் செல்வது வழமையா நடைமுறைகள் என கட்டுபட்டு கிடக்காமல் புதிய வெற்றிகரமான பாதைகளில் செல்லுங்கள் என்பதே இதன் மூலம் சொல்லப்படும் பாடம்.

முகில்களுக்கு மேலாக பறக்கும்:-
மற்றப் பறவைகள் எல்லாம் மழைக்கு ஒதுக்கம் தேடும். ஆனால் பருந்தின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது.மழையை தவிர்க்க முகில்களுக்கு ஊடக பறந்து அதை கடந்து முகிலுக்கு மேல் பறக்கும்.உலகத்துக்கு தான் மழை பெய்யும் அதற்கு பெய்யாது.

அதை போல நாம் பிரச்சனைகளுக்கு ஒதுங்காமல்.தடைகள் அகலட்டும் என்று காத்திருக்காமல் பிரட்சனைகள் ஊடாக பிரட்சனைகளை கடந்து அதை தாண்டி பயணிக்க வேண்டும்.தடைகள் தாண்டுவதை சந்தோசமாக அனுபவித்து தடைகளை தாண்ட முயற்சிப்பீர்களானால் தடைகள் சுமைகளாக இருக்காது.

நம்ப முன் உறுதிப்படுத்தி கொள்ளும்:-
ஒன்று இரையை தூக்க முன்னர் பல நேரம் வட்டமிட்டு தன் இரையையும் சூழலையும் உறுதி செய்தபின்னரே இரையை தூக்கும்.

ரெண்டாவது பெண் பருந்து ஆண் பருந்தை இச்சை கொள்ள அனுமதிக்க முன்னர் சின்ன சின்னதாய் சில சோதனைகள் செய்து போக்கு காட்டுமாம்.இது விலங்கியல் ஆய்வாளர்களின் கருத்து.

வாழ்கையில் எல்லோரையும் நம்பி விடவும் முடியாது.எல்லாத்தையும் சந்தேக படவும் முடியாது.நம்பித்தான் ஆக வேண்டும்.நம்ப முன்னர் ஒன்றுக்கு பலமுறை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.நீங்கள் நம்பபோவது நம்பகரமானது தானா என்று.

பயிற்சி பயிற்சி பயிற்சி
தாய் பருந்து ஒரு குறித்த நாட்களின் பின்னர் தன் குஞ்சுகளை கூட்டினுள் இருக்க அனுமதிக்காது.ஒவ்வொரு குஞ்சாக பயிற்சிவிக்கும்.

இது சுவாரசியமானது

கூட்டில் இருந்து குஞ்சை தள்ளி விடுமாம்.குஞ்சு பதறிப்போய் சிறகடித்து பறக்க முயலும்.ஆனால் அதனால் முதல் தடவையே பறக்க முடியாது.அது தாய்க்கும் தெரியும் கொஞ்சம் சிறகடித்து குஞ்சு தினற தாய் திடீரென குஞ்சுக்கு கீழால் பறந்து குஞ்சை தாங்கும் .இந்த ஆரம்ப கட்ட பயற்சி நிறைவடைந்த பின்னர் தான் இருக்கு டுவிச்டே.தன் சிறகில் ஏற்றி கொண்டு தாய் பருந்து தூர உயர பறக்குமாம் .குஞ்சும் ஹாயாய் சவாரி போகின்றோம் என்று இருக்கும் போது திடீரென குஞ்சை சரித்து விடும் .சற்றும் எதிர்பாராத குஞ்சு சட சட வென சிறகடிக்கும் .சற்று தாமதித்து தாய் பறவை குஞ்சை தாங்கும். கூடு திரும்பும் போது பெரும்பாலும் குஞ்சு தானாக பறந்தே வருமாம்.

இங்கு நமக்கு சொல்லி தரப்படும் பாடம் பயிற்சி, கடுமையான பயற்சி தேவை என்பதாகும்.

இன்னொரு விடயம் உங்கள் பாதுகாப்பான வட்டத்தை விட்டு வெளியே வரும் வரை உகலத்தை அறியமுடியாது .சாதிக்க முடியாது என்பதே.

இந்த பருந்து பயிற்சிகள் அது தொடர்பான அல்லதுஅதன் நடவடிக்கைகளை பிரதி பண்ணுவது போன்ற நடவடிக்கைகள் உலகின் இராணுவ கொமாண்டோ பயற்சிகளின் போது இடம்பெறும் அம்சம்.ஒசாமா பின் லேடனின் வேட்டைக்கு பின் வெளிவந்த அமெரிக்க ஷீல்ட் பிரிவு பற்றிய தகவல்கள் வெளிவந்த போது இவர்களின் பயிற்சி முறை பற்றிய விடயங்கள் பேசு பொருளானது.

இனி என்ன படித்தாயிற்று!

பருந்தாக மாறுங்கள்.

உலகத்தை கலக்க பறக்க தொடங்குங்கள்.

வாழ்த்துக்கள்.

Leave a Reply