FEATUREDLatestஅறிவியல்

பகலொளி சேமிப்பு நேரம் (Daylight Saving Time)

Spread the love

பகலொளி சேமிப்பு நேரம் (Daylight Saving Time)

பூமத்திய ரேகைக்குத் தள்ளி இருக்கும் நாடுகளில் கோடை காலத்தில் அதிகாலைச் சூரிய வெளிச்சம் சற்று முன்னரே வந்து விடும். அந்த நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் மாலையில் சீக்கிரமே உறங்கச் செல்வதன் மூலம் மின் மற்றும் இதர எரிபொருட்களைச் சேமிக்கும் வண்ணமாகவும் கடிகார நேரத்தை முன்னோக்கி நகர்த்திக் கொள்ளும் ஒரு முறையே இந்த பகலொளி சேமிப்பு நேரம் எனப்படும்.

கோடைகாலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்பட்ட கடிகாரம் குளிர் காலத்தில் அதே ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்திக் கொள்ளப்படும். இதன் மூலம் எந்தவித இடையூறும் இன்றி நேரம் சமன் செய்து கொள்ளப்படுகின்றது.

முன்னோக்கி நகர்த்தும் நாளன்று மட்டும் அன்றைக்கு ஒரு நாளுக்கு 23 மணி நேரம் என்று கணக்கிடப்பட்டுக் கொள்ளப்படும். பின்னோக்கி நகர்த்தும் நாளன்று அன்றைக்கு ஒரு நாளுக்கு 25 மணி நேரம் என்று கணக்கிடப்பட்டுக் கொள்ளப்படும்.

இது பெரும்பாலும் வார இறுதியில் நள்ளிரவு தாண்டிய பின்னரே மேற்கொள்ளப்படுவதால், அன்றாடப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுவதில்லை.

இந்த முறை George Vernon Hudson என்பவரால் 1895ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. 1916 ஏப்ரல் 30ம் தேதி ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளில் இது முதன் முதலாக செயல்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில் இதனை கோடை நேரம் (Summer Time) என்றழைப்பார்கள்.

அமெரிக்க முறைப்படி வசந்த கால வார இறுதி ஒன்றில் நள்ளிரவு தாண்டிய பின் கடிகார நேரம் 1:59 ஆன பின், அது 3:00 மணி என்றாகி விடும். அன்றைக்கு அந்த நாள் 23 மணி நேரம் என்று கணக்கில் கொள்ளப்படும்.

பின்னர் இலையுதிர் காலத்தில் நள்ளிரவு தாண்டிய பின் கடிகார நேரம் 2:59 ஆன பின் அது 2:00 மணி என்றே ஆகிவிடும். அன்றைக்கு அந்த நாள் 25 மணி நேரம் என்று கணக்கில் கொள்ளப்படும்.

பெஞ்சமின் ஃப்ராங்ளின் தன் கட்டுரை ஒன்றில் இது குறித்து முன்னரே தெரிவித்திருந்தாலும், அது சற்று நகைச்சுவை போன்று தொனித்ததால் மக்கள் சிரித்து விட்டு விட்டு விட்டார்கள்.

“This event has given rise in my mind to several serious and important reflections. I considered that, if I had not been awakened so early in the morning, I should have slept six hours longer by the light of the sun, and in exchange have lived six hours the following night by candle-light; and, the latter being a much more expensive light than the former, my love of economy induced me to muster up what little arithmetic I was master of, and to make some calculations, which I shall give you, after observing that utility is, in my opinion the test of value in matters of invention, and that a discovery which can be applied to no use, or is not good for something, is good for nothing.”

அவருடைய முழு கட்டுரையை இந்த உரலியைச் சொடுக்கிப் பாருங்கள்
http://www.webexhibits.org/daylightsaving/franklin3.html

பாபு

Leave a Reply