FEATUREDNature

பச்சை திராட்சை பாம்பு

Spread the love
இன்றைய புத்தம் புதிய பார்வையில் நாம் காண்பது ” பச்சை திராட்சை பாம்பு ” ( Green vine snake ) ( Springing Snake )
தாழ்வான வனப் பகுதிகளில் குறைந்த புதர்கள் மற்றும் மரங்களில் சுமார் ஆயிரம் மீட்டர் உயரத்தில் , குறிப்பாக நீரோடைகளுக்கு அருகிலும் மற்றும் மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலும் காணப்படுகின்ற மிதமான விஷத்தன்மை வாய்ந்ததும் , தனது உணவான தவளைகள் மற்றும் பல்லிகளை வேட்டையாட தங்கள் தொலைநோக்கு பார்வையைப் பயன்படுத்துகின்றன.
மெதுவாக நகர்கின்ற தன்மையினால் பசுமையாக உள்ள செடி கொடிகளை தங்களை மறைத்துக் கொள்வதற்காக நம்பியிருக்கின்றன .
இந்த இனப் பாம்புகள் ‘ விவிபாரஸ் ‘ அதாவது தாயின் உடலுக்குள் வளரும் முட்டை சவ்வுக்குள் அடைக்கப்பட்டுள்ள இளம் பாம்புகளை பெற்றெடுக்கிறது. கன்னி இனப்பெருக்கம் ( Partheno genesis ) அரிதானது. ஆண் துணை இல்லாமல் நடக்கும் இனப்பெருக்கம் இது. லண்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு பெண் பாம்பானது 1885 ஆகஸ்டில் இருந்து தனிமையில் வைக்கப்பட்டதாகவும் அதற்கு ஆகஸ்ட் 1888 ல் கன்னி இனப்பெருக்க முறையில் ஒரு குட்டியை ஈன்றதாக ஒரு குறிப்பு உள்ளது.
நிலத்தில் மெதுவாக இருக்கும் போது , ஆர் போரியல் சூழலில் அதன் நகர்வு தன்மை வேகமாக இருக்கும். பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளது. அச்சுறுத்தப்படும் போது அது உடலின் பாதியை சுழல்கள் அல்லது வளைவுகளில் வீசுகிறது , அதனுடைய வாயை முடிந்தவரை அகலமாக திறந்து கண்கவர் மற்றும் பெரியதாக இருக்கும்.இதில் சில நேரங்களில் ஆத்திரமூட்டும் நபரின் முகத்தில் கண்களைக் குறிவைக்க முயற்சிப்பதும் காணப்படுகிறது. அதன் மெல்லிய உடல் மற்றும் பச்சை நிறம் காரணமாக இது பச்சை புதர்களில் எளிதில் மறைந்து விடும்.
இந்த பாம்பானது தன்னை அச்சுறுத்துவரின் தலை , கண்கள் மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்கு அருகில் கடிக்கும் காரணத்தினால் இதற்கு ‘ கண் – கொத்தி ‘ அல்லது ‘ கண் – பறிப்பவர் ‘ என்றப் பெயரை பெற்றது. இதனுடைய விஷமானது மிதமான சக்தி உடையது. வீக்கம் ,வலி ,சிராய்ப்பு , உணர்வின்மை மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும் எனவும் , இந்த வலியானது மூன்று நாட்களுக்குள் குறையும் என அறியப்படுகிறது.
இந்த பாம்புகள் 5 அடி நீளத்திலும் , பிரகாசமான பச்சை அல்லது வெளிர் பழுப்பு , உடலின் முன்புற பகுதியில் கருப்பு மற்றும் வெள்ளை செதில்களுக்கு இடையிலான இடைநிலை தோலை உடையது. இது விரிவடையும்போது கோடிட்டதாகத் தோன்றும் .. கீழ் மேற்பரப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மஞ்சள் நிறத்தில் கோடுகள் காணப்படுகின்றன.
Zoological Name : Ahaetulla nasuta
இந்தியா மற்றும் இலங்கையிலும் காணப்படுகின்ற இந்த பாம்புகள் மலைகள் மற்றும் சமவெளிகளில் காணப்படுகிறது. கலப்பு , வறண்ட மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள் உட்பட பல்வேறு காடுகளில் வாழ்கின்றன. பாலைவனங்களில் காணப்படுவதில்லை.

Leave a Reply