படையை வெல்லும் பனை

Spread the love

↓↓↓↓↓↓↓★★★ பனை ★★★↓↓↓↓↓↓↓
படையை வெல்லும் பனை

என்ன படையை வெல்லும் பனையா அப்படி என்ன இந்த பனையில் உள்ளது. பனையை புசித்தோர் படையை வெல்லும் ஆற்றல் பெற்றவராவார் என்கிறது சங்கப்பாடல்.

பழம்பெரும் காவியங்கள் பனைதான் கற்பகத்தரு என்கிறது.அதாவது அமிர்தம் . அமிர்தத்தை உண்டவர்களுக்கு இறப்பே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்பூவுலகில் இறப்பே இல்லை என்பதன் பொருள் மரணத்தை காலம் தாழ்த்தி தருவிப்பதையே குறிக்கும்.

பனைக்கு அணை(அணைமரம்) என்ற பெயரும் உண்டு.பல கன எடையுள்ள தண்ணீரை அணை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது.அதே போல் பனையை தன் வாழ்வில் துணையாக கொண்டு வாழும் மனிதன் உறுதியானவனாக திகழ்வான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் கம்போடியா நாட்டு தேசிய மரமாக பனை மரம் திகழ்கிறது.

பனைக்கு பெண்ணை கூந்தல் காமம் உபதாகம் ஐந்தார் ஐந்தாலம் கரும்புரம் கரும்புல் பகற்பலி புற்றாலி புற்பதி போந்து திருணராசன் துராரோகம் திருவிராசன் குவீரம் தாளம் தருவிராசன் புல்லூதிகம் புற்பதி என பல பெயர்கள் உள்ளது.

திருவள்ளுவர் பனையை பற்றி கூறுகையில் “தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” என்கிறார்.

பனை மரம் மனிதனுக்கு 80க்கு மேற்பட்ட பலன்களை கொடுக்கிறது.இது வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு.அதையை உனர்ந்ததால் தான் பனை தமிழ்நாட்டின் மாநில மரமாக அங்கிகரித்தனர்.சங்க நூல் குறிபாபில் பனைமரத்தில் இருந்து 800 வகையான பலன் உண்டு என்கிறார்கள்.

இன்று தங்கத்தில் தாலி செய்கிறார்கள். மஞ்சள் நாணில் திருமாங்கல்யத்தைக் கோர்த்து கழுத்தில் அணிவது தாலி. பனங்காட்டுப் பண்பாட்டில் பழந்தமிழர்கள் பனை ஓலையில் மணமகள் பெயரை எழுதி, சுருட்டி, துவாரமிட்ட மணமகள் காதில் அணிவார்களாம். அதுதான் தாலி.

பனை ஓலை தாலி என்கிற ஒன்றின் பொருள் மட்டும் மாறாமல் இருந்திருந்தால் பனை காக்கப்பட்டிருக்கும்.நம் முன்னோர்கள் வகுத்துதந்த வாழ்க்கை கோட்பாட்டை சரியாக பயன்படுத்தியிருந்தால் எல்லா சுபிட்சமாக இருக்கும்.ஆனால் நாகரீகத்தால் நம் முன்னோர்கள் வகுத்துதந்ததை ஒரு துளிக்கூட நம் வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை.

பனை மரங்களை நெருக்கமாக நட்டு உயிர்வேலி எழுப்பிவிட்டால் யானை கூட உள்ளே நுழையாது. காட்டுப் பகுதிகளில் விவசாயம் செய்வோர் பனைமர உயிர்வேலி அமைப்பது நன்று.

ஒரு பனம் பழத்தில் ஒன்று முதல் மூன்று விதைகள் (நுங்கு) இருக்கும்.ஒரு பனங்காயில் உள்ள மூன்று நூங்கையும் உண்டால் சரிரத்தில் உள்ள முக்குற்றங்களும் நீங்கும் என்பது பொருள்.

ஆண்மரம் காய்க்காது அதிலிருந்து ஆணங்காய் என்ற நீளமான செதில்களுடன் பாகமே கொடுக்கக்கூடியது.தெண்ணம்பாழை மற்றும் பனைபாழை கல் இறக்கும் யுக்தி வேறு வேறு.தெண்ணை பாழை அடிக்க வேண்டும்,பெண் பனை மர பாழையை நசுக்க வேண்டும்,ஆண் பனை மர பாழையை (ஆணங்காய்) சீவ (இழுக்க) வேண்டும்.

சரி 250ml பதநீரில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது

காரத்தன்மை (Ph value) 7.2கிராம்
சர்க்கரை 28கிராம்
சுண்ணாம்புச்சத்து 35கிராம்
இரும்புச்சத்து 5.5 கிராம்
பாஸ்பரஸ் 32கிராம்
தயாமின் ( Thiamine) 82கிராம்
Riboflavin 4.5 கிராம்
Ascorbic acid 1.2 கிராம்
Nicotinic acid 674மில்லி கிராம்
புரதம் (protein) 5கிராம்
Calories 11கிராம்

Nicotinic என்பதனை தனித்தே பிரித்து உண்டால் அது தீமையை பயக்கும்.ஆனால் மற்ற சத்துக்கள் சேர்ந்து இருப்பதால் Nicotinicல் உள்ள நஞ்சு முறிக்கப்படுகிறது.இதையே மருத்துவத்தில் சத்ரு மித்ரு என்பார்கள்.அதாவது ஒரு பொருளுடன் இன்னொரு பொருள் சேரும் போது ஒன்றில் உள்ள நஞ்சு இன்னொன்றால் முறிக்கப்படுகிறது.

சரி இதைப்பற்றி இங்கு விரிவாக பேசுவதை விட நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது பனையில் இருந்து கிடைக்கக்கூடியவை நமக்கு எந்தெந்த சுகமின்மையில் காக்கிறது என்பதை பார்ப்போம்.
குஷ்டம் சயரோகம்(ஈளை இருமல் மார்ப்புவலி போன்றவை), இரத்தக்கடுப்பு மூலம், பெண்களின் சூதக நோய்கள், சொறி,சிரங்கு,பசியின்மை ,வயிற்றுப்புண், சுவாசகாசம் எனும் ஆஸ்துமா, கண் நோய்,சகல வாய்வுகளை போக்கும், இதயத்திற்கு நல்ல பலம் கொடுக்கும், பற்களையும் எழும்புக்களையும் உறுதிப்படுத்தும் இப்படி பனையின் மருத்துவ குணம் ஏராளம்.

சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு இலங்கையில் பௌத்த சமயத்தில் இருந்ததைக் காணலாம்.
நற்றிணை 303 படலில் “தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் துணை புணர் அன்றில் உய்வுக்குரல் கேட்டொறும்” என்ற வரி காணலாம்.இதன் விளகக்கத்தை வெளிப்படையாக சொல் வடிவம் கொக்கலாகாது என்பதனால் நான் இங்கு கூறவில்லை.

பனைமரக் கொடியை கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் பலராமன் வைத்திருந்ததை ஒல்காப் புகழ் தொல்காப்பியனும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கிரனாரும் கூறுகிறார்கள் என்றால் பனையின் சிறப்பு வியக்கத்தரக்கூடியவையே.
ராமாயனத்தில் மரா மரம் என்கிறார்கள்.

அருணாசலப்புலவர் பனையை ஓர் அற்புத மூலிகை என்றும் கற்பக விருட்சம் என்றும் வர்ணித்துள்ளார்.மனித குல வாழ்வுக்கு பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று புறநானூறில் 323 ஆவது பாடல் கூறுகிறது.

தமிழ்நாட்டில் திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழல்பாடி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் தல மரங்களாக வழிபடப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

மத நூல்களை பற்ற சொல்லவில்லை நம் முன்னோர்கள் மரங்களை பற்று என்றான். கடவுளை மரத்தின் அடையாளமாக வைத்தான்.கட்சிலையையும் வைத்து அதன் அருகினால் மரத்தை வளர்த்து மரத்தை சுற்றிவா என்றான்.அந்த மரத்தை சுற்றிவரும் போது அதன் மருத்துவகுணத்தையும் நாம் சுவாசிக்க முடியும் அதனால் ஆரோக்கியம் மேம்படும் கவலையால் ஏற்பட்ட மன இருக்கம் அகன்றால் மலச்சிகாகலும் அகழும் மலச்சிக்கல் தான் உடலில் உள்ள மற்ற எல்லா சிக்கலுக்கும் மூல காரணம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் நாமோ அவர்கள் சொன்ன மற்றும் வரையறுத்த வழிமுறைகளுக்கு எதிர் திசையில் செல்கிறோம்.

உதாரணமாக புதிதாக திருமணமான தம்பதியினரை அழைத்து விருந்து வைப்பார்கள்.அந்த விருந்து என்பது எல்லாமே தங்களது கைபக்குவத்தில் தயாரித்த நாட்டு சர்க்கரை இனிப்பு, மாப்பிள்ளை சம்பா அரிசி, நாட்டு கோழி முட்டை, கூவாத நாட்டு சேவல் கறி என அனைத்து நம் முன்னோர்கள் வரையறுத்த முறைகளில் அமைந்து புதிதாக தம்பதியினருக்கு இன்பம் ஊக்குவிப்பதாக விருந்து இருந்தது .இன்று விருந்து என்ற பெயரில் கடைகளில் உணவை ஆடர் செய்து பரிமாறுகிறார்கள்…வேதனை

அன்று தமிழர்களின் குலச் சின்னமாயிருந்தும் கூட இன்று பாழ்பட்டது ஏன். ஏன் ஏன் உங்களால் தான்…இதை படிக்கும் ஒவ்வொருவரும் மனிதன் என்றால் பனை மரம் நடுங்கள்.

மக்களாக ஒவ்வொருவரும் தான் மாபெரும் சக்தி.இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் பனை மரத்தை நட்டு பாதுகாத்திடுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.இந்த பதிவை படித்த பின்னர் ஒவ்வொருவரும் பனை மரம் இருக்கும் இடத்தில் சென்று பனை கொட்டை சேகரித்து வந்து மண்ணில் இட்டு வையுங்கள். முயற்சி என்பது சொல் அல்ல செயல் என்பதனை படிக்கும் ஒவ்வொருவரும் செயல்ப்படுத்தி காட்டுங்கள் தயவுசெய்து.

நாகரீகத்தால் மனிதன் எதை நோக்கி செல்கிறான் என்று தெரியவில்லை.ஆட்டு மந்தைபோல் வாழ்கிறான்.

நன்றி
விி
Saravana Kumar