FEATUREDHealthSocialmedia

நீரிழிவே என்னை நெருங்காதே

Spread the love

*நீரிழிவே என்னை நெருங்காதே*
*தொடர் -3*
*XXL தலைமுறை

*குண்டாக இருப்பதனால் நிறைய சாப்பிடுகிறார்களா? இல்லை நிறையச் சாப்பிட்டு அதனால் குண்டாகுகிறார்களா? என்று கேட்டீர்கள் இல்லையா? சரி, வீட்டில் இரும்பு ஜன்னல் கம்பி, கைபிடி துருப்புச் பிடிச்சிருப்பதை பார்த்து இருக்கீங்களா?*

*பார்த்திருக்கிறேன் டாக்டர்’ திருவல்லிக்கேணியில் ‘எவர்சில்வர்’ பாத்திரம்கூடத் துருப்பிடிக்கும்*

*ஓ, அப்படியா அதை கவுனிச்சிங்கன்னா, உடனே துருப்பிடிக்காது கொஞ்ச நாள் ஆகும்,*

*ஆமாம் துருப்பிடிக்க கொஞ்சநாள் ஏன்?, சில மாதங்கள் கூட ஆகு‌ம். தொடர்ந்து ஈரப்பதம் இருந்து கொண்டே இருந்தால் தான் படிப்படியாக துருப்பிடிக்கும்,*

*எக்ஸாட்லி. துருப்பிடிப்பதற்கு ஈரப்பதம், உலோகத்தின தன்மை என்று நிறைய விஷயங்கள் இருக்கு. உடல் பருமனும் அதே மாதிரிதான். யாரையாவது குண்டாக்க வேண்டும் என்றால் சுலபமான வழி இருக்கு தெரியுமா?’*

*தெரியாதே*

*தொடர்ந்து இன்சுலின் எடுத்துக் கொள்ளச் சொல்லனும். சிம்பிள்… நீங்க என்னதான் மன உறுதியோட, சாப்பாட்டைக் கட்டுப்படுத்தி, உடற்பயிற்சி செஞ்சாலும் நீங்க குண்டாவது நிச்சயம்*

*அய்யோ, ஏன் டாக்டர்?’*

*இன்சுலின் ஒரு ஹார்மோன். அதனால முதல்ல ஹார்மோன் எப்படி வேலை செய்யும்னு தெரிஞ்சுக்கோங்க. ஹார்மோன் என்பவை மூலக்கூறுகள். (molecules), நம் உடம்புல இருக்கும் செல்களுக்கு செய்தி அனுப்புகிறது !*

*ரொம்ப டெக்னிக்கலா இருக்கே…*

*சிம்பிள். நீங்க ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்ட சர்க்கரை உங்க ரத்தத்தில் கலக்கிறது. உடனே உங்க உடலில் இன்சுலின் சுரக்க செய்தி அனுப்புகிறது. ஏன் தெரியுமா?*

*நம் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை எனர்ஜியாக, சக்தியாக உபயோகிக்க…,* ‘

*ஆமாம். சாப்பிட்டதும் என்ன நடக்கிறது ? நம் வயிறு, சிறுகுடலில் உடைக்கப்படுகிறது. சாப்பாட்டை மூன்று வகையாக பிரிக்கலாம்,*

*1.கார்போஹைட்ரேட் அதாவது மாவுச்சத்து.*

*2.புரோட்டின் என்னும் புரதம்.*

*3.ஃபாட் என்னும் கொழுப்பு,*

*புரதங்கள் ‘அமினோ’ அமிலமாக உடைக்கப்படுகிறது,*

*கார்போஹைட்ரேட் என்ன ஆகிறது ?*

*சொல்றேன்…. சர்க்கரை, கார்போஹைட்ரேட்ஸ் இரண்டும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கும். கிட்டத்தட்ட நம் உடலில் இருக்கும் எல்லா செல்களும் இந்த குளுக்கோஸை உபயோகப்படுத்திக்கும். குளுக்கோஸ் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் போது, இன்கிரிட்டின்’ (incretin) என்ற இன்னொரு ஹார்மோன் சுரக்கும்.*

*இது எதுக்கு?*

*இன்கிரிட்டின் ரத்தத்தில் கலந்து, கணையத்தை (Pancras) அடைந்து. பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை சுரக்கச்செய்யத்தான்.*

*ஆச்சரியமா இருக்கே,*

*இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி. நம் உடம்புல எவ்வளவு இரத்தம் இருக்கு ?*

