நிலம் எவ்வளவு முக்கியமானது

Spread the love

#நிலம் எவ்வளவு முக்கியமானது.

பொருளாதாரம் பெருக்க…
ஜாதி ஆதிக்கம் வளர்க்க…
கெளரவம் என்னும் கர்வத்தோடு இருக்க…

நிலம் எவ்வளவு முக்கியமானது என்று ஆதிக்க கூட்டம் அறிந்தே வைத்திருக்கிறது.

அந்த நிலம் ஒடுக்கப்பட்டவனிடம் இருந்தால் எப்படி பொறுத்துக் கொள்ளும்.

தன்னை சார்ந்திராமல் சுயமாக அவன் வாழ்வதை அது எப்படி தாங்கிக் கொள்ளும்.

#அசுரன் படம் இதைத்தான் பேசுகிறது.

ஒடுக்கப்பட்டவன் சாப்பாடு தட்டை கழுவி ஊற்றும் நிலத்தில் இருந்து முளைக்கும் மிளகாய் செடியில் காய்க்கும் ஒரு மிளகாய் கூட அவனுக்கு உரிமை இல்லாத நிலைமைதான் 1800களில் இருந்தது.

இந்த வரிகளை குறிப்பிட்டு அன்றைய செங்கல்பட்டு கலெக்டர் ட்ரமன்கிரே எழுதிய கடிதத்தின் விளைவாக பிரிட்டிஷ் அரசால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 12.50 லட்சம் ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது.

Dc land என்ற அந்த 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களும் ஒடுக்கப்பட்டவர்கள் இடமிருந்து காலப்போக்கில் உயர் சாதிகளால் திருடப்பட்டது.

இந்த பஞ்சமி நிலம் பற்றி
இந்த #அசுரன் படம் பேசுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பு அணிந்து செல்ல முடியாத அவலம் 1960களில் தமிழகத்தில் இருந்ததை இந்தப் படம் பேசுகிறது

அந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக செந்துண்டு அணிந்த ஒரு தோழர் குரல் கொடுப்பதை இந்த #அசுரன் படம் பேசுகிறது.

ஆதிக்கத்தை ஒடுக்குமுறையை எதிர்த்து கேள்வி கேட்டக முடியாவிட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளாத… நியாயத்தை பேசுகிற உயர் சாதி மக்கள்
இருப்பதையும் இந்த படம் பதிவு செய்கிறது.

கதை நடக்கும் காலம் என்பது 80 களிலும் அதற்கு முன்பும் ஆக காட்டப்படுகிறது என்றாலும் இன்னமும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் இந்தப் படம் முக்கியத்துவமானதாகவே இருக்கிறது.

#படி…

நம்மகிட்ட இருந்து நிலத்தை அவங்கனால புடுங்க முடியும்…
ரூவா இருந்தா புடுங்க முடியும்.
ஆனா…
படிப்பு இருந்தா அவங்களால
புடுங்க முடியாது.

#படி…
படிச்சு அதிகாரத்துக்கு வா…
அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறம்
அவங்க செஞ்ச மாறி நீ செய்யாதே.

என்ற வசனம் படத்துக்கு மட்டும் கிளைமாக்ஸ் அல்ல .

நீடிக்கும் இந்த பிரச்சினைக்கும் அது தான் கிளைமாக்ஸ்.

தனுஷ் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சமூகத்தில் இன்று விவாதிக்க வேண்டிய ஒரு பொருளை படமாக்கியிருக்கிற வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.

E.Raghukumar, Tirupur

Leave a Reply