*சுமார் ஐந்து லிட்டர் ?*

*சரி, ஐந்து லிட்டர் ரத்தத்துல எவ்வளவு சர்க்கரை இருக்கலாம் தெரியுமா?*

*தெரியலையே..*

*ஒரு டீ ஸ்பூன் அளவு தான். அதாவது நாலு கிராம்*

*அதுக்கு மேல இருந்தா என்ன ஆகும் ?*

*அதிகமாக இருந்தா கெடுதல். முன்பு சொன்ன 3T – ‘Excess sugar is Toxic’ அந்த அதிகமான சர்க்கரையைக் குறைக்கத்தான் இன்சுலின் சுரக்குது*

*ஆமாம், சர்க்கரை, கார்ப் இரண்டுமே உடலுக்குள் போனால் குளுக்கோஸ் தான்.*

*குளுக்கோஸ் என்ன ஆகும் ?”*

*நம் உடலுக்குத் தேவையான சக்தியா பயன்படுது. எக்ஸ்ட்ராவா இருப்பது கிளைகோஜெனாக(சேமிக்கப்படும் சர்க்கரையின் வடிவம்)சேமிக்கப்படுது.*

*இது எங்கே நடக்கிறது*

*கல்லீரல் (Liver) மற்றும் தசைகளில் (muscle).ஆனா அங்கே அதிகம் சேமிக்க முடியாது, பலூன் மாதிரி ரொம்ப முடியாது*

*மேலும் அதிகப்படியா இருந்தா?*

*உங்களுக்கு நீரிழிவு என்று அர்த்தம்.நீங்க எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகள் அல்லது இன்சுலின் அதிக இன்சுலினை சுரக்கச் செய்கிறது. அந்த எக்ஸ்ட்ரா சர்க்கரையைக் கொழுப்பா மாத்துது. அதனால் நீங்க குண்டாகறீங்க*

*அடக் கடவுளே*

*நம் செல்லுக்குள் குளுக்கோஸ் எப்படி போகுதுன்னு சொல்றேன்,*

*சொல்லுங்க*

*செல்’ லை ஒரு ரூம் போல கற்பனை பண்ணிக்கோங்க செல் சுவரில் ‘இன்சுலின் ரிசெப்டர்’ (insulin receptor) என்னும் பூட்டு உள்ளது. பூட்டி இருக்கும் அந்த ரூமை திறக்கும் மந்திரச்சாவி தான் இன்சுலின். அந்த பூட்டைத் திறந்து குளுக்கோஸை செல்லுக்குள் நுழைக்க வேண்டும். அது தான் உடலுக்கு சக்தியாக மாறுகிறது. உங்களை நடக்க, ஓட, பேச, யோசிக்க, கணக்கு போட வாட்ஸ் ஆப் செய்ய வைக்குது… இப்ப ஒரு மூணாங் கிளாஸ் கணக்கு.*

*’ கேளுங்க’*

*நீங்க சாப்பிட்ட உணவுல இருபது குளுக்கோஸ் மூலக்கூறு இருக்குன்னு வெச்சுப்போம்.அதிலிருந்து பத்து செல்களுக்கு இரண்டு குளுக்கோஸ் அனுப்பணும்.ஒரு இன்சுலின் சாவி இரண்டு குளுக்கோஸை அனுப்ப முடியும் என்று வைத்துக் கொண்டால் நம் உடல் எவ்வளவு சாவி தயாரிக்க வேண்டும்’*

*பத்து’*

*ஆமாம்.சாவி சரியா வேலை செய்யலேனா? அதுதான் பிரச்சினை. பத்து சாவியால பத்து குளுக்கோஸை தான் உள்ளே அனுப்ப முடியுதுன்னு வெச்சுக்கோங்க. அப்ப மீதம் இருக்கும் பத்து குளுக்கோஸை எப்படி அனுப்புவது?’*

*மேலும் பத்து சாவி தயாரிக்கணும்’*

*ஆமாம். இங்கே சாவி தான் இன்சுலின். மேலும் மேலும் சாவி ஜாஸ்தியாகி பூட்டை திறந்துகொண்டே இருந்தால் பூட்டு ரிப்பேராகி மேலும் மேலும் இன்சுலின் சுரந்து அதுவே இன்சுலின் எதிர்ப்புக்கு காரணமாகிறது.*

*அது ஏன் டாக்டர்?’*

*போனவாரம் யாத்திரை போயிட்டு வந்தீங்க. அங்கே குழந்தைகளும் வந்தாங்களா?”லெப்டினா?’*

*1890 ல் இதை கண்டு பிடிச்சாங்க. சின்ன பையன் ஒருத்தன் திடீர்னு குண்டானான் என்னன்னு சோதிச்சு பார்க்கும் போது மூளையின் ஹைபோதாலமஸ்(hypothalamus) என்ற பகுதியில் சேதம். அதனால் ஒபிசிட்டி, ஹார்மோன் கோளாறுனானு கண்டுபிடிச்சாங்க ஹைபோதாலமஸ் பகுதியில் இருக்கும் நியூட்ரான்களுக்கும் நம் உடல் எடைக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குன்னு யூகிச்சாங்க.*

*அப்பதான் லெப்டின் கண்டுபிடிச்சாங்களா?*

*இல்லை சரியாக சொல்லனும்னா 1994ல் தான் லெப்டீனை கண்டுபிடிச்சாங்க. லெப்டின் என்றால் கிரேக்க மொழியில் ஒல்லி. லெப்டின் கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்து உடலுக்கு ஒரு சிக்னல் கிடைக்குது.*

*என்ன சிக்னல்?’*

*போதும் இதுக்கு மேல சாப்டாதெ என்று ! ஒரு கால் கிலோ மைசூர்பாகை சின்னப்பையனிடம் கொடுத்தால் ஒண்ணுமில்லை ரெண்டுக்கும் மேல் சாப்பிட மாட்டான். திகட்டிவிடும். ஆனால் நீரிழிவு உள்ளவர், இராத்திரியில் யாருக்கும் தெரியாம ஒன்றில் ஆரம்பித்து ஒன்றை மட்டும் மீத்துவார்,*

*ஆமாம் டாக்டர் நான்கூட முன்பு…..*

*இது பிரச்சினை மட்டும் அல்ல, பலருக்கும், உங்க மூளையின் ஹைப்போதாலமஸ் (hypothalamus) சிக்னல் வேலை செய்யவில்லை! அதனால் சாப்பிட்டு கொண்டே இருப்போம். மூக்கு வழியாக வெளியே வரும் வரை,*

*ஆனால் ஏன் லெப்டின் வேலை செய்யவில்லை ?*

*அதிக இன்சுலின் தான் !*

*விளக்க முடியுமா டாக்டர்? ‘*

*அதிக இன்சுலின் லெப்டின் ஓட்டத்தை தடை செய்யுது.’ ‘சாப்பிட்டது போதும் ‘என்ற சிக்னல் மூளைக்கு எட்டாது, இதனால் அதிக லெப்டின் உற்பத்தி ஆகும். மேலும் மேலும் அதிக லெப்டின் உற்பத்தி ஆனால்? இப்ப உங்களுக்கே தெரிந்திருக்கும். அடுத்து என்ன நடக்கும் ?’*

*’லெப்டின் ரெஸிடன்ஸ்.*

*சரியா சொன்னீங்க, மூளையில் இன்னொரு பகுதியும் இருக்கு நியூக்கிளியஸ் அகும்பென்ஸ் (nucleus accumbens). இங்கே தான் நமக்கு திருப்தி, இன்பம் எல்லாம் ஏற்படுது It’s our reward center ! ஒரு மைசூர் பாகு சாப்பிட்ட பின் ஏற்படும் திருப்தி, ஆனந்தம் ‘feel good’ என்பார்கள், இங்க தான் நடக்குது லெப்டின் வேலை செய்யாத போது ஒரே மைசூர் பாக் ஆனந்தத்தை கொடுக்காமல், தொடர்ந்து டப்பா காலியாகும் வரை சாப்பிட்டு கொண்டே இருக்க வைக்கிறது,*

*குடித்து கொண்டே இருக்கும் குடிகாரன் தான் டாக்டர் ?*

*ஆமாம், அதிக இன்சுலினால் லெப்டின் வேலை தடைபட்டு மேலும் உங்களுக்கு பசிக்கிறது. அதிகம் சாப்பிட்டு இன்னும் அதிகம் இன்சுலின் சுரக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு கூடுகிறது. அதை சரிசெய்ய மேலும் இன்சுலின் எடுத்து கொள்கிறிர்கள். மேலும் மேலும் சாப்பிட்டு, ‘மேலும் கொழுப்பை சேகரித்து குண்டாகிறிர்கள். முதல கேள்விக்கு பதில் “We do not get fat because we overeat. We overeat because we get fat !’ என்கிறார் Gary Taubes.*

*தலை சுற்றுகிறது டாக்டர். சர்க்கரையை விட இன்சுலின் தான் பெரிய பிரச்சினை போல,*

*ஆமாம். ஆரம்பத்தில் அதிக ஈரப்பதம் இருந்து கொண்டே இருந்தால் துருப்பிடிப்பது போலத்தான், அதிக இன்சுலின் இருந்து கொண்டே இருந்தால் இன்சுலின் எதிர்ப்பு உண்டாகி, இதயம் கிட்னி, கண், காது என்று எல்லாம் ரிப்பேராகிறது. அதனால் தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு எல்லா உறுப்புக்களும் டேமேஜ் ஆகிறது. இதைப்பற்றி டாக்டர் ஜோசப் கிராப்ட் (Dr Joseph kraft), 1976 ல் ஓர் சுவாரஸ்யமான ஆய்வு செஞ்சார்.*

*மேலும் இத்தொடரை நாளை பார்க்கலாம்.